Tag: Sivakarthikeyan Birthday

  • actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”

    actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”


    தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
    சிவகார்த்திகேயன்
    கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது.
    மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடியுள்ளார். இப்படியான நிலையில் தனது பிறந்த நாளை மகிழ்ச்சிகரமான நிகழ்வாக மாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

    Thank you and love you all ❤️ pic.twitter.com/Usnl2UYTn6
    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2024
    இந்த அறிக்கையில் அவர் “
    அன்புடையீர்,
    எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு, அனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம்) இருந்து  வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. “அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் “அமரன்” பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதே நாளில், எங்கள் “சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்” தயாரிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக  திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் “SK 23” பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்றும் அன்புடன்,சிவகார்த்திகேயன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Sivakarthikeyan celebrated his birthday with SK23 crew pictures inside amaran poster released

    Sivakarthikeyan celebrated his birthday with SK23 crew pictures inside amaran poster released


    ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,  கடந்த பொங்கலன்று அயலான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக அயலான் அமைந்தது. இதுவரை காமெடி, காதல், ஆக்‌ஷன், கமர்ஷியல் படங்கள் கொடுத்து ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன் சயின்ஸ் பிக்‌ஷன் கதை மூலம் புதிய அவதாரம் எடுத்தார். 
    அயலான் 2 பிராம்மாண்டமாக உருவாக்க திட்டம்
    அயலான் திரைப்படம் தெலுங்கில் வெளியான நிலையில் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றபோது,  நிகழ்ச்சியில் அயலான் வெற்றி பற்றியும், அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சிவகார்த்திகேயன் பேசி இருந்தார். அவர் பேசியதாவது, அயலான் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் வெற்றியும் தான் அயலான் 2 படம் உருவாக காரணம். அயலான் படத்தின் வெற்றி தான் அயலான் 2 படத்தை உருவாக்க நம்பிக்கை கொடுத்தது என்றும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகப்பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் கூறினார். 

    சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்த சிறிது காலத்திலேயே தனக்கென தனி இடத்தைப் பிடித்ததுடன் அதைத் தக்க வைத்தும் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  இதன் பிறகு அவரின் நடிப்பில் வெளியான மனங்கொத்திப்பறவையும் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்தது. 
    சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்
    எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் உருவெடுத்து உள்ளார் என்றால் அது மிகை ஆகாது. அயலான் வெற்றியைத் தொடர்ந்து எஸ்கே23 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் இன்று படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
    அமரன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு
    சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் அமரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. 
     

    Happy Birthday @Siva_Kartikeyan! Your special day is celebrated across borders and cherished in all our hearts. #Amaran #HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamyA Film by @Rajkumar_KP@ikamalhaasan #Mahendran @gvprakash @Sai_Pallavi92… pic.twitter.com/M5XlNJPFXY
    — Raaj Kamal Films International (@RKFI) February 17, 2024

    மேலும் படிக்க 
    Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

    மேலும் காண

    Source link

  • SK21 Title Official Announcement Sivakarthikeyan Rajkumar Periyasamy Movie Named Amaran Watch Title Teaser

    SK21 Title Official Announcement Sivakarthikeyan Rajkumar Periyasamy Movie Named Amaran Watch Title Teaser


    சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன்   என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
    எஸ்.கே 21
    மாவீரன் , அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் எஸ்.கே 21. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு  அமரன் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.
    அமரன்
    கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படம்பிடிக்கப் பட்டன. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு கெட் அப் களில் நடித்துள்ளார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் இருக்கிறார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் இப்படத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் கெளரவத் தொற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
    மாஸ் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்

    “fortitudo et honor”, DRIDHTA AUR VIRTA” loading…#Amaran ▶️ https://t.co/YbpCjWZkJp#HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamy A Film by @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh… pic.twitter.com/vhy4GxWNoc
    — Raaj Kamal Films International (@RKFI) February 16, 2024

    சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற காமெடியான படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. இதனையடுத்து மாஸான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் போது அவர் மேல் பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இவருக்கு எல்லாம் காமெடி சப்ஜெக்ட் தான் செட் ஆகும் என்று பலர் கூறினார்கள். சிவகார்த்தியேன் நடித்த காக்கி சட்டை மாதிரியானப் படங்களில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக பார்க்க முடியவில்லை என்கிற கருத்து பரவலானது.
    இதனைத் தொடர்ந்து முழுவதுமான ஆக்‌ஷன் படங்களாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து அதன் மூலம் தனது கரியரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் சிவகார்த்திகேயன், வேலைக்காரன், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை , டான், மாவீரன் , அயலான்  மாதிரியான படங்கள் அவரை குடும்ப ரசிகர்களுக்கான நடிகராக மாற்றியுள்ளது. தற்போது இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் அவர் இறங்கியுள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மாஸான இமேஜை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
     

    மேலும் காண

    Source link