Maharashtra: மகாராஷ்டிராவில் ரூட்டை மாற்றும் பாஜக! டம்மியாகும் ஏக்நாத் ஷிண்டே? அஜித் பவார் ஆவேசம்
<p><strong>Maharashtra:</strong> மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறுவேன் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் எச்சரித்துள்ளார்.</p> <h2><strong>மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி:</strong></h2> <p>மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக உடன் கூட்டணி அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரான நிலையில், சிவசேனா கட்சியும் அவருக்கே சேரும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம்…
