Tag: shaitaan trailer

  • shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral
    shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral


    நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவகன் நடித்துள்ள ஷைத்தான் (Shaitaan) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
    இயக்குநர் விகாஸ் பாகல் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன் – ஜோதிகா மகளாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார்.
    ‘ஷைத்தான்’ எனும் பெயருக்கேற்றபடி வசியம், மாந்திரீகம், அமானுஷ்யம் என இப்படத்தின் ட்ரெய்லரில் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ஷைத்தான் படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில், மொபைல் சார்ஜ் போடுவதற்காக கேட்டு 15 நிமிடங்கள் தருமாறு அஜய் தேவ்கன் – ஜோதிகா தம்பதியின் வீட்டுக்கு மாதவன் வருகிறார். அதன் பின் இவர்களது மகளை வசியம் செய்யும் மாதவன், மாந்திரீகம், அமானுஷ்யம் என பரபரப்பைக் கிளப்பும் வகையில் படத்தின் ட்ரெய்லர் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

    முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில் பில்லி சூனிய உருவ பொம்மைகள் இடம்பெற்று, மாதவன் குரலும் சேர்ந்து பயமுறுத்தும் வகையில் அமைந்திருந்தன. “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்ற கேள்வியுடன் பில்லி சூனிய பொம்மையுடன் டீசரிலேயே தன் குரலால் மாதவன் பயமுறுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் அதனைவிட இரண்டு மடங்கு பயமுறுத்தி திகில் கிளப்புகிறார்.
    ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் சைத்தானாக வெரைட்டி காண்பித்துள்ள மாதவனின் நடிப்பு ட்ரெய்லரில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதேபோல் சூர்யாவுடனான திருமணத்துக்குப் பின் பிள்ளைகளை கவனித்துக் கொண்டு செட்டிலான ஜோதிகா, கோலிவுட்டில் கம்பேக் கொடுத்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
    இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஷைத்தான் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் தருகிறார். ஷைத்தான் திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    ALSO READ | Jothimani: விஜய் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்! கலங்குகிறதா தமிழக காங்கிரஸ்! பேசு பொருளாகும் ஜோதிமணி பேச்சு!

    மேலும் காண

    Source link