Tag: seshu passes away

  • Comedian actor Seshu Passes Away his video viral in social media network | Seshu : ”சாப்பாட்டுக்கு கூட வழியில்ல” லொள்ளு சபா சேஷுவின் கடைசி பேச்சு

    Comedian actor Seshu Passes Away his video viral in social media network | Seshu : ”சாப்பாட்டுக்கு கூட வழியில்ல” லொள்ளு சபா சேஷுவின் கடைசி பேச்சு


    Seshu: பிரபல நகைக்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    காலமானார் சேஷு:
    விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ.  இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.
    2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி  என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார்.  குறிப்பாக, அண்மையில் வெளியான ‘வடக்குப்படி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 
    இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
    சேஷு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி:
    இந்த நிலையில், கடைசியாக நடிகர் சேஷு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியல் இவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, “10 ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளேன். கஷ்டப்படுகிறவர்களுக்கு  உதவி செய்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி, இதேபோல கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவார்கள்.
    எனக்கு கஷ்டப்படுபவர்களோட வலி தெரியும்.  நான் அதையெல்லாம் அனுபவித்தேன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கேன். என் வாழ்க்கையில் எல்லாம் கஷ்டங்களையும் சந்தித்தேன்” என்று உருக்கமாக பேசி உள்ளார்.  மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக சேஷு வீட்டில் இருந்த ரூ.2 மதிப்புள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
    தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஏரியாவில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் உதவியுள்ளதாவும் இந்த நிகழ்ச்சியல் நினைவூட்டியிருந்தார்.  திரையிலும், திரைக்குப் பின்னாலும் நகைச்சுவை கலைஞராக, நல்ல மனிதராக வலம் வந்தார் சேஷு. பல ஆண்டுகளாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த சேஷு, அண்மை காலத்தில் தான் இவருக்கு நகைக்சுவை நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது. இப்படியான சூழலில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் படிக்க
    Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5! இந்த முறை கோமாளிகள் இவர்கள்தானா? வெளியான அசத்தல் ப்ரோமோ!

    மேலும் காண

    Source link

  • Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…

    Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…


    பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
    சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து அவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் 2002 -ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.சந்தானம் நடித்த  டிக்கிலோனா, ஏ1, பாரிஸ் ஜெயராஜ்,உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வேலாயுதம், உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.  
    இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள சேஷூ, கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவினார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நிகழ்ச்சியில் நடிகர்கள் சேஷூ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சுவாமிநாதன், சேஷூ பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. 
    சேஷூ கடந்த மார்ச் 15-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவரின் ஏராளமான ரசிகர்கள் இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். சேஷூ விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் நடிகர் சேஷூ இன்று காலமானார். 
    மேலும் படிக்க 
    Goat Update: “அநியாயம் பண்ணாதீங்க அப்டேட் வரும்” அன்புத் தொல்லை செய்யும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!
    Actor Kishore: “தலையில் குடுமி இருந்தால் மட்டும் அவர் நல்லவன் இல்லை” டி.எம் கிருஷ்ணாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

    மேலும் காண

    Source link

  • Comedian actor Seshu Passes Away famous comedy viral a1 movie lolu sabha comedy

    Comedian actor Seshu Passes Away famous comedy viral a1 movie lolu sabha comedy


    Seshu Passes Away: தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சேஷு மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    காலமானார் சேஷு:
    விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ.  இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.
      2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி  என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார்.  குறிப்பாக, அண்மையில் வெளியான ‘வடக்குப்படி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 
    இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த சேஷு:
    இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இதே நேரத்தில், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த காமெடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  
    அதாவது, லொல்ளு சபா நிகழ்ச்சியில் வெவ்வேறு காமெடி கதாபாத்திரத்தில் சேஷு நடித்திருந்தால், ரசிகர்களை இன்னமும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பது கிழவி வேடத்தில் நடித்தது தான். அதாவது, பாரதி ராஜாவின் ‘மண்வாசனை’ திரைப்படத்தில் காந்திமதி நடித்த கிழவி வேடத்தில் நடித்து, அவரைப்போல கலாய்த்து தள்ளியிருப்பார்.
    கிழவி வேடத்தில் நடித்த சேஷூ, அவரைப்போல நடித்து பழமொழி கூறி பிரபலம் அடைந்தார். அதிலும், ”மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய், பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன? என்றும் குடிச்சு போட்ட பாட்டிலை தூக்கி எடைக்கிப் போட்டானாம், எடைக்கி போட்ட பாட்டிலை தூக்கி குடிச்சி போட்டானாம்…அந்த மாதிரியல இருக்கு” என்று இவர் செய்த அலப்பறைகள் பல ஆண்டுகளாக நினைவுகூர வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. மேலும், பல இடங்களில் மீம் மெட்டிரியலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
    இதோடு, சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவரின் காமெடி இன்று வரை பல நேரங்களில் பேசப்பட்டும், மீம் மெட்டிரியலாகவும் உள்ளது. அதாவது, “அச்சச்சோ..அவரா? பயங்கரமானவராச்சே…” என்று இவரது தனித்துவமான மாடுலேஷனில் அசத்தி இருப்பார்.  திரையில் சிறிய நேரம் என்றாலும், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நேர்த்தியாகவும், தனக்கே உரிய மாடுலேஷனில் கச்சிதமாக நடித்து ரசிர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
    பல ஆண்டுகளாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த சேஷு, அண்மை காலத்தில் தான் இவருக்கு நகைக்சுவை நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது. இப்படியான சூழலில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • cinema headlines today march 26th tamil cinema news today rip seshu thug life kamal simbu | Cinema Headlines: தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்த சிம்பு; காலமான காமெடி நடிகர் சேஷூ

    cinema headlines today march 26th tamil cinema news today rip seshu thug life kamal simbu | Cinema Headlines: தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்த சிம்பு; காலமான காமெடி நடிகர் சேஷூ



    Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…

    பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

    Shruti Hassan: உங்களுக்கு கேக்க வேற கேள்வியே இல்லையா.. திருமணத்தைப் பற்றி கேட்டதும் முகம் மாறிய ஷ்ருதிஹாசன்

    நிகழ்ச்சியில் நடிகை ஷ்ருதி ஹாசனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’ என்பதுதான். பாடலை பாடி அதை இயக்கவும் செய்து அதுபற்றிய கேள்விகளை கேட்க ஆர்வமாக காத்திருந்த ஷ்ருதி ஹாசன் இந்த கேள்வியால் கோபத்திற்கு உச்சத்திற்கு சென்றதை அவரது முகத்தை பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் நாகரிகம் கருதி அவர் தனது முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு “ சீரியஸாவா..என்னுடைய முதல் கேள்வியே இதுதானா? என்னுடைய பாட்டைப் பற்றி கேட்பதற்கு வேறு எதுவும் இல்லையா?  என்றார். மேலும் படிக்க

    Suriya – Prithviraj: “வாழ்வில் ஒருமுறைதான் கிடைக்கும் வாய்ப்பு..” நடிகர் ப்ரித்விராஜை புகழ்ந்த சூர்யா!

    நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ப்ரித்விராஜ் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா “ உயிர்பிழைக்கும் போராட்டத்தின் கதையைச் சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

    Thug Life STR: வாவ்.. தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்த சிம்பு.. 2ஆம் முறை மணிரத்னத்துடன் கூட்டணி?

    கமலின் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தில் நடிக்க இருந்தார் சிலம்பரசன். தற்போது தக் லைஃப் படத்தில் அவர் இணைந்துள்ளதாகவும், இதனால் எஸ்.டி.ஆர் 48 படம் இன்னும் சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க

    Kanguva: என்னது கங்குவா டீசரில் வந்தது நிஜப் புலியா? சைலண்டாக சம்பவம் செய்த கங்குவா கேங்!

    கங்குவா டீசரில் சூர்யா புலியை எதிர்கொள்ளும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியில் கிராஃபிக்ஸ் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. இந்த காட்சி முழுக்க கிராஃபிக்ஸ் இல்லை என்றும் படத்திற்காக நிஜப் புலி ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

    மேலும் காண

    Source link