Rihanna: கன்னியாஸ்திரி உடையில் கவர்ச்சி; சர்ச்சைக்குள்ளான அம்பானி மகன் விழாவில் பாடல் பாடிய ரிஹானா
<p>உலக அளவில் பிரபலமான பாப் பாடகி ரிஹானாவின், சமீபத்தில் வெளியான இதழின் அட்டைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.</p> <h2><strong>ரிஹானா அட்டைப்படம்:</strong></h2> <p>சர்வதேச பாடகியான ரிஹானா பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பக்கூடிய பாடகி. இவர் சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்று பாடல் பாடினார். அவர் நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பேச பட்டது</p> <p>ரிஹானா தனது சமீபத்திய இதழ் அட்டைப்படத்தின் புகைப்படமானது, பெரும் கவனத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை மையமாக…
