Tag: pongal special train

• Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN

Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதனை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த வகையில் சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் 10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12048), மயிலாடுதுறை- கோவை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12083) ஆகியவற்றில் நாளை (14ம் தேதி), 17 ஆம் தேதிகளில் ஒரு சேர்கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதே போல், ஈரோடு-சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரசில் (22650) வரும் 16, 18 ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரசில் (22649) வரும் 17, 19 ஆம் தேதியும், கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616), மன்னார்குடி- கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) ஆகியவற்றில் இன்று (13ம் தேதி), 15, 17 ஆம் தேதியும் தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (22668) நாளை (14 ஆம் தேதி), 16 ஆம் தேதியும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரசில் (22667) இன்று (13 ஆம் தேதி), 15, 17 ஆம் தேதியும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243), கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ஆகியவற்றில் இன்று (13 ஆம் தேதி) ஒரு ஏசி சேர்கார் பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட்டு இணைக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொச்சு வேலிக்கு சேலம், ஈரோடு, கோவை வழியே பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, யஸ்வந்த்பூர்- கொச்சுவேலி பொங்கல் சிறப்பு ரயில் (06235), இன்று (13 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. யஸ்வந்த்பூரில் இன்றிரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பெங்களூரு, – பங்காருபேட்டை, குப்பம் வழியே சேலத்திற்கு நாளை (14 ஆம் தேதி) அதிகாலை 5.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு காலை 6.20 க்கும், திருப்பூருக்கு காலை 7.08 க்கும், கோவைக்கு காலை 8.12 க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொச்சுவேலி-யஸ்வந்த்பூர் பொங்கல் சிறப்பு ரயில் (06236) நாளை (14 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு வழியே கோவைக்கு அடுத்த நாள் (15 ஆம் தேதி) காலை 9.22க்கும், திருப்பூருக்கு காலை 10.08க்கும், ஈரோட்டிற்கு காலை 10.50க்கும் வந்து, சேலத்திற்கு காலை 11.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு குப்பம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியே யஸ்வந்த்பூருக்கு மாலை 4.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source link

• Special Train: பொங்களுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னும் ஏன் காத்திருக்கீங்க? சிறப்பு ரயில் விவரம் இதோ உங்களுக்காக..

Special Train: பொங்களுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னும் ஏன் காத்திருக்கீங்க? சிறப்பு ரயில் விவரம் இதோ உங்களுக்காக..

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி விரைவாக முடிந்துவிட்டது. அதேபோல், வரும் 12 முதல் 18-ஆம் தேதி வரை பெரும்பாலான  ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன. பேருந்துகளில் டிக்கெட் இல்லாத காரணத்தாலும் பண்டிகை நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற காரணத்தாலும் மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.

இதனால் தென்னக ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வகையில் கோவை முதல் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 16 ஆம் தேதி கோவையிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், அடுத்த நாள் காலை 5 மணியளவில் சென்னை தாம்பரத்திற்கு வரும். இந்த சிறப்பு ரயில் மீண்டும் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

அதேபோல் பொங்கல் பண்டிகை ஒட்டி பெங்களூருவில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 12 ஆம் தேதி, பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மீண்டும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு அன்று நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறது.

இதுமட்டுமின்றி, சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து 11 (இன்று), 13,16 ஆம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

வண்டி எண் (06003) தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி,  ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கில கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி வழியாக காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஜனவரி 12,14,17ஆம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க இன்றில் இருந்து முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source link

• Pongal Special Train: | Pongal Special Train:

Pongal Special Train: | Pongal Special Train:

Pongal Special Train: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்:
வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால், ஜனவரி 12ஆம் தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.  வழக்கமாக பண்டிகை நேரத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரதுது கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி விரைவாக முடிந்துவிட்டது. அதேபோல, வரும் 12 முதல் 18-ஆம் தேதி வரை பெரும்பாலான  ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன. ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
எந்தெந்த வழித்தடம்?
இந்த நிலையில், சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை, 13,16ஆம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
வண்டி எண் (06003) தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி,  ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கில கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி வழியாக காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 12,14,17ஆம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க இன்றில் இருந்து முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்:
அதேபோல, சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 14,16ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்கிறது.  தாம்பரத்தில் காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 15,17ஆம்  தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக் – எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம்

Source link