பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.

பொங்கல் படங்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே படமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் ரூ.8.7 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், 2வது நாளில் ரூ.6.75 கோடி வசூல் செய்ததாக sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலான்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கேர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அயலான்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விஷூவல்களுடன் வெளியாகியுள்ள அயலான் படம் குழந்தைகளை அதிகளவில் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.3.2 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.

மிஷன் சாப்டர் 1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மிஷன் சாப்டர் 1”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடு படமாகும். இந்த படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூல் செய்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 1கோடி வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “மெரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லரை மையப்படுத்திய இப்படம் இந்தி – தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சமும், 2வது நாளில் ரூ.31 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் குறைய என்ன காரணம்?

இப்படி பொங்கல் படங்கள் வசூல் குறைய என்ன காரணம் என தியேட்டர் தரப்பில் கேட்டபோது, ‘பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் நாளை பொங்கல் பண்டிகை முடியும் பட்சத்தில் தான் வசூல் அதிகரித்து அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளனர்.

Tag: Pongal movies

Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

Mission : Chapter 1 Movie Review Arun Vijay Nimisha Sajayan Amy Jackson Directed By Vijay
Mission : Chapter 1
Action/Mystery
இயக்குனர்: Vijay
கலைஞர்: Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan, Bharat Bopanna, Baby Iyalஇந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள படங்களில் அதிக புரோமோசன் இல்லாமல் வெளியாகியுள்ள படம் என்றால் அது நடிகர் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது.
படத்தின் கதையை எடுத்துக்கொண்டால் ஏதோ ஆஹா ஓஹோ கதையெல்லாம் கிடையாது. படத்தின் முதல் காட்சியே அமோகமாக உள்ளது. அதாவது ஆதிகாலத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிட்டார்கள் என சிறுவயதில் ஒருசில படங்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதேமாதிரிதான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர். இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும். இது இந்திய அரசுக்கு தெரியவே, உடனே தீவிரவாதிகள் தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் செல்கின்றனர்.
லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார். அருண் விஜய் தனது குழந்தையின் மருத்துவ தேவைக்காக லண்டன் செல்கின்றார். அங்கு அவரின் பர்ஸை திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்கின்றது. அப்போது காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் திவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகின்றது. அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டனரா இல்லையா? அருண் விஜய் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதா இல்லையா என்பது மீதி கதை.
மிகவும் ஃபிளாட்டான ஒன் லைன். அதனை ஆக்ஷன் காட்சிகளால் நிரப்பி ரசிகர்களை திருப்தி படுத்திவிடலாம் என படக்குழு நினைத்ததோ என்னவோ படத்தின் கதை ஒர்க்-அவுட்டே ஆகவில்லை. படம் முழுக்க வில்லன் கேமரா முன்பு நின்று கொண்டு பேசிக்கொண்டு உள்ளார். இறுதியாக ஒரு சண்டை செய்கின்றார் அதுவும் ரசிக்கும்படியாக இல்லை. எமி ஜாக்ஷன் படம் முழுக்க டயலாக் டெலிவரி மட்டும் செய்துகொண்டு உள்ளார். ஒரு காட்சியில் மட்டும் எமி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றார். படத்தில் இருக்கும் ஒரு சிறப்பான காட்சி என்றால் அது மிளகாய்ப்பொடி காட்சிதான். அருண் விஜயின் குழந்தை பேசும் செண்டிமெண்ட் வசனங்கள் கொஞ்சம் உருகவைக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள் என்றாலே அடித்து நொறுக்கும் அருண் விஜய் இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஆனால் அது கதைக்கும் ஒட்டவில்லை, ரசிகர்களிடமும் எடுபடவில்லை.
படத்தின் திரைக்கதை தரமாக இருக்கும்போது அதற்கு நியாயம் கற்பிக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்க்கும். ஆனால் இந்த படத்தின் திரைக்கதை ஒட்டாததால் சண்டைக்காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. பொங்கலை குறிவைத்து வெளியாகியுள்ள மிஷன் பொங்கல் வரைக்கும் தாக்குப்பிடிக்குமா? எனத் தெரியவில்லை. ஒருபடத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பாக நடிக்கும் அருண் விஜய் கதைத் தேர்வில் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் மிளிரலாம்.
On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?
Pongal Movies: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் புத்தாண்டு,பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு நாட்கள் வருவதால் முன்னணி நடிகர்கள் படங்களும் ஜனவரி மாதத்தை குறிவைப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 10 ஆம் தேதி இதுவரை பொங்கல் ரிலீசாக வெளியான படங்களின் நிலை என்ன என்பதை காணலாம்.
மிஸ்டர் பாரத்
1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்த படம் “மிஸ்டர் பாரத்”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார் என்றாலும் இருவரது இமேஜூக்கும் ஏற்ற வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
தூள்
2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம் 2வது முறையாக நடித்த படம் “தூள்”. இந்த படத்தில் ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே, சகுந்தலா, பசுபதி, பறவை முனியம்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த தூள் படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இப்படத்தில் தான் முதல்முறையாக கிளைமேக்ஸ் காட்சியில் பாடல் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறப் பாடகர் பரவை முனியம்மா பாடிய சிங்கம்போல நடந்து வரான் பாடல் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட்.
ஜில்லா
2014 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், நிவேதா தாமஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜில்லா’. இமான் இசையமைத்த இப்படம் படத்தின் அதீத நீளம் சுமாரான வெற்றியையே பெற்றது. இருந்தாலும் ஜில்லா படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது.
வீரம்
அதே 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித்குமார் முதல்முறையாக இணைந்த படம் “வீரம்”. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த வீரம் படத்தில் தமன்னா, பாலா, சந்தானம், நாசர், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
பேட்ட
2019 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் ரஜினி கூட்டணி அமைத்த படம் தான் “பேட்ட”. இந்த படத்தில் த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த பேட்ட படம் ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஸ்வாசம்
அதே 2019ல் சிறுத்தை சிவாவுடன் அஜித் 4வது முறையாக இணைந்த “விஸ்வாசம்” படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இப்படத்தில் நயன்தாரா, அனிகா சுரேந்தர், ஜெகபதி பாபு, விவேக், கோவை சரளா, ரோபா ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்த இப்படம் அஜித்துக்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் தேசிய விருது பெற்றிருந்தார்.