Tag: Pongal 2024 Movies

• Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan
Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan

Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 11 மணி: தர்பார் மதியம் 2 மணி: லத்தி மாலை 6.30 மணி: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்இரவு 10.15 மணி:  மிருதன்
சன் லைஃப்
காலை 11 மணி: தில்லானா மோகனாம்பாள் மதியம் 3 மணி: நவ ரத்தினம்
கே டிவி
காலை 7 மணி: சண்டைகாலை 10 மணி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்மதியம் 1 மணி: தலைவாமாலை 4 மணி: வேலையில்லா பட்டதாரி 2இரவு 7 மணி: மிஸ்டர் லோக்கல்இரவு 10.30 மணி: நானும் ரௌடி தான்
கலைஞர் டிவி
காலை 8 மணி: நான் மகான் அல்லகாலை 10 மணி: இறைவன்மதியம் 1.30 மணி: லவ் டுடே மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 2இரவு 10 மணி: சில்லுன்னு ஒரு காதல்
கலர்ஸ் தமிழ்
காலை 8மணி: செம திமிருகாலை 11.30 மணி: குருதி ஆட்டம் மதியம் 2.30 மணி: கேஜிஎஃப் சாப்டர் 1இரவு 9 மணி: குருதி ஆட்டம்
விஜய் டிவி
காலை 11.30 மணி: இறுகப்பற்றுமாலை 5.30 மணி: பிச்சைக்காரன் 2இரவு 9 மணி: குட் நைட்
ஜீ தமிழ் டிவி
மதியம் 12.30 மணி: வீரன்மாலை 4  மணி: பத்து தல
ஜெயா டிவி
மதியம் 1.30 மணி: உழவன் மகன்மாலை 6.30 மணி: வேலாயுதம்இரவு 10.30 மணி: உன்னைத் தேடி
ராஜ் டிவி
மதியம் 2 மணி: வன்மம்மாலை 5 மணி: செம போதை ஆகாதேஇரவு 9 மணி: இளமை

ஜீ திரை

காலை 6.30 மணி: ஜூங்காகாலை 9.30  மணி: சீறுமதியம் 12 மணி: தமிழரசன்மதியம் 3 மணி: காரிமாலை 6 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2இரவு 9.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்
முரசு டிவி
காலை 6 மணி: சஹாமதியம் 3 மணி: கோப்ராமாலை 6 மணி: சிலம்பாட்டம்இரவு 9.30 மணி: தனம்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: உங்களுக்காக ஒருவன் காலை 9 மணி: மாளிகைப்புரம் காலை 12 மணி: ஐபிசி 376மதியம் 3 மணி: கடாவர்மாலை 6 மணி: சர்க்கிள்இரவு 9.30 மணி: நெற்றிக் கண்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: சிவகாசி காலை 10 மணி: உழவன்மதியம் 1 மணி: எல்லைச் சாமிமாலை 4 மணி: கங்கா கௌரி இரவு 7 மணி: கோபுர தீபம்இரவு 10.30 மணி: தலைவன்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: தீர்ப்புகள் விற்கப்படும் மாலை 7.30 மணி: தமிழ் ராக்கர்ஸ்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: கல்யாண  சமையல் சாதம்  காலை 8 மணி: கஜினிகாந்த் மதியம் 11 மணி: மிஸ்டர்  மதியம் 2 மணி: வெப்பம் மாலை 4.30 மணி: மாய நிழல்இரவு 7 மணி: சூர்யா vs சூர்யாஇரவு 9.30 மணி: மந்திர புன்னகை
வசந்த் டிவி
இரவு 7.30 மணி: வீரபாண்டிய கட்டபொம்மன்
மெகா டிவி
மதியம் 1.30 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பாஇரவு 11 மணி: பார்த்திபன் கனவு
மெகா 24 டிவி
காலை 10 மணி: ராஜாவின் பார்வையிலேமதியம் 2.30 மணி: மைக்கேல் மதன காம ராஜன் மாலை 6 மணி: காரைக்கால் அம்மையார்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: மாணிக் காலை 10 மணி: திலகர் மதியம் 1.30 மணி: பிரம்மா டாட் காம்  மாலை 4.30 மணி:  அட்ரா மச்சான் விசிலுஇரவு 7.30 மணி: வஜ்ரம் இரவு 10.30 மணி: எட்டுத்திக்கும் மதயானை

Source link

• Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released
Pongal 2024 Special Thalapathy Vijay’s The Greatest Of All Time New Poster Released

நடிகர் விஜய் நடித்துள்ள “The Greatest of All Time” படத்தின் புது போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Meet #TheGOATsquadWish you all #TheGreatestOfAllTime Pongal ❤️#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @thisisysr @actorprashanth @PDdancing… pic.twitter.com/AiblZJNyw1
— AGS Entertainment (@Ags_production) January 15, 2024

பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் The Greatest of All Time படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்,  என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் அப்டேட்டாக படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு The Greatest Of All Time என பெயரிடப்பட்டிந்தது.
இதில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். கடந்தாண்டு  விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. மேலும் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். ஹாலிவுட் பாணியிலான மேக்கிங் இந்த படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தான் போஸ்டரும் வெளியாகி வருகிறது. மேலும் மகன் கேரக்டரில் நடிக்க தாடி, மீசை இல்லாமல் விஜய் இருக்கும் தோற்றத்தில் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். The Greatest of All Time படம் நடப்பு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir’s #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1
— AGS Entertainment (@Ags_production) October 24, 2023

இதனிடையெ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என நேற்றைய தினம் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Source link

• Today Movies In Tv Tamil January 15th Television Schedule Leo Thiruchitrambalam Mark Anotony Thunivu Paramporul

Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 11 மணி: திருச்சிற்றம்பலம் மதியம் 2 மணி: எதற்கும் துணிந்தவன்மாலை 6.30 மணி: லியோஇரவு 11 மணி: சார்லி சாப்ளின் 2
சன் லைஃப்
காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன் மதியம் 3 மணி: திருவருள்
கே டிவி
காலை 7 மணி: ஜே ஜேகாலை 10 மணி: முத்தின கத்திரிக்காய் மதியம் 1 மணி: ரோமியோ ஜூலியட்மாலை 4 மணி: 96இரவு 7 மணி: பொன்னியின் செல்வன் 2இரவு 10.30 மணி: அச்சம் என்பது மடமையடா
கலைஞர் டிவி
காலை 10 மணி: கழுவேற்றி மூர்க்கன் மதியம் 1.30 மணி: துணிவு மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 1இரவு 10 மணி: அருந்ததி
கலர்ஸ் தமிழ்
காலை 8மணி: ராஜா மகள் காலை 10.30 மணி: தக்ஸ் மதியம் 1 மணி: சின்ட்ரெல்லாமதியம் 3.30 மணி: தாரை தப்பட்டைமாலை 6 மணி: துப்பாக்கி முனை  இரவு 8.30 மணி: தக்ஸ்
விஜய் டிவி
காலை 11.30 மணி: லக்கி மேன்மாலை 5.30 மணி: பரம்பொருள்இரவு 9 மணி: போர் தொழில்
ஜீ தமிழ் டிவி
மதியம் 12.30 மணி: மார்க் ஆண்டனி மாலை 4  மணி: காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
ஜெயா டிவி
மதியம் 1.30 மணி: ரெமோமாலை 6.30 மணி: வேதாளம்இரவு 10.30 மணி: தலைமகன்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: வீராஇரவு 9 மணி: பக்கா

ஜீ திரை

காலை 6.30 மணி: மாப்ள சிங்கம்காலை 9  மணி: கர்ணன் மதியம் 12 மணி: தீர்க்கத்தரிசிமதியம் 2.30 மணி: 2.0மாலை 6.30 மணி: யானைஇரவு 9.30 மணி: மரகத நாணயம்
முரசு டிவி
காலை 6 மணி: ராமன் தேடிய சீதைமதியம் 3 மணி: டைரிமாலை 6 மணி: துரை இரவு 9.30 மணி: இரும்புக்குதிரை
விஜய் சூப்பர்
காலை 6 மணி: வேலைக்காரன் காலை 9 மணி: கிக்காலை 12 மணி: அடங்க மறு மதியம் 3 மணி: ஜாக்பாட்மாலை 6 மணி: வால்டர் வீரய்யாஇரவு 9.30 மணி: அஸ்வதம்மா
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: தமிழ் காலை 10 மணி: வில்லாதி வில்லன் மதியம் 1 மணி: வீரம் விளைஞ்ச மண்ணு மாலை 4 மணி: ஆட்டநாயகன் இரவு 7 மணி: சிவகாசி இரவு 10.30 மணி: விக்கிரமாதித்தன்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: மேஜர் மாலை 6.30 மணி: டெரர்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: அர்ஜெண்டினா பேன்ஸ் கிளப் காலை 8 மணி: மாத்தியோசி மதியம் 11 மணி: துளசி  மதியம் 2 மணி: தில்லு முல்லு 2 மாலை 4.30 மணி: தேவதாஸ்
வசந்த் டிவி
இரவு 7.30 மணி: அடவி
மெகா டிவி
மதியம் 1.30 மணி: பட்டத்து ராணி இரவு 11 மணி: படித்தால் மட்டும் போதுமா
மெகா 24 டிவி
காலை 10 மணி: ராசுக்குட்டி மதியம் 2.30 மணி: ஹாலிவுட் மாலை 6 மணி: துணை முதல்வர்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: கொலையுதிர் காலம் காலை 10 மணி: கடலை மதியம் 1.30 மணி: முத்துராமலிங்கம் மாலை 4.30 மணி: விளையாட்டு ஆரம்பம் இரவு 7.30 மணி: நான் ராஜாவாக போகிறேன் இரவு 10.30 மணி: ஞாபகங்கள் தாலாட்டும்

Source link

• Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie
Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

கோட் (G.O.A.T)
நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி வருகிறது கோட் (G.O.A.T). வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கி  ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் இந்தப் படத்தி நடித்து வருகிறார்.
தொடர்ச்சியான அப்டேட்கள்
2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதல், கோட் படத்தின் அப்டேட்களை வரிசையாக படக்குழு வெளியிட்டு வருகிறது. புத்தாண்டை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கோட் படத்தின் கதை பற்றிய தகவல்களை இதுவரை பயங்கர ரகசியமாக படக்குழு பாதுகாத்து வருகிறது. மறுபக்கம் ரசிகர்கள் இந்தப் படத்தின் கதை பற்றி பல அனுமானங்களை முன்வைத்து வருகிறார்கள்.
தளபதி பொங்கல்
சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில்  முற்றிலும் புதிதாக கெட் அப்பில் நடிகர் விஜய் காணப்பட்டார். தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி கோட் படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. தனது எக்ஸ் தளத்தில் இந்த பொங்கல் சிறப்பான ஒரு பொங்கலாக இருக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

It will be #TheGreatestOfAllTime PONGAL 🔥🔥🔥@archanakalpathi what say😉
— venkat prabhu (@vp_offl) January 14, 2024

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ நிச்சயமாக இது தளபதி பொங்கல் ‘ என்று பதிவிட்டுள்ளார். நாளை பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TheGOATshootingdiaries pic.twitter.com/P9t1BXhpze
— venkat prabhu (@vp_offl) January 13, 2024

தற்போது படப்பிடிப்பு
கோட் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது.  ராஜ்ஸ்தான் , ஸ்ரீலங்கா, மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களில் தற்போது படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: ”உலக சினிமாவில் விற்கு முடியாத தங்க மண்ணு” பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு!

Source link

• Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.

பொங்கல் படங்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம்.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக  தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனிடையே படமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கேப்டன் மில்லர் படம் முதல் நாளில் ரூ.8.7 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், 2வது நாளில் ரூ.6.75 கோடி வசூல் செய்ததாக sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலான்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், சரத் கேல்கேர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “அயலான்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஏலியன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விஷூவல்களுடன் வெளியாகியுள்ள அயலான் படம் குழந்தைகளை அதிகளவில் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.3.2 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் வசூல் ரூ.4.25 கோடியாக அதிகரித்துள்ளது.

மிஷன் சாப்டர் 1

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “மிஷன் சாப்டர் 1”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் அருண் விஜய்யின் முதல் பண்டிகை வெளியீடு படமாகும். இந்த படம் முதல் நாளில் ரூ.20 லட்சம் வசூல் செய்த நிலையில் 2வது நாளில் அது ரூ. 1கோடி வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, சண்முக ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “மெரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்துக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லரை மையப்படுத்திய இப்படம் இந்தி – தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் முதல் நாளில் ரூ.22 லட்சமும், 2வது நாளில் ரூ.31 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் குறைய என்ன காரணம்?

இப்படி பொங்கல் படங்கள் வசூல் குறைய என்ன காரணம் என தியேட்டர் தரப்பில் கேட்டபோது, ‘பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் நாளை பொங்கல் பண்டிகை முடியும் பட்சத்தில் தான் வசூல் அதிகரித்து அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளனர்.

Source link

• Ayalaan Twitter Review What Fans Says About Sivakarthikeyan Movie Ayalaan Audience Reaction Comments | Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி?
Ayalaan Twitter Review What Fans Says About Sivakarthikeyan Movie Ayalaan Audience Reaction Comments | Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி?

Ayalaan Twitter Review in Tamil: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அயலான்:
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்  பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள “அயலான்” படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார்.  ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 2வது படமாக அயலானை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், ஈஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடிக்கிறார்கள்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக இன்று பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாகியுள்ளது. ரஜினி முருகன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் 2வதாக வெளியான பொங்கல் வெளியீட்டு படம் “அயலான்” ஆகும். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள அயலான் படம் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங்கில் மிரட்டியுள்ளது.
ட்விட்டர் ரிவியூ:
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டரில் குவிந்தனர். தொடர்ந்து காலை முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை காணலாம்.
“அயலான் படம்தான் இந்த முறை வெற்றி பெறும். திரைக்கதை நன்றாக உள்ளது. சாதாரண காட்சிகளே ப்ரெஷ்ஷாக தெரிகிறது. கண்டண்ட் படி பார்த்தால், குழந்தைகளின் ஆக்‌ஷன் படம் போல் உள்ளது. ஆகமொத்தம், ஒரு நல்ல படம்.” – வெளிநாட்டில் படம் பார்த்த ஒருவரின் கருத்து.

#Ayalaan will be the winner of this clash Wait & WatchExcellent writing.Extreme creativity makes even normal scenes look Like fresh(Content Wise Becomes a template kid action movie)All Over Good movie and my personal rating 3.5/5 Content and Screen Play writing wise 4/5🔥👽 https://t.co/eNGMMIlArg pic.twitter.com/JRdHqh7NCt
— Kohli’s (@We_know_3) January 12, 2024

“படம் அழகாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு ஃபன்னான படம்” – முதல் பாதி பற்றி ஒருவரின் கருத்து.

Beautiful execution 🥰 Loved it so far. Fun movie.. #Ayalaan 🌟 #AyalaanPongal ! 🍿🎉 #AyalaanFDFS #Sivakarthikeyan #ARRahman pic.twitter.com/Ss3sIHgdsJ
— Satheesh Kumar (@Sathees88515919) January 12, 2024

“சிவகார்த்திகேயனுக்கு சாதாரண இண்ட்ரோ சீன்தான் வைக்கப்பட்டுள்ளது. இது வரை நன்றாகதான் உள்ளது.” – முதல் பாதி பற்றிய ஒருவரின் ட்விட்டர் விமர்சனம்

Showtime #AyalaanVery normal silent intro for SK.Good set up so far ! pic.twitter.com/BpHq7EKhZ6
— Nishant Rajarajan (@Srinishant23) January 12, 2024

“முதல் பாதியில் கொடுக்கப்பட்டுள்ள பில்ட்-அப் சூப்பர். சிவகார்த்திகேயனால் மட்டும்தான் இப்படி செய்ய முடியும். இது நிச்சயமாக அதரபழைய கதை கிடையாது. இது ப்ரெஷ்ஷாக உள்ளது. ஏலியனின் குரல் மட்டும் ஒருவிதமாக இருந்தது. இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஒரு மாஸ்டர் பீஸ். – தனி நபர் ஒருவரின் ட்விட்டர் விமர்சனம் ”

#Ayalaan : the way first half built-up is simply superb 🔥 only sk can pull off this kinda one, not a outdated stuff it’s simply clean and fresh ☄️ Alien voice only felt odd. now waiting for second half.ARR – MASTERPIECE STUFFS.
— Homielander (@iamhomielander) January 12, 2024

“எங்கும் பாசிட்டீவ் விமர்சனம்தான் பரவிவருகிறது.” – பொதுமக்களின் கருத்து

Positive Blast everywhere 💥🥵#Ayalaan #AyalaanFromTomorrow #AyalaanFDFS #AyalaanPongal #AyalaanBookings #Sivakarthikeyan #Skians #AyalaanFrom12thJan #Ayalaanreview pic.twitter.com/NTfY3txA8K
— Puneeth anna abhimani (@Puneeth5155) January 12, 2024

Source link

• Captain Miller Twitter Review What Fans Says About Dhanush Movie Captain Miller Audience Reaction Comments | Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு?
Captain Miller Twitter Review What Fans Says About Dhanush Movie Captain Miller Audience Reaction Comments | Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு?

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் (Captain Miller) படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் அப்படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷின் கேப்டன் மில்லர்
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் என பலரும் நடித்துள்ளனர்.

#CaptainMiller #CaptainMillerPongal #CaptainMillerReview #Dhanush what an actor 🔥🔥🔥. #Kollywood is blessed with such a natural actor. First Half : Book your ticket and please watch it in good theater.
— Karthik (@meet_tk) January 12, 2024

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் படமானது பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகிவிட்டது. படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி வெளியானது. ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் கேப்டன் மில்லர் படம் உருவானதின் கடினமான பின்னணி குறித்து பேசினர். தொடர்ந்து இன்று கேப்டன் மில்லர் படம் உலகமெங்கும் 900க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியுள்ளது. 3 வருடங்களுக்குப் பின் தனுஷ் படம் பொங்கலுக்கு வெளியானதால் அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு படையெடுத்தனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதனால் பிற மொழிகளில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி விட்டது.  இதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Source link

• Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்
Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்

வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த முறை வெற்றிபெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அயலான் vs மேரி கிறிஸ்துமஸ்

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலான்’ (Ayalaan) படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாராக உள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள  விஜய் சேதுபதி நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார்.  இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ள நிலையில் சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ள மேரி கிறிஸ்துமஸ் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த 2 படங்களும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முந்தைய நிலவரம் என்ன?
இதற்கு முன்னாள் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி நடித்த படங்கள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் யார் வெற்றி பெற்றது என்பது பற்றி காணலாம்..
எதிர் நீச்சல் vs சூதுகவ்வும்
2013 ஆம் ஆண்டு மே 1 ஆம்தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல் படம் வெளியானது. நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சதீஷ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். தனது பெயரால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி  மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒருவன், பின்னாளில் சாதனைப் படைக்கும்போது அவனது பெயர் எப்படி பாராட்டைப் பெறுகிறது என்பதை மையப்படுத்திய இப்படம் சூப்பர் ஹிட்டானது.
அதே நாளில் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட வேடத்தில் நடித்த “சூதுகவ்வும்” படம் வெளியாகியிருந்தது. நலன் குமாரசாமி இயக்கிய இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் வித்தியாசமான முறையில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய கதையாக அமைக்கப்பட்டிருந்து. சூது கவ்வும் படம் விஜய் சேதுபதிக்கு நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.
ரெமோ vs றெக்க
2016 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “ரெமோ”. அனிருத் இசையமைத்த இப்படத்தில் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க ‘அவ்வை சண்முகி’ கமல் போல பெண் வேடம் போட்டு சிவகார்த்திகேயன் செய்யும் தில்லுமுல்லு சம்பவங்கள் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றது.
அதே நாளில் ரத்தினம் சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சிஜா ரோஸ், கே.எஸ்.ரவிகுமார், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்டோர் நடித்த படம் “றெக்க”. டி.இமான் இசையமைத்த இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.
இப்படி 2 முறை மோதி, அதில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள் 3வது முறையாக மோதும் நிலையில் இது யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது நாளை மறுநாள் (ஜனவரி 12) தெரிந்து விடும்.

Source link

• Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்
Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்

ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள எட்வர்டு ஷெனின்பிளிக் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் அவருக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நடிகர்கள் அஜித், சூர்யா மற்றும் விஜய் புகைப்படங்கள் காண்பித்து அவர்களின் பெயர்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அஜித்தின் புகைப்படத்தினைப் பார்த்து கமல்ஹாசன் என கூறியுள்ளார். இதற்கடுத்து அவருக்கு சூர்யா புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கடுத்து நடிகர் விஜய் படத்தினைக் காட்டியபோது “ இது விஜய்” என பதில் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையதளத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இந்த தகவல் தொடர்பான பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனை ஆக்கிரமித்து ஃபையர் விட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு நடிகர்களுக்கெல்லாம் தங்களின் அபிமான நடிகர் யார் எனத் தெரிந்துள்ளது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Source link