Tag: PKL 2023-24

• Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 – 31 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
போட்டி தொடங்கியதும் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் ஒரு புள்ளியும் டிஃபெண்டிங்கில் ஒரு புள்ளியும் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அப்போது ஹரியானா அணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் இருந்தது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டபோது தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி அடித்து துவம்சம் செய்தது. அதன் பின்னர் ஹரியானா அணியின் புள்ளி வேட்டையை தமிழ் தலைவாஸ் அணியால் தடுக்கவே முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர்களும் டிஃபெண்டர்களும் தொடந்து சொதப்பினர். இதனால் ஹரியானா அணிக்கு புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் எடுத்து இருந்தது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்தது.
இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்களை வெளியேற்றினர். இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளி வித்தியாசம் குறைந்தது மட்டும் இல்லாமல் ஹரியானா அணியை ஆல் அவுட்டும் செய்தது.

Final whistle, a difficult defeat. Thalaivas showed grit, and we stand by them in success and challenges. Moving ahead, Thalaiva family.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #HSvCHE pic.twitter.com/SHp2M0dJAm
— Tamil Thalaivas (@tamilthalaivas) January 14, 2024

இறுதி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. டிஃபெண்டிங்கில் மட்டும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் எடுத்து அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை ஆல் அவுட் ஆனது. அதேபோல் ஹரியானா அணியை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை ஆல் அவுட் செய்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியின் நெகடிவ் புள்ளிகள் அதாவது எதிர்மறைப் புள்ளிகள் 30ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 16ஆம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Source link

• Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்

Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்

ல்ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் 60வது லீக் போட்டியில்  புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து நேற்று அதாவது ஜனவரி 7-ஆம் தேதி களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 – 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் புனேரி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றது.  அதேபோல் இந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகளுடனும் 44 எதிர்மறை ஸ்கோர் பாய்ண்டுகளுடனும் 11வது இடத்தில் உள்ளது.

இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 12 லீக் போட்டிகள் மீதமுள்ளது.

தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக்கில் மீதம் உள்ள போட்டிகள்

ஜனவரி 10:  உ.பி யோதாஸ் vs  தமிழ் தலைவாஸ் –  டோம் என்.எஸ்.சி.ஐ. மும்பை

ஜனவரி 14: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.

ஜனவரி 16: பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.

ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs  உ.பி யோதாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 14: தபாங் டெல்லி  vs தமிழ் தலைவாஸ் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.

Source link

• Puneri Paltan In Action Vs Tamil Thalaivas PKL 2023-24 Puneri Paltan Won 3 Points Deference On Match 60

Puneri Paltan In Action Vs Tamil Thalaivas PKL 2023-24 Puneri Paltan Won 3 Points Deference On Match 60

Tamil Thalaivas:  ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 – 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
புனேரி பல்தான் vs தமிழ் தலைவாஸ்:
புனேரி பல்தான் – அபினேஷ் நடராஜன், அஸ்லாம் இனாம்தார், கௌரவ் காத்ரி, மோஹித் கோயத், பங்கஜ் மோஹிதே, சங்கேத் சாவந்த், முகமதுரேசா சியானே
தமிழ் தலைவாஸ் – சாஹில் குலியா, எம். அபிஷேக், மோஹித், அஜிங்க்யா பவார், நரேந்தர், நிதின் சிங், சாகர்
கடந்த 3ம் தேதி உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு புனேரி பல்தான் அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வலிமையான அணியான புனேரி அணியை எதிர்த்து புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் தனது மூன்றாவது வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
தனது முதல் ரைடில் தமிழ் தலைவாஸ் அணி 3 புள்ளிகள் எடுத்து அசத்தியது. இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அமைந்த முதல் மற்றும் கடைசி சூப்பர் ரைடு அதுதான். அதன் பின்னர் ரைடு சென்ற தமிழ் தலைவாஸ் ப்ளேயர்களை புனேரி அணியின் டிஃபெண்டர்ஸ் கொத்தாக வெளியேற்றி வந்தனர். இதனால் புனேரி அணியின் புள்ளிகளும் உயர்ந்தது. அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் அணியை தொடர்ந்து முன்னிலையில் இருக்கச் செய்தனர். முதல் பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் முடியும்போதுதான் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடனும் புனேரி அணி 6 புள்ளிகளுடனும் இருந்தது. முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னர் தமிழ் தலைவாஸ் அணியை விட புனேரி அணி அதிக புள்ளிகள் எடுத்து முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

End of the match, a challenging defeat. Thalaivas displayed immense effort, and we support them in triumphs and setbacks. Moving forward, Thalaiva family.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #CHEvPUN pic.twitter.com/KyXhX9bGvz
— Tamil Thalaivas (@tamilthalaivas) January 7, 2024

முதல் பாதி முடியும்போது தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில் களத்தில் 2 வீரர்கள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய புனேரி அணி தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்தது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ரெய்டர்கள் தாங்கள் திட்டமிட்டதை செயல்படுத்த முடியவில்லை என்றாலும் டிஃபெண்டர்ஸ் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு புள்ளிகள் பெற்றுக்கொடுத்தனர்.
இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் புனேரி பல்தான் அணி 29 புள்ளிகளும் எடுத்தது. இதனால் புனேரி அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புனேரி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது.

Source link