செங்கோலுக்கு எதிராக இப்படியா பேசினார் மதுரை எம்பி சு.வெங்கேடசன்? முழு விவரம்…
மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், செங்கோல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் போன்றவற்றை எல்லாம் தகர்த்துவிட்டுதான் இந்தியாவில் ஜனநாயகம் காலூன்றியதாக தெரிவித்தார். மன்னராட்சி எப்போது ஒழிந்ததோ, அப்போதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாகவும் சு.வெங்கடேசன் கூறினார். செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள், எத்தனை பெண்களை தங்களது அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு…
