Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!
<p>பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொது தேர்தலை தொடர்ந்து, உடனடியாக வாக்கு எண்ணும் பணியும் நடைபெற்றது. இருப்பினும், தேதல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. </p> <p>பொதுத்தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. பாகிஸ்தானின் பொது தேர்தலுக்கு மொத்தமாக 266 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், 265 இடங்களுக்கான…
