US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!
<p>உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார்.</p> <h2><strong>அமெரிக்க அதிபர் தேர்தல்:</strong></h2> <p>பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு…
