Tag: Naveen Patnaik

• BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பரபரப்பாகும் தேர்தல் களம்:
தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் சுழன்று, சுழன்று வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், கூட்டணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தர பிரதேசத்தில் ஜெயந்த் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளது பாஜக.
அந்த வரிசையில், ஒடிசாவில் கூட்டணியை பலப்படுத்த பாஜக திட்டமிட்டு வந்தது. அதற்காக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கவிருப்பதால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து  போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
நவீன் பட்நாயக் எடுத்த அதிரடி முடிவு:
கடந்த 17 நாள்களாக இரு கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லி, புபனேஸ்வர் நகரங்களில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், “ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளிலும் 147 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்த போட்டியிட உள்ளோம். மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரவில்லை” என்றார்.
மாநிலத்தில் நான்கில் மூன்று பங்கு தொகுதிகளை கைப்பற்றுவோம் என பிஜு ஜனதா தளம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒடிசாவையும் மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முடிவுகளை எடுக்கும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பிரணவ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன?
பிஜு ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக அதன் தலைவராக வி.கே. பாண்டியன் வருவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர், ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து நலத்திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். ஒரு கட்டத்தில், நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய ஆளாக மாறினார். இவரின் அனுமதி இன்றி, அவரை பார்க்க முடியாத அளவுக்கு வி.கே. பாண்டியனின் இமேஜ் உயர்ந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவராக வி.கே. பாண்டியன் வருவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான், கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் காண

Source link

• BJP BJD Alliance: முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி! பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

BJP BJD Alliance: முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி! பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது. வட மாநிலங்களைத் தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளில் கூட்டணியை பலப்படுத்த பாஜக தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்காக, இரு கட்சிகளின் தலைமையும் தங்கள் மூத்த தலைவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல முடியாத வகையில் பிஜு ஜனதா தளம், பா.ஜ.க.வுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர்கள் இருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அதே பாணியில் பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர் விஜய்பால் சிங் தோமர், "எங்களுக்குத் தெரிந்தவரை, தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம்.

முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி:

கூட்டணி என வந்தால் எங்களைதான் முதலில் ஆலோசிப்பார்கள். தற்போது, ​​அது போன்ற எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் மாநிலத் தலைமையுடன் நாங்கள் விவாதித்தோம். ஒடிசாவில் 147 தொகுதிகளில் 89க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்றார்.

கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒடிசா மாநில இணை பொறுப்பாளர், "அது தொடர்பான எந்த தகவலும் எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து செய்தி வெளியிடுபவர்களிடம் இதை கேளுங்கள்" என்றார்.

பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. அதேபோல, கூட்டணியின் நன்மை தீமைகள் பற்றி பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உடன் அதன் மூத்த தலைவர்கள் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Source link

• Odisha CM Naveen Patnaik follows Tamil Nadu CM Stalin initiative in organ donation

Odisha CM Naveen Patnaik follows Tamil Nadu CM Stalin initiative in organ donation

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்து வரும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்த்து, பல மாநில அரசுகள், அதை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளது. சத்துணவு திட்டம் தொடங்கி மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வரை பல திட்டங்களை சொல்லி கொண்டே போகலாம்.
அந்த வகையில், உடல் உறுப்பு தானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ஒடிசா அரசு, தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானம்:
உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. ஒருவரின் உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக பாராட்டை பெற்று வருகிறது. சமீபத்தில், சிறந்த உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான விருதை தமிழ்நாடு பெற்றது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, அந்த விருதை வழங்கியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டை பின்பற்றும் ஒடிசா:
இந்த நிலையில், தமிழ்நாட்டை போன்றே, இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உறுப்பு தானம் தொடர்பாக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.

Odisha CM @Naveen_Odisha announces that last rites of those who save the lives of others by donating their organs will be done with State honour. The step is likely create widespread awareness in the field of organ donation, reports @satyabarik @the_hindu
— Nistula Hebbar (@nistula) February 15, 2024

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 1,706 பேரிடமிருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது. 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இந்த திட்டத்தின் முலம் பெற்று மக்கள் பயன் அடைந்துள்ளனர். உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

மேலும் காண

Source link