Tag: National News
-

"Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" – நிதின் கட்கரி கூறியதென்ன? | ACTPnews.com
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். நிதின் கட்கரி இதுதொடர்பாக பேசிய அவர், “அரசியலில் அனைத்து…
-

“வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?”- வீடியோ வெளியிட்ட ஸ்டாலின் | Stalin release video about cm vijay speech at tn assembly | ACTPnews.com
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாகச் சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப முதல்வர் விஜய், “பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விளக்கம் கொடுத்திருந்தார். முதல்வர் விஜய் இந்நிலையில் திமுக…
-

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர்; சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | ACTPnews.com
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்திருக்கிறது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26.9 கோடி. இந்தச் சம்பள உயர்வு மூலம் மீண்டும் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர் என்ற இடத்தை லாரன்ஸ் வோங் தக்கவைத்திருக்கிறார். சிங்கப்பூர் பிரதமர்…
-

இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு… ரேஸில் யார் யார்? | ACTPnews.com
இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் தி.மு.க உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மரகதம் குமரவேல் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம்…
-

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்; அரசியல் நேர்மையும் உழைப்பும் எங்கே? |CM Vijay vs Opposition Leader Udhayanidhi Stalin: Where Are Political Integrity and Hard Work? | ACTPnews.com
உரையின் உள்ளடக்கத்தையும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். முதல்வர் விஜய் பேசும்போதெல்லாம் ஊழல், லஞ்சமற்ற நேர்மையாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால், நேர்மை என்பது ஊழல் லஞ்சம் சார்ந்தது மட்டுமல்ல. அரசியல் நேர்மையும் பேசும் பேசுக்கு உண்மையாக இருக்கும் கருத்தியல் நேர்மையும் கூட முக்கியமானதுதான். “திமுக எதிர்ப்பு’ என்கிற ஒரே யுக்தியை மட்டும்தான் விஜய் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தினார். அதிமுகவை பற்றி அவர் பேசவே இல்லை. அது தேர்தல் யுக்தி. ஆனால், அதே பார்முலாவை விஜய் சட்டமன்றத்துக்கும்…
-

தவெக கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி|Vijay’s Alliance Gets a Name, But Left Parties Stay Away | ACTPnews.com
கம்யூனிஸ்ட் நிலைப்பாடு ஆரம்பத்திலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு, கூட்டணி இல்லை’ என்பதில் தெளிவாக உள்ளது. இதையொட்டி, இந்த இரு கட்சிகளும் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால், இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து, அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. முதல்வர் விஜய் புதிய பெயர் தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில்,…
-

மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா – சீரமைக்கக் கோரும் பொது மக்கள்! | ACTPnews.com
இது குறித்து அங்கே சிலம்பக்கலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரிடம் கேட்டபோது, “என் வீடு இப்பூங்காவிலிருந்து ஐந்து தெரு தள்ளிதான் இருக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பூங்காதான் எங்கள் மைதானம். பள்ளி முடிந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் இங்குதான் இருப்போம். விடுமுறை விட்டால் போதும் இங்கு வந்துவிடுவோம். அதற்குப் பிறகு கொரோனா ஊரடங்கு வந்தது. அப்பப்போ இந்தப் பக்கம் வந்து போவது உண்டு. ஐந்து வருடங்களாக இப்படியேத்தான் கிடக்கிறது. அப்போது விளையாடிய பசங்க…
-

2029 பிரதமர் வேட்பாளர்: விஜய்யா, ராகுலா? காங்கிரஸ் பதில்|Vijay or Rahul for PM? Congress Draws Its Red Line | ACTPnews.com
நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது. இது தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு நெருடலை ஏற்படுத்தியது. ஏனெனில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி வருகிறது. இது குறித்த கேள்வி தமிழ்நாடு காங்கிரஸைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. இன்று தவெகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற…
-

28 நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர்: முக்கிய அறிவிப்புகள், தீர்மானங்கள் என்ன?|Tamil Nadu Assembly Wraps Up: 1,117 Announcements and Key Resolutions | ACTPnews.com
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றோடு (செப்டம்பர் 8) முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு தகவல்களாக வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்… > தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 28 நாள்கள், அதாவது 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்றது. > விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 17 அறிக்கைகளையும். 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டதோடு, 13 சட்ட முன்வடிவுகள் மற்றும் 9 அரசினர் தனித்…
-

"இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது"- விஜய்யின் பேச்சைக் கண்டித்து DMK ஆர்ப்பாட்டம் | ACTPnews.com
செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாக சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாக திமுக தலைமை…
-

“உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்பதாகும்” – திருமாவளவன் அறிக்கை |VCK Chief Thirumavalavan Criticizes TVK Chief Vijay’s Assembly Speech | ACTPnews.com
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு. தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன்…
-

ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்: உலகம் எண்ணெய் நெருக்கடியை சமாளிப்பது எப்படி?|Hormuz Closed, But the World Found Ways to Keep Oil Flowing | ACTPnews.com
அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது. ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் காட்டாமல், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துக்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது… இன்னும் செய்து வருகிறது. ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டு எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்னும் அதன் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை. ஹார்முஸ் நீர்சந்தி தற்போதும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. ஆனால், முன்பு…
-

TVK : ‘இடைத்தேர்தல் வேட்பாளர்கள்; குழம்பி தெளிந்த விஜய்? – மாலை வெளியாகும் அறிவிப்பு? |CM Vijay vs Opposition Leader Udhayanidhi Stalin: Where Are Political Integrity and Hard Work? | ACTPnews.com
முதல்வரும் ‘குதிரை பேர’ விமர்சனத்தை கருத்தில் கொண்டிருக்கிறார். அதனால்தான் மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே தன்னுடைய சகாக்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறார். அதில் மதுராந்தகத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா இருவரில் ஒருவருக்கு மட்டும் சீட் கொடுத்தால் என்ன? இன்னொரு தொகுதிக்கு கட்சி ஆளே இறக்குவோமே என ஒரு ஐடியாவும் பேசப்பட்டிருக்கிறது. அப்படி ஒருவருக்குதான் வாய்ப்பு எனில் யாருக்கு வாய்ப்பை மறுப்பது? இப்படி ஒரு கேள்வி வரவே, மரகதம் குமரவேல்தான் கட்சியில்…
-

‘அங்கிருந்துதான் அதிருப்தி தொடங்கியது’; தவெக கூட்டத்தைப் புறக்கணித்த கம்யூனிஸ்ட்டுகள்- காரணம் என்ன? | ACTPnews.com
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று…
-

உதயநிதி கொடுத்த ட்விஸ்ட்.. மாறிய வேட்பாளர் பட்டியல்.. பரந்தாமன் தேர்வான பின்னணி! | Udhayanithi Wants Paranthaman to be te Candidate for madhuranthagam | ACTPnews.com
வி.சி.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த பனையூர் பாபுவை வேட்பாளராக்கலாம் என்பதே முதல்வரின் மருமகன் சபரீசனின் சாய்ஸாக இருந்திருக்கிறது. அதேபோல் தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜை நிறுத்தலாம் எனவும் ஆலோசித்திருக்கிறார்கள். சீனியர்களும் இசைவு தெரிவிக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்த சாய்ஸுகளை ஏற்காத உதயநிதி, பரந்தாமனை பரிந்துரை செய்திருக்கிறார். கட்சியில் இணைந்த சில மாதங்களே ஆன பனையூர் பாபுக்கு சீட் கொடுத்தால் கட்சியினரும் அமைச்சர்களும் வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க-வுக்கு…
-

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்த திமுக!- யார் போட்டியிடுகிறார்கள்? | The DMK has now announced the candidates who will contest in the by-elections. | ACTPnews.com
தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று…
-

“பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வேண்டாம், ஏன்னா!” – சிக்கலை விளக்கிய அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss explains the issue of Secretariat in Pattinapakkam | ACTPnews.com
உலகிற்கே வழிகாட்டி ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்…
-

சேதமடைந்த வீட்டில் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்; வீட்டைச் சீரமைத்து தந்த தவெக எம்.எல்.ஏ | Tvk mla renovates the damaged home of a differently-abled Vijay fan who had been struggling | ACTPnews.com
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி- சகுந்தலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். மகன் விக்னேஸ்வரன் பிறந்ததிலிருந்தே மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவரை இவருடைய அம்மா சகுந்தலா கூலி வேலைக்குச் சென்று கவனித்து வந்துள்ளார் .இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது த.வெ.க-வின் வேட்பாளர் சுனில் ஆனந்த் வாக்கு சேகரிக்க அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தார். சுனில்குமார் எம்.எல்.ஏ அப்போது மாற்றுத்திறனாளியான தன் மகன் விக்னேஸ்வரன் விஜய்யின்…
-

உதயநிதியின் பாராட்டு; கிருஷ்ணசாமியின் விமர்சனம்; கடந்து செல்லச் சொல்லும் திருமாவளவன் | ACTPnews.com
வி.சி.க தலைவர் திருமாவளவனையும், அமைச்சர் வன்னி அரசுவையும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்ததுடன் “இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று, வன்னி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்’ என்று அறிவித்தார். இமானுவேல் சேகரன் நினைவு தினம் (ஃபைல் போட்டோ) அதனைத் தொடர்ந்து வி.சி.க ஆதரவாளர்களும், புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்களும் சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் மாறி மாறி விமர்சித்து வருவது கருத்து மோதல் என்பதைக் கடந்து சமூக ரீதியான விமர்சனமாக மாறி சென்று…
-

‘மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்’ பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு இ.டி கடிதம் | ED writes to DGP seeking to register a case against Pinarayi Vijayan. | ACTPnews.com
கேரள மாநிலம் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் செலுத்தியதாக வருமான வரித்துறை சோதனையின்போது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையைத்…
-

“நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?; மத்திய அரசுக்கு அழுத்தம்.!”- உதயநிதி | how many more children must we lose to the killer neet exam says udhayanidhi | ACTPnews.com
“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “‘நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில்…
-

விஜய் பேச்சுக்கு இ.கருணாநிதி பதிலடி: ‘உண்மைக்கு மாறான தகவல்’|Vijay’s Assembly Claims Spark Sharp Response From E Karunanithi | ACTPnews.com
நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் மகன் வீட்டில் நடந்த குற்றத்தைச் சுட்டிக்காட்டியும் பேசியிருந்தார். விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் இ.கருணாநிதி, “நான் கடந்த 2016 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்றத் திமுக உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தி.மு.க.-வில் கழகப் பணியாற்றி…
-

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு! | ACTPnews.com
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.94-95 என வலுவாகியிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக, சற்று இறக்கத்தைக் கண்டாலும், இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் ரூ.95-க்குக் கீழேயே இருப்பது நல்ல செய்திதான். முக்கிய செய்திகள் ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருப்பதால், எண்ணெய் போக்குவரத்து கடினமாக உள்ளது. இதனால், உலகச் சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. இவை உலகத்தின் தற்போதைய…
-

மதுராந்தகம் இடைத்தேர்தல்: த.வெ.க-வில் சீட் வார்… மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்! -seat race war begins in tvk party for maduranthagam constituency | ACTPnews.com
எழில் கேத்தரீனுடைய சகோதரி எழில் கரோலின், வி.சி.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் எழில் கரோலின். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மூலமாகவும் சீட்டுக்கு முயற்சி செய்யும் எழில் கேத்தரீன், தன்னுடைய சகோதரி எழில் கரோலின் மூலமாக வி.சி.க தலைவர் திருமாவளவனை பிடித்து, அவருடைய சிபாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார். எழில் கேத்தரீன் தற்போது, வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல் என வலுவான கூட்டணி…
-

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம் | ACTPnews.com
நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாக சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார். அமளியில் திமுக இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி பேசுபொருளானது. தொடர்ந்து முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும்…
-

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ – கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ? | ACTPnews.com
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசை ஆட்டம் காண வைத்தது. அதனால்…
-

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்!’ – புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி | ACTPnews.com
புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், `புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள்,…
-

மதுராந்தகம், தாராபுரம் – இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?! | ACTPnews.com
மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க. ”நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது” என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.…
-

சவூதி-ஹூதி மோதல் தீவிரம்: எண்ணெய் விலை என்ன ஆகும்?|Another Middle East Flashpoint: Saudi Arabia vs Houthis | ACTPnews.com
ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அரேபியா vs ஹூதி தாக்குதல் ஆகும். இதைப் பழைய ‘புதிய’ பிரச்னை எனக் கூறலாம். குழப்பமாக உள்ளதா… கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது இரு தரப்பிற்கும் நடந்து வருகிறதுதான். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்தத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ஏமன் – சவூதி…
-

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' – எஸ்.பி.வேலுமணி கோரிக்கை | ACTPnews.com
சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார். எஸ்.பி.வேலுமணி எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ”தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும். டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரவில் எம்.எல்.ஏக்களுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக கொடுக்கிறார்கள். நமக்கு 3 கோடிதான் கொடுக்கப்படுகிறது. சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த வேண்டும் என்கிறார்கள். குறைந்தபட்சம் 7…
-

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!’ – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை | ACTPnews.com
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசை ஆட்டம் காண வைத்தது. அதனால்…
-

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி | ACTPnews.com
அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான நாடுகள். ஈரானோ பொருளாதாரத் தடைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு. ஆனால், அமெரிக்கா தந்து வரும் அனைத்துக் குடைச்சல்களையும் இப்போதும் தாங்கி வருகிறது ஈரான். மசூத் பெசெஷ்கியான் பதிவு மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர்…
-

‘இளைய தளபதி க்ரூப்ஸ்’ – ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? – அமைச்சர் சரத் முழு விளக்கம்! |‘Ilaya Thalapathy Groups’: How to Start and Grow a Fan Club? Minister Sarath Explains! | ACTPnews.com
உங்கள் பெயரை சொல்லி நாங்கள் மக்கள் பணி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றோம். நான் செகண்ட் இயர் ஸ்டூடண்ட் போன்றவன். தாமு அண்ணன் சரவணன் அண்ணன் போன்றோர் எங்களை விட சீனியர்கள். ‘இளைய தளபதி க்ரூப்ஸ்’ என பெயர் வைத்து படிப்படியாக மன்றம் மூலம் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு மன்றம் போர்டு திறக்க வேண்டுமானால், 25 பார்ம் நிரப்ப வேண்டும். மரக்கன்று நட்டு, பேனா, நோட்டு, புத்தகம் கொடுத்து தண்ணீர் பந்தல் திறந்து ரத்தத்தானம் வைத்து நாடி…
-

மிசா விவகாரம்: நிர்மல் குமார் பேச்சுக்கு அன்பில் மகேஸ் கடும் பதிலடி|‘Unfit to Speak on MISA’: Former Minister Slams Nirmal Kumar | ACTPnews.com
இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதானார் என்று பேசினார் நிர்மல் குமார். நேற்றே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்துப் பேசியிருந்தார். இதுவே விமர்சனங்களைக் கிளப்பியிருந்த நிலையில், இன்று மீண்டும் நிர்மல் குமார் மிசா குறித்தும், ஸ்டாலின் குறித்தும் பேசியுள்ளது திமுகவினரிடையே எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. நிர்மல் குமார் நிர்மல்…
-

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' – எடப்பாடி பழனிசாமி | ACTPnews.com
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள். இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் வெற்றி பெறுவார்கள். எங்கள் இயக்கத்தில் இருக்கும் சிலரை ஆளுங்கட்சியினர் தாஜா செய்துகொண்டிருக்கின்றனர். முதல்வர் விஜய் ஏனென்றால் ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இல்லை. தவெக ஆட்சி அமைப்பதற்கு சில கட்சிகள் துணை…
-

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை? | ACTPnews.com
தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை – எளிய மக்களுக்கு முக்கியமான மருத்துவ ஆதாரமாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், மருத்துவமனை வளாகத்தில் வசதி குறைபாடு, சுகாதார சீர்கேடு, பராமரிப்பின்மை ஆகியவை சிகிச்சைக்காக வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலை:- மருத்துவமனை வளாகத்துக்குள் நுழையும்போதே சாலையின் நிலை…
-

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக… நம்பிக்கையில் தவெக' – இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்? | ACTPnews.com
தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து பணிகளை அதிமுக துவங்கிவிட்டது. போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல்…
-

‘2 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா தி.மு.க…?’ – பரவும் தகவலும் பின்னணியும்! | Will DMK Boycott By election 2026? | ACTPnews.com
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். த.வெ.க-வும் அ.தி.மு.க தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தி.மு.க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. “இடைத்தேர்தலில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்னவென களமிறங்கி விசாரித்தோம். இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா,…
-

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" – பெ.சண்முகம் | ACTPnews.com
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தான் சட்டமன்றம் இருக்கும் என்றால் சட்டமன்றமே வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றம் மக்களின் வரிப்பணத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய சொந்தப் பணத்தில் நடக்கவில்லை. சட்டமன்றத்தில் முறையாக நேரத்தைப்…
-

“தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது”- பெ.சண்முகம்| CPM will not participate in the consultative meeting of TVK alliance parties says P. Shanmugam | ACTPnews.com
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்முகம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தலைமையில் புதியக் கூட்டணியை உருவாக்குவதற்கான கூட்டம் தான் அது என்றார்கள். விஜய் – பெ.சண்முகம் அடுத்து நடைபெறக்கூடிய உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களை இந்தக் கூட்டணியின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்…
-

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" – எ.வ வேலு | ACTPnews.com
நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், “இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக…
-

TN Assembly: தொடர் அமளியில் ஈடுபட்ட திமுகவினர்! – அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்| LIVE | ACTPnews.com
‘அமைச்சர் ஆதவ் கொண்டு வந்த உரிமை மீறல் புகார்!’ தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழான உரிமை மீறல் எழுப்புவது – தொடர்பாக. — வணக்கம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழ் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.வ.வேலு அவர்கள், 2021-2026-ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, 14.01.2026 நாளிட்ட G.O.(Ms) No.06 மூலம், 2026-27 ஆம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு…
-

ஜான் ஆரோக்கியசாமி: “பணி நியமனம்; அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி | John Arokiasamy: “Job appointments: Why the fear of issuing the Government Order?” – Nainar Nagendran asks. | ACTPnews.com
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியாகவில்லை. ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியமனம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஜான் ஆரோக்கியசாமி இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன்…
-

“முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” – பெ.சண்முகம் கண்டனம்/P.Shanmugam press release against cm vijay | ACTPnews.com
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன்…
-

IUML: “கோடி கோடியாய் கொண்டு வந்து கொடுத்தார்கள்” – எம்.எல்.ஏ பேச்சும் – பொதுச் செயலாளர் விளக்கமும்! | The allegation made by the IUML MLA regarding horse-trading became a topic of discussion. | ACTPnews.com
இந்த நிலையில், ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு விளக்கமளிக்கும் வகையில், ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், “தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்வேறு கட்சிகளும் ஆட்சி அமைக்க முயன்றதால் மட்டுமே குதிரை பேரம் நடந்ததாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ குறிப்பிட்டார். அவர் எந்தக் குறிப்பிட்ட கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காகவும்,…
-

M. Chettipatti Villagers’ 50-Year Wait for a 1-KM Road | 50 ஆண்டுகால அவதி… சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் ! | ACTPnews.com
ஆம்புலன்ஸ் கூட வர முடியாது ! சாலை வசதியின்மை இவர்களின் அன்றாடப் போக்குவரத்தை மட்டுமல்ல, அவசர கால வாழ்வாதாரத்தையும் சேர்த்தே முடக்கியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத சூழலே நிலவுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டும் என்றாலும் அரை கிலோமீட்டர் தூரம் சுமந்து வர வேண்டியுள்ளது. தபால்காரர், பால் வியாபாரிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் தினமும் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதுதான் எங்களின்…
-

"கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் Take Diversion நாடகம்"- முதல்வர் மீது அன்பில் மகேஸ் விமர்சனம் | ACTPnews.com
மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார். “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ ‘திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது’ எனப் பேசுகிறார். முதல்வர் விஜய் இவ்வளவு நாட்களாக இதே மக்கள்தான் இவர்களுக்கு…
-

கே.என்.நேரு மீது ரூ.1,020 கோடி ஊழல் வழக்கு? FIR-ல் பரபர தகவல்|₹1,020 Crore ‘Party Fund’? FIR Names KN Nehru as A-1 | ACTPnews.com
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5), லஞ்ச ஒழிப்புத் துறை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையின் எஃப்.ஐ.ஆர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த எஃப்.ஐ.ஆரில் ஏ-1 ஆக கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறை சார்ந்த டெண்டர்களில் ஊழல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது, டெண்டர் விடப்படுவதற்கு முன்பே, தங்களுக்கு வேண்டியவர்களை டெண்டர்தாரர்களாகத் தேர்வு செய்து, ஒப்பந்த…
-

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்’ – உக்ரைன் எடுத்திருக்கும் முடிவு! – பின்னணி என்ன? | The Ukrainian government has introduced a bill to legalize pornography. | ACTPnews.com
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், போர்ச்சூழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வரி வசூல் அமைப்புகள் இத்துறையின் மீது கவனம் செலுத்தத் தொடங்கின. இதனால், படைப்பாளர்கள் வருமானத்தைக் காட்டினால் குற்றவியல் வழக்கையும், காட்டாவிட்டால் வரி ஏய்ப்பு வழக்கையும் எதிர்கொள்ளும் விசித்திரமான சூழல் உருவானது.…
-

“முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை”- பிரேமலதா விஜயகாந்த்| dmdk premalatha vijayakanth about vijay speech | ACTPnews.com
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமானக் கோரிக்கைகளை வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் ஆனால் இன்று முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதை நான் அவையில் சுட்டிக்காட்டினேன். இன்று மாலை சட்டசபை முடிவதற்குள் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Now thinking about whether the writer might publish a longer form work I would buy, and a look at shopzaro…
Now noticing that the post did not mention the writer at all, focus stayed on the topic, and a look…
A piece that demonstrated competence without performing it, and a look at dawnorchardgoodsatelier maintained the same self assured but unshowy…
My professional context would benefit from having this kind of resource available, and a look at modelmetro extended the professional…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Skipped past the first paragraph thinking it was setup and had to come back when the rest referenced it, and…