விழுப்புரம்: உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை, 12ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. இன்று மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு தேர் திருவிழா நடக்கிறது. இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைத்து தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த ஒரு மாதம் முன்பு பச்சை மரங்களை கொண்டு புதிய தேர் கட்டும் பணி துவங்கி நடந்து வந்தது.

தங்க கவசத்தில் அங்காளம்மன்

தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோவிலின் வடக்கு வாயிலிருந்து பம்பை – உடுக்கை, மேளதாளங்கள் முழங்க தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மனே என பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாதுகாப்பு பணியில் காவல்துறை

தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tag: Melmalayanur

Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று காலை கோயிலை வந்தடைந்தது. அதன் பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதே போல் உற்சவ அம்மனுக்கு 16 கரங்களுடன் ஆவேச அங்காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 9.45 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றிலும் உலா வந்தார். 10 மணிக்கு பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம் என்று கூறுவார்கள்) எடுத்து ஆடியபடி மயானத்தை நோக்கி புறப்பட்டனர். 10.30 மணிக்கு மயானத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆவேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர்.இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் சிலர் அம்மன் வேடமிட்டும், கோழிகளை கடித்தபடியும் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக அம்மன் வேடமிட்டிருந்தவர்களை கண்ட பக்தர்கள் சாலையில் படுத்தனர். அவர்கள் மீது அம்மன் வேடமிட்டவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். இவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு பூஜைகள்
உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார்.
11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.மேலும் காண

Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடப்படும். தை அமாவாசை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தை அமாவாசை – சிறப்பு பேருந்து

தை அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு

எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.