Tag: Mattu Pongal 2024

  • Pongal 2024 News Second Day Of Pongal Day, Mattu Pongal Is Being Celebrated In A Grand Manner Across Tamilnadu

    Pongal 2024 News Second Day Of Pongal Day, Mattu Pongal Is Being Celebrated In A Grand Manner Across Tamilnadu

    பொங்கல் பண்டிகை
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது. 

    மாட்டு பொங்கல்
    பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. எப்படி விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துகிறோமோ அதை போல் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தன்று வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு அந்த நாள் கொண்டாடப்படும். அதேபோல்தான் மாட்டுப் பொங்கலுக்கு மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பொங்கலிடும் வைபவம் நடைபெறும்.
    மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் மாட்டு தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. மாடு மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுவதாலும் அதன் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும், இந்த நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையிலேயெ மாடுகளை குளிப்பாட்டி, அதன் நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளில் வண்ணம் தீட்டி, இரு கொம்புகளையும் சுற்றி வேட்டி அல்லது துண்டுகளை பரிவட்டமாகக் கட்டி  மரியாதை அளிப்பார்கள். 
     காஞ்சிபுரத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
    தைப்பொங்கல் தினம் நேற்று கொண்டாடிய நிலையில் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலை கொண்டாடும் தினமான இன்று காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உறவுக்கு தோள் கொடுத்த மாடுகளை கௌரவிக்கும் விதமாக வீட்டு வாசல்களில் விதவிதமான வண்ணங்களில் மாடுகளை கோலங்களாக போட்டு உங்களை வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.

     கடைகளில் குவிந்த விவசாய பெருங்குடி மக்கள்
    மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாடுகளுக்கு புதிய கயிறு மாற்றுவது அலங்காரப் பொருட்கள் மூலம் மாடுகளை அலங்காரம் செய்வது, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, மாடுகளுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது உள்ளிட்ட வகையில் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.

    காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு மாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் விவசாயகள் மற்றும்  பொதுமக்கள் குவிந்து மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக துணிக்கடைகளில் கூட்டம் இருந்த நிலையில் இன்று காலை முதலே மாடு சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குவிந்து வருகிறது.
    பொங்கலிட நல்ல நேரம் எது? 
    பொதுவாக பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்டு வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நேரத்தில் வழிபாடு நடத்த முடியாதவர்கள் ராகுகாலம், எமகண்டம், குளிகை தவிர்த்து பிற நேரங்களை நல்ல நேரமாக கருதி பொங்கலிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மாடு இல்லாதவர்களும் இந்த நாளை கொண்டாட, உங்கள் பகுதியில் இருக்கும் மாடுகளுக்கும், கோவிலில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உணவு படைத்தும் வழிபடலாம். 

    Source link

  • Mattu Pongal 2024 Tamilnadu People Was Celebrating Mattu Pongal With Very Heppy

    Mattu Pongal 2024 Tamilnadu People Was Celebrating Mattu Pongal With Very Heppy

    பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
    பொங்கல் பண்டிகை
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் தை மாத பிறப்பு மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    பொதுவாக நம்மிடம் இயற்கை வழிபடும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு ஆதரவாக திகழும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை நேற்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இந்நன்னாளில் அதிகாலையிலே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, புது பானையில் பொங்கல் விட்டு,கரும்பு,மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு சகிதம் சூரியனுக்கு படைத்து செய்யும் சிறப்பு வழிபாடு அனைத்து இல்லங்களிலும் நடைபெற்றது. 
    மாட்டு பொங்கல்
    பொங்கலுக்கு மறுதினம் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. எப்படி விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துகிறோமோ அதை போல் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் தினத்தன்று வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு அந்த நாள் கொண்டாடப்படும். அதேபோல் தான் மாட்டுப் பொங்கலுக்கு மாடுகள் கட்டப்பட்டிருக்கும் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பொங்கலிடும் வைபவம் நடைபெறும்.
    மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்கள் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் மாட்டு தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. மாடு மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுவதாலும் அதன் உடலில் முப்பது முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுவதாலும், இந்த நாள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையிலேயெ மாடுகளை குளிப்பாட்டி, அதன் நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளில் வர்ணம் தீட்டி, இரு கொம்புகளையும் சுற்றி வேட்டி அல்லது துண்டுகளை பரிவட்டமா கட்டி  மரியாதை அளிப்பார்கள். 
    பொங்கலிட நல்ல நேரம் எது? 
    பொதுவாக பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பது பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்டு வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நேரத்தில் வழிபாடு நடத்த முடியாதவர்கள் ராகுகாலம், எமகண்டம், குளிகை தவிர்த்து பிற நேரங்களை நல்ல நேரமாக கருதி பொங்கலிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மாடு இல்லாதவர்களும் இந்த நாளை கொண்டாட, உங்கள் பகுதியில் இருக்கும் மாடுகளுக்கு உணவு படைத்தும் வழிபடலாம். 

    மேலும் படிக்க: Mattu Pongal Funny Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி நண்பர்களை கலாய்ப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இது..

    Source link

  • Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

    Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

    தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம். 
    முரட்டுக்காளை 
    1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. இந்த படத்தில் ரஜினிகாந்த், ரதி, சுமலதா, ஜெய்சங்கர், சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அறிமுக காட்சியில் ரஜினி காளையை அடக்கியவுடன் “பொதுவாக என் மனசு தங்கம்” பாடல் ஒலிக்கும். இப்பாடம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. 

    சரஸ்வதி சபதம் 
    1966 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலரும் நடித்த படம் “சரஸ்வதி சபதம்”. கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் மாடுகளை போற்றும் வகையில் “கோமாதா எங்கள் குலமாதா” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். 

    அண்ணாமலை
    1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி என பலரும் நடித்த ‘அண்ணாமலை’ படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் பால்காரனாக நடித்திருப்பார். அதில் மாட்டுப் பொங்கல் அன்று “வந்தேண்டா பால்காரன்” என்ற பாடல் மூலம் சில வரிகளை மாடுகளின் பெருமையை பேசியிருப்பார். 

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    1959 ஆம் ஆண்டு பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்திருந்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்த இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காளையை கொண்டாடும் வகையில் ”அஞ்சாத சிங்கம் என் காளை. இது பஞ்சா பறக்கவிடும் ஆளை” என்ற பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. 

    மாட்டுக்கார வேலன்  
    1970 ஆம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் “மாட்டுக்கார வேலன்” படம் வெளியானது. இந்த படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “சத்தியம் நீயே தரும தாயே” பாடல் இடம் பெற்றிருக்கும். இது முழுக்க முழுக்க மாடுகளை மையப்படுத்தியே வரிகள் இடம் பெற்றிருக்கும். 

    விருமாண்டி 
    2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இயக்கிய விருமாண்டி படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் கமல் ஜல்லிக்கட்டு மாடு அடக்கும் வீரராக நடித்திருப்பார். அதில் “கொம்புல பூவை சுத்தி நெத்தியில பொட்டு வச்சி” பாடல் இடம் பெற்றிருக்கும். 

    கொம்புவச்ச சிங்கம்டா
    ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்த நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். இந்த பாடலை இயக்குநர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா எழுதியிருந்தார்.

    டக்கரு டக்கரு பாடல் 
    இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது “டக்கரு டக்கரு” பாடல். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இப்பாடல் அதன்பின்னால் இருக்கும் அரசியல், நாட்டு மாடுகள் ஒழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பற்றியும் பேசியிருக்கும். 

    Source link

  • The World Famous Palamedu Jallikattu Competitions Are Starting Today 16th Jan 2024 On The Occasion Of Pongal Festival

    The World Famous Palamedu Jallikattu Competitions Are Starting Today 16th Jan 2024 On The Occasion Of Pongal Festival

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
    பாலமேடு ஜல்லிக்கட்டு:
    நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர். இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
    குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற  பாலமேடு ஜல்லிக்கட்டு  காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு காலை முதல் மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பின் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது.
    காளைகளும், காளையர்களும்:
    போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக  ஒரு நிசான் கார் மற்றும்  மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கபடுகிறது. 2 வது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது.
    போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட  பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. போட்டியின் தொடக்க நிகழ்ச்சியாக முதலில் கிராமத்தின் சார்பில் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை காளைகள் அவிழ்க்கப்பட்ட பின்னர் போட்டியில் பங்கேற்கும் காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டது.
    போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. போட்டியினை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே  பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    பாதுகாப்பு ஏற்பாடுகள்:
    மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்தில் ( கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    மாடுபிடி வீரரகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க,  போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
     

    Source link