Tag: Marvel Cinematic Universe

  • Robert Downey Jr. Says He’d ‘Happily’ Return to the MCU in Iron Man character | MCU Iron Man: ”நான் ரெடிதான்” – மீண்டும் அயர்ன் மேன் ஆக வர ஒகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்

    Robert Downey Jr. Says He’d ‘Happily’ Return to the MCU in Iron Man character | MCU Iron Man: ”நான் ரெடிதான்” – மீண்டும் அயர்ன் மேன் ஆக வர ஒகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்


    MCU Iron Man: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் சீக்ரெட் வார்ஸ் படத்தில், அயர்ன்மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
    ரசிகர்களை கவர்ந்த அயர்ன்மேன்:
    அதீத சக்திகளை கொண்டு உலகிற்கு வரும் ஆபத்துகளை தடுக்கும், சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு மார்வெல் நிறுவனம் ஒரு பிரமாண்டமான சினிமாடிக் யூனிவெர்ஸை கட்டமைத்துள்ளது. இதன் தொடக்கமாகவும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாகவும் இருந்தது அயர்ன் மேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜுனியர் அயர்ன் – மேன் ஆகவே வாழ்ந்து நடிகர்களை கவர்ந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களால் திரையில் கொண்டாடப்பட்ட அந்த கதாபாத்திரம், கடந்த  2019ம் ஆண்டு வெளியான எண்ட் கேம் திரைப்படத்தில் உலகை காக்க உயிர் தியாகம் செய்தது. இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து, மார்வெல் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
    ”ஒகே” சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்:
    இந்நிலையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த ராபர்ட் டவுனி ஜுனியரிடம், மீண்டும் அயர்ன் மேன் கதபாத்திரத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், “மகிழ்ச்சியாக வருவேன். அயர்ன்மேன் கதாபாத்திரம் என் டிஎன்ஏவின் மிகவும் ஒருங்கிணைந்த பகுதியாகும். அந்த வேடம் என்னைத் தேர்ந்தெடுத்தது, நான் எப்போதும் சொல்கிறேன், மார்வெல் நிறுவன இயக்குனர் கெவின் ஃபேகிக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் . இது ஒரு தோல்வி பந்தயம். அவர் தான் வீடு. அவர் எப்போதும் வெற்றி பெறுவார்” என்று ராபர் டவுனி ஜுனியர் தெரிவித்தார்.
    அதோடு, கடந்த 2018ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தான், மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒட்டுமொத்த முக்கிய கதாபாத்திரங்களையும் கடைசியாக ஒரே நேரத்தில் பார்த்தேன். அது மிகவும் முக்கியமான இரவு அதை என்றும் மறக்கமாட்டேன்” என ராபர் டவுனி ஜுனியர் கூறினார்.
    ரசிகர்கள் மகிழ்ச்சி:
    எண்ட் கேம் படத்தை விட இரண்டு மடங்கு பிரமாண்டமாக, அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த பொருட்செலவுக்கு நிகரான வருவாயை ஈட்ட, அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க ராபர்ட் டவுனி ஜுனியர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
    கெவின் ஃபேகி சொல்வது என்ன?
    அயர்ன்மேன் கதாபாத்திரத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டு கெவின் ஃபேகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாங்கள் அந்த தருணத்தை [டோனி ஸ்டார்க்கின் மரணத்தை] அப்படியே வைத்திருக்கப் போகிறோம், அந்த தருணத்தை மீண்டும் தொடமாட்டோம், அதை அடைய நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்தோம். அதை எந்த வகையிலும் வீணாக்க நாங்கள் விரும்பவில்லை” என கெவின் ஃபேகி தெரிவித்தார். இதனால், அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் மீண்டும் தோன்றுவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    மேலும் காண

    Source link

  • Deadpool and Wolverine Trailer Marvel Cinematic Universe Deadpool 3 Trailer – Watch | Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின்

    Deadpool and Wolverine Trailer Marvel Cinematic Universe Deadpool 3 Trailer – Watch | Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின்


    Deadpool & Wolverine Trailer: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான, டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    டெட்பூல் & வொல்வரின்:
    ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் நடிப்பில் உருவாகியுள்ள, டெட்பூல் & வொல்வரின் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒரு அங்கமாக, நடப்பாண்டில் வெளியாகும் ஒரே திரைப்படம் இதுவாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெட்பூல் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள, இப்படத்தில் ஹுஜ் ஜாக்மேனின் வொல்வரின் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்ற உள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு, நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டும் படங்களில் கட்டாயம், டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் இடம்பெறும் என திரைத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கதைக்களம் என்ன?
    இரண்டம் பாகத்தின் இறுதியில் டெட்பூல் டைம்டிராவல் செய்து, இறந்து போன தனது காதலியான வெனெசாவை காப்பாற்றியதோடு, தனது எக்ஸ்-ஃபோர்ஸ் அணியை சேர்ந்தவர்களையும் காப்பாற்றி இருப்பார். இந்நிலையில், லோகி சீரிஸில் இடம்பெற்ற TVA  எனப்படும் டைம் வேரியண்ட் அதாரிட்டி டெட்பூலை கடத்திச் சென்று, டைம் லைனில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும் என கோருகிறது. அதனை தொடர்ந்து, டிஸ்னியின் மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ் மற்றும் ஃபாக்ஸ் 20-யின் எக்ஸ்மேன் சினிமாடிக் யூனிவெர்ஸையும் இணைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, டெட்பூல் படங்களுக்கே உரிய ஆர்-ரேடட் ஆக, மூன்றாம் பாகமும் வெளியாகும் என கருதப்படுகிறது. காரணம் அந்த அளவிற்கு டிரெய்லரிலேயே ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல, டெட்பூலின் காமெடி கலந்த வசனங்களும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. டிஸ்னி தயாரிப்பில் வெளியாகும் முதல் முழுநீள, ஆர்-ரேடட் திரைப்படமாக டெட்பூல் & வொல்வரின் இருக்கும் என கருதப்படுகிறது.
    மீண்டு வருமா மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ்:
    அழிவின் விளிம்பில் உள்ள உலகத்தை அதீத சக்திகளை கொண்ட, சூப்பர் ஹீரோக்களை கொண்டு காப்பாற்றும் கதைக்களத்தை மையமாக கொண்டு டிஸ்னி படங்களை உருவாக்கி வருகிறது. 2008ம் ஆண்டு அயர்ன்மேன் படத்தின் மூலம் தொடங்கிய இந்த சினிமாடிக் யூனிவெர்ஸ், 2019ம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் மூலம் அதன் உச்சத்தை எட்டியது. அந்த படம் உலக அளவில் 2.79 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக வாரிக் குவித்தது. அதுவரையில் அந்த சினிமாடிக் யூனிவெர்ஸில் வெளியான பெரும்பாலான படங்கள், வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிகளவில் வெற்றி பெற்றன. ஆனால், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்திற்கு பிறகு, மார்வெலின் எந்தவொரு திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிலான வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் தான், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் எனும் உலக அறிந்த நட்சத்திரங்களால், மிகவும் பிரபலமான டெட்பூல் & வொல்வரின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு புதிய படம் உருவாகியுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மார்வெல் நிறுவனத்திற்கு டெட்பூல் & வொல்வரின் பெரும் வெற்றியை தரும் என கூறப்படுகிறது. ஜுலை மாதம் 26ம் தேதி வெளியாக உள்ள இப்படம், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
     

    மேலும் காண

    Source link