Tag: Madhavan
• shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral
shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral
நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவகன் நடித்துள்ள ஷைத்தான் (Shaitaan) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
இயக்குநர் விகாஸ் பாகல் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன் – ஜோதிகா மகளாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார்.
‘ஷைத்தான்’ எனும் பெயருக்கேற்றபடி வசியம், மாந்திரீகம், அமானுஷ்யம் என இப்படத்தின் ட்ரெய்லரில் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ஷைத்தான் படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில், மொபைல் சார்ஜ் போடுவதற்காக கேட்டு 15 நிமிடங்கள் தருமாறு அஜய் தேவ்கன் – ஜோதிகா தம்பதியின் வீட்டுக்கு மாதவன் வருகிறார். அதன் பின் இவர்களது மகளை வசியம் செய்யும் மாதவன், மாந்திரீகம், அமானுஷ்யம் என பரபரப்பைக் கிளப்பும் வகையில் படத்தின் ட்ரெய்லர் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில் பில்லி சூனிய உருவ பொம்மைகள் இடம்பெற்று, மாதவன் குரலும் சேர்ந்து பயமுறுத்தும் வகையில் அமைந்திருந்தன. “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்ற கேள்வியுடன் பில்லி சூனிய பொம்மையுடன் டீசரிலேயே தன் குரலால் மாதவன் பயமுறுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் அதனைவிட இரண்டு மடங்கு பயமுறுத்தி திகில் கிளப்புகிறார்.
ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் சைத்தானாக வெரைட்டி காண்பித்துள்ள மாதவனின் நடிப்பு ட்ரெய்லரில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதேபோல் சூர்யாவுடனான திருமணத்துக்குப் பின் பிள்ளைகளை கவனித்துக் கொண்டு செட்டிலான ஜோதிகா, கோலிவுட்டில் கம்பேக் கொடுத்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஷைத்தான் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் தருகிறார். ஷைத்தான் திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ALSO READ | Jothimani: விஜய் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்! கலங்குகிறதா தமிழக காங்கிரஸ்! பேசு பொருளாகும் ஜோதிமணி பேச்சு!
மேலும் காண
Source link
• 18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை
18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை
நடிகர் மாதவன் – இயக்குநர் சீமான் கூட்டணியில் உருவான தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இப்படியான நிலையில் தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இப்படம் உருவானதை நேர்காணல் ஒன்றில் சீமான் பேசியிருப்பார். அதில், “தம்பி படம் உருவானதே போராட்டம் தான். அந்த கதையை எல்லா ஹீரோவிடமும் சொன்னேன். ஆனால் நடிக்க தயங்குகிறார்கள். அப்போது நடிகர் மனோபாலா என்னை அழைத்தார். அப்போது தம்பி பட கதையை சொன்னதும், இதுல ஏன்டா யாரும் நடிக்க மாட்டேங்குறாங்கன்னு புலம்பினார். பின்னர் சத்யஜோதி தியாகராஜனை சந்தித்து தம்பி படம் பற்றி சொன்னார். அவரும் அழைத்து வர சொல்லி கதை கேட்டார். நல்லாருக்குது, ஏன் யாரும் நடிக்க மாட்டேங்கிறார்கள் என தியாகராஜன் சொல்கிறார். நான் ஸ்ரீகாந்தை கேட்டேன். ஒருநாள் காலை 7 மணிக்கு தியாகராஜன் போன் பண்ணி மாதவன் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்டார்.
நான் எதுனாலும் ஓகே என சொன்னேன். அப்ப மாதவன் ஆய்த எழுத்து படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். முதலில் 2 நாட்கள் டைம் கொடுங்க, நான் கதை கேட்கிறேன் என சொன்னவர்  அன்று மதியமே கதை சொல்ல அழைத்தார். நான் கதை சொல்லி முடித்ததும் மாதவனுக்கு ரொம்ப பிடித்தது. ரன் படத்துக்குப் பின் கதை கேட்டு முடித்ததும் நடிக்க முடிவு செய்த படம் இதுதான் என ஒப்புக்கொண்டார். ஆனால் ரூ.1 கோடி சம்பளம் கேட்டு பிடிவாதமாக இருந்தார். அது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. கதை தியாகராஜனிடம் இருந்து ஆர்.பி.சௌத்ரியிடம் சென்றும் மாதவன் சம்பளம் பிரச்சினை தீரவில்லை. அதன்பிறகு டாக்டர் முரளி மனோகரனிடம் படம் சென்றது.
மாதவன் நடிப்பை கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார். தம்பி படத்துக்குப் பின் பகலவன் படத்தின் கதையை மாதவனிடம் சொன்னேன். ஆனால் மறுபடியும் கனமான ஒரு கதையில் நடிக்க வேண்டுமா என கேட்டார். அந்த கதையில் மாதவன் நடித்திருந்தால் என் வாழ்க்கையை மாறியிருந்து இருக்கும். அப்படம் தம்பி மாதிரி இரண்டு மடங்கு இருக்கும்” என சீமான்  தெரிவித்திருப்பார். தம்பி படத்துக்குப் பின் மாதவன் – சீமான் கூட்டணி வாழ்த்துகள் என்ற படத்தில் இணைந்தனர். ஆனால் அப்படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
• Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement
Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் ஷைத்தான் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு  ஷைத்தானின் எழுச்சியை காணும் நேரம் இது. மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாகிறது” என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
#Shaitaan is coming for you. Taking over cinemas on 8th March 2024.@ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl @jiostudios @ADFFilms @PanoramaMovies @PanoramaMusic_ pic.twitter.com/MIaL2qqTuc
— Ajay Devgn (@ajaydevgn) January 19, 2024
‘ஷைத்தான்’ படத்தின் போஸ்டரில் பில்லி சூனிய உருவ பொம்மைகளை இடம்பெற்றுள்ள நிலையில், அமானுஷ்ய திரைப்பட பாணியில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜய் தேவ்கன் அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன் மைதான் மற்றும் ஆரோ மே கஹா தம் தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ரெய்டு 2 , டி டி பியார் டி சீக்வெல், சிங்கம் அகெய்ன் மற்றும் சன் ஆஃப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கன் மிகவும் பிஸியான ஷெட்யூல் பாலோ செய்து வருகிறார்.
Source link
• Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Source link