Tag: Leo 2

  • Cinema Headlines Today February 18th Tamil Cinema news today thalaivar 171 leo 2 sivakarthikeyan vijay vanangaan lokesh kanagaraj

    Cinema Headlines Today February 18th Tamil Cinema news today thalaivar 171 leo 2 sivakarthikeyan vijay vanangaan lokesh kanagaraj


    விலகும் விஜய்! ஆனாலும் லியோ 2க்கு வாய்ப்பிருக்கு: எப்படி? – லோகேஷ் ஓபன் டாக்!
    தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.  இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க
    எழுதிகிட்டே இருக்கேன்! தலைவர் 171 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…
    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் படிக்க
    வாவ்! அழைப்பிதழ் இல்ல; பட்டாசு இல்ல! பசுமை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கில்லி’ படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் ‘தடையறத் தாக்க’. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க
    “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது” – சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரம்!
    கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் படிக்க
    வேகமாக பிக்-அப் ஆகும் ஜெயம் ரவியின் சைரன்.. 2 நாள் வசூல் இவ்வளவா!
    ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். மேலும் படிக்க
    விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார். மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது

    Lokesh Kanagaraj Speak About LEO 2 Conform Thalapathy Vijay LCU | Lokesh Kanagaraj: லியோ 2 உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது


    தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. 
    இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.  இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதற்கடுத்து ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    His intentions,goal is different now, but if he permits time & calls me to work on it #Leo2 Is 100% Possible – director lokesh pic.twitter.com/4pWb32jTcQ
    — Actor Vijay Fans (@Actor_Vijay) February 17, 2024

    இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “ லியோ படத்தின் இரண்டாம் பாகம் அமைய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் அமைய வேண்டும். தளபதி விஜயின் குறிக்கோள் வேறு எங்கோ உள்ளது. அதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். லியோ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. தளபதி விஜய் எப்போது அழைத்தாலும் லியோ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சந்திக்க நான் தயாராக உள்ளேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். 
    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்திருந்தனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீசானது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுதாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது லியோ படம். 
     
    லியோ படத்தின் பெரும்பலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால், லியோ படத்தை காஷ்மீரில் படமாக்க அனுமதி அளித்த அப்பகுதி அரசு நிர்வாகத்திற்கும் நன்றி கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காஷ்மீரில் லியோ படத்தை ஒத்துழைப்பு அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை என பாதுகாப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
    காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியிருந்தது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படும் என அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருந்தது. 

    மேலும் காண

    Source link

  • Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film

    Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film

    Leo2 Shoot: லியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு, எதிர்கால திட்டத்திற்கு காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், லியோ 2 படமாக்க திட்டமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
     
    கடந்த அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்திருந்தனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீசானது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுதாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது லியோ படம். 
     
    லியோ படத்தின் பெரும்பலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. இதனால், லியோ படத்தை காஷ்மீரில் படமாக்க அனுமதி அளித்த அப்பகுதி அரசு நிர்வாகத்திற்கும் நன்றி கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காஷ்மீரில் லியோ படத்தை ஒத்துழைப்பு அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, அதன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தகவல் மற்றும் சுற்றுலாத்துறை என பாதுகாப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


    We would like to extend our heartfelt gratitude to Government of J&K, Lt Governor Mr Manoj Sinha, Information Deptt, Tourism and all Security Agencies for cooperating for our film *LEO* in Kashmir. #Kashmir will always remain as a part of our future plans. Kudos to everyone who…
    — Seven Screen Studio (@7screenstudio) January 8, 2024

    காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியுள்ளது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படுமா என்ற கேள்வியை ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். 
     

     

    Source link