Tag: Khelo India Youth Games TN

• Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில்  நடைப்பெற்று வரும்  KHO-KHO விளையாட்டு!

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு!

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு!

Source link

• Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

கேலோ இந்தியா (Khelo India)

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று (27.01.2024) மற்றும் நாளை (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே. கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி. திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்திக்கொள்ளவும்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி:

ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள்போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

தங்கம் வென்ற தமிழக வீரர்கள்:

அந்த வகையில், இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோகுல் பாண்டியன் தங்கம் வென்றார். அதேபோல்,உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அலைஸ் தேவா பிரசன்னா. மகளிர் 1000 மீட்டர் sprintmedleyrelay போட்டியில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வென்ற அசத்தியது.

முன்னதாக, இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும்  தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியது. ஆண்கள் அணி 86 – 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. அதேபோல் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி 70 – 66 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link