<p>தமிழ்நாட்டில் நடந்து வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கங்களை வென்று அசத்தி வருகின்றது. இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும் தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியுள்ளன. ஆண்கள் அணி தனது போட்டியில் 86 – 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. அதேபோல் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி 70 – 66 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் 18 தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அணி மொத்தம் 51 பதக்கங்கள் வென்றுள்ளது. மகாராஸ்ட்ரா அணி 74 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் ஹரியானா 59 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. </p>
<p>கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.</p>
Tag: Khelo India Youth Games 2024:கேலோ இந்தியா – கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு அணிகள்
Khelo India Youth Games 2024: கூடைப்பந்து போட்டியில் கெத்து காட்டிய தமிழ்நாடு; தங்கம் வென்ற ஆடவர் – மகளிர் அணிகள்


