Tag: karthi mari selvaraj

• cinema headlines today march 17th actor kavin rajinikhanth kaduvetty movie actor vishal
cinema headlines today march 17th actor kavin rajinikhanth kaduvetty movie actor vishal

Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம்  இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, பிரதாப    சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா பாடல்களுக்கும், கார்த்திக் ராஜா பின்னணி இசையும் இப்படத்துக்கு அமைத்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. மேலும் படிக்க

Actor Vishal: கனவு நனவாகிறது.. மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த விஷால் – என்ன நடந்தது?

“ஹீரோவாக என்னுடைய பயணம் 25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும் படிக்க

Kaaduvetty: எட்டுத்திக்கும் வெற்றி.. காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவருக்கு வடமாவட்டங்களில் தனிப்பட்ட செல்வாக்கு என்பது உண்டு. இன்றைக்கும் குருவை தங்கள் வீட்டு தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.மேலும் படிக்க

Actor Kavin: கவினுடன் இணையும் பிரபு.. வெளியான சூப்பர் அப்டேட்.. எந்த படம் தெரியுமா?

விஜய் டிவியில்   ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம்  பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில்  நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. மேலும் படிக்க

மேலும் காண

Source link

• Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!
Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!

மாரி செல்வராஜ் கார்த்தி காம்போ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தனது அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பிசியாக நடத்தி வருகிறார். இந்த நிலையில், கார்த்தியின் புதிய படம் குறித்த அப்டேட் கடந்த வாரம் வெளியானது.

தமிழ் சினிமாவில் சமூகநீதி பேசும் படங்களை இயக்குபவர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்தார்.  உண்மைச் சம்பவங்களை மையப்படுத்திய மாரி செல்வராஜின் படைப்புகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஷூட்டிங் எப்போது?

இதனைத் தொடர்ந்து வாழை என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, துருவ் விக்ரம் படத்தில் மாரி செல்வராஜ் கமிட் ஆகி உள்ளார். விளையாட்டை மையப்படுத்திய இப்படம் பற்றிய பேச்சு நீண்ட நாட்களாகவே இருது வரும் நிலையில், மாரி செல்வராஜ் இப்படத்தை விரைவில் இயக்க உள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படியான நிலையில், மார்ச் 7ஆம் தேதி மாரி செல்வராஜின் படம் குறித்த அப்டேட் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம்  இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பான் படத்திற்கு பிறகு, கார்த்தி தற்போது பிரேம் இயக்கத்திலும், நலன் குமரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில், பிரேம் இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாக தெரிகிறது. தற்போது, நலன் குமரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ’கார்த்தி 28’ படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link