Tag: Kanchipuram silk sarees

  • Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

    Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

    காஞ்சிபுரம் பட்டு சேலை ( kanchipuram silk sarees )
    காஞ்சிபுரம் என்பது கோவில் நகரமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை உருவாக்கி தந்தது காஞ்சிபுரம் பட்டு. கைத்தடியில் உருவாகும் காஞ்சிபுரம் பட்டு இருக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது, நெசவாளர்கள் வேலை இழந்து வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல இன்னல்களுக்கு மத்தியில் இன்னும் சிலர் தங்கள் தொழிலை விடாமல் தொடர்ந்து நெசவு செய்து வருகின்றனர்.
     
    அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் பட்டுப்புடவைகள் தயாரிப்பது மட்டுமில்லாமல் பட்டுப் புடவைகளில் , விரும்பும் உருவங்களை வடிவமைத்து தந்து வருகிறார். தொடர்ந்து தனது நெசவுத் தொழிலில் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்கியும் வருகிறார் அவர். அந்த வகையில் தற்பொழுது ஒரு புடவையை ஒரே நாளில், உருவாக்கும் தறியை அமைத்து சாதித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா ( Arignar Anna Memorial Park – Kanchipuram )
    காஞ்சிபுரம் அடுத்துள்ள கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டுப்பூங்காவில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் குமரவேல் என்கின்ற பட்டு நெசவு வடிவமைப்பாளர் மூலம், பிரம்மாண்ட கைத்தறியை அமைத்து அவற்றில் 24 அடி அகலம் கொண்ட வாலாங்கி சேலையை வடிவமைத்துள்ளார். பெரிய வணிக தலங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் மிகப் பெரிய வடிவமைப்பிளான கைத்தறி சேலையாகும்.

    வடிவமைக்க 5 நெசவாளர்கள்
    இதுபோன்ற வாலாங்கி சேலை 24 அடி அகலமும் வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரி அதிகப்படியான நீளமும் கொண்டு தயாரிக்கலாம் என்றும், இவற்றை வடிவமைக்க 5 நெசவாளர்கள் உடன் பணியாளர்கள் 4 பேர் மற்றும் மின்சார வடிவமைப்பு பொறியாளர்கள் என குழுக்களாக செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற வாலாங்கி சேலைகளை வடிவமைக்கலாம் எனக் கூறுகிறார் குமரவேல். மேலும் பயனாளிகள் கேட்கும் வடிவத்தில் வாலாங்கி சேலை காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் தயார் செய்து தரலாம் என்றும் வடிவமைப்பாளர் குமரவேல் தெரிவித்தார்.

    ஒரே நாளில் சேலை
    சராசரியாக கைத்தறி நெசவு செய்து பெண்கள் அணியும் பட்டு 6 கொண்டதாகவும் சேலைகள் 50 இன்ச் அகலமும் 240 இன்ச் நீளமும் கொண்டிருக்கும், இவை குறைந்தது  வடிவமைப்பதற்கும் சேலை உற்பத்தி செய்யவும் 10 முதல் 15 நாட்களாவது ஆகும். 
    தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள பட்டு தறியில், அகலமும் வடிவத்திற்கு ஏற்றார்ப்போல் அதிகப்படியான நீளம் உருவாக்கப்பட்டுள்ளதால், 5  நெசவாளர்கள் கொண்டு காலையில் 6:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் ஒரே நாளில் அனைத்து ரக பட்டுப் புடவைகளையும், செய்து முடிக்க முடியும்.

     
    இந்த பிரமாண்ட கைத்தறியை வடிவமைக்க மூன்று மாதம் ஆனதாகவும் , இது கைத்தறி நெசவு தொழில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வரவும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் குமரவேல். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள தறியின் மூலம் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல்வேறு கோவில் கோபுரங்களை முழுமையாக பட்டுப் புடவைகளை கொண்டுவர முடியும் பல்வேறு நடிகர்கள் புகைப்படம் உட்பட அனைத்து விதமான புகைப்படங்களையும் பட்டு சேலையில் கொண்டுவர முடியும் என தெரிவிக்கிறார். பாரம்பரியம் மாறாமல் கைத்தறியில் புடவையை உருவாக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கும், இந்த நெசவாளர்களை நாம் பாராட்டலாமே

    Source link