<p>’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!</p>
Tag: Kamal Hassan

Rajinikanth : ’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!

| டென்ஷனான நடிகை கௌரி கிஷன்
Kamalhaasan: கமல்ஹாசனை கடைசியாகப் பார்க்க விரும்பிய ஸ்ரீவித்யா: இயக்குநர் சந்தானபாரதி சொன்ன தகவல்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் “ஸ்ரீவித்யா என்னுடைய காதலி, இதை சொல்ல நான் பயப்படவில்லை” என வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் கமல்ஹாசன் – ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Aaradhya Bachchan: அம்மா ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸாக வளர்ந்த மகள்: புது லுக்கில் அசத்தும் ஆராத்யா பச்சன்!
12 வயதாகும் ஆராத்யா இது வரையில் குட்டிப் பாப்பாவாக முகத்தின் பெரும்பாலான பகுதியை முடியை வைத்து மறைத்துக் கொள்ளும் படியான ஹேர்ஸ்டைலில் தான் எப்போதுமே தோன்றுவார். ஆனால் முதல் முறையாக மிகவும் வித்தியாசமான ஒரு ஹேர்ஸ்டைலில் அம்பானி வீட்டு விழாவில் கலந்து கொண்டார். ஆராத்யாவை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்து இருந்தனர். இது உண்மையிலேயே ஆராத்யா தானா? என அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து இருந்தார். பார்க்க அச்சு அசல் அவரின் அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றமளிக்கிறார் என்பது தான் அனைவரின் விமர்சனமாக இருந்தது. அம்மா அப்பா மகள் என மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். மேலும் படிக்க
Tamil Nadu Government Film Awards: இன்று தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா.. யார் யாருக்கு விருதுகள்..? முழு பட்டியல் இதோ!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறுகிறது. இன்று சென்னையில் நடைபெறும் 2015ம் ஆண்டுக்கான தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விருது விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் படிக்க
Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா? – டென்ஷனான நடிகை கௌரி கிஷன்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட, அதற்கு இணையவாசிகள் பலவிதமான கமெண்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கௌரி கிஷன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Santhosh Narayanan: ஏ.ஆர்.ரஹ்மானும் ஏமாந்துள்ளார்: என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் விளக்கம்
எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்த புதியதொரு சர்ச்சை தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த சந்தோஷ் நாராயணன், இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதில் என் யூட்யூப் வருமானமும் அந்த லேபிளுக்கே செல்கிறது. இந்த மோசமான அனுபவத்தால் நான் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க போகிறேன். தனி இசைக் கலைஞர்களுக்கென வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தளங்கள் தேவை” எனப் பேசி இருந்தார்.மேலும் படிக்க
மேலும் காண

SK 21 Update: வெறித்தனம்! ஆக்ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு
<p>தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததால், படக்குழு அயலான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. </p>
<p>நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் இரண்டாம் பாகம் உருவாகும் திரைப்படம் அயலான் என்ற புகழையும் பெற்றுள்ளது. பொங்கலுக்கு ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைத்து வெளியான அயலான் திரைப்படம் வசூலில் 50 கோடி வசூல் செய்து பெங்கல் ரிலீஸில் வெற்றிப் படமாக அமைந்தது. </p>
<p>இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்த தகவலில், ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/GRDOwHaJ5Iw?si=ssqSM4NxLoFJqjSt" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்த படத்திற்காக நடிகர் சிவக்கார்த்திகேயன் மேற்கொண்ட உடற்பயிற்சிகள், துப்பாக்கியை கையாளுதல் பயிற்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில், வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். </p>
sivakarthikeyan 21st movie update will be revealed today | SK21 Update: 5 மணிக்கு ரெடியா இருங்க.. வெளியாகிறது கமல்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்
சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பரவலான ரசிகர்களை சென்றடைந்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கல்லூரி மாணவனாகவும், ராணுவ வீரனாகவும் இரண்டு தோற்றத்தில் சிவகார்த்திகேயனை நாம் எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இப்படத்தின் டைட்டில் அல்லது மற்ற அப்டேட்களை படக்குழு வெளியிடாமல் வைத்துள்ளது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிபடுத்து வகையில் அமைந்துள்ளன.
எஸ்.கே 21 ஃபர்ஸ்ட் லுக்
#SK21 Loaded And Locked 🔒 pic.twitter.com/olwiMKDswJ
— Mani Kandan (@ManiKan31941036) February 9, 2024எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகியது, இதனால் படக்குழு மொத்தமும் கமலின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பதாகவும் இந்த பகுதிகள் முடிந்த கையோடு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இன்று மாலை அப்டேட்
இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் சிவகார்த்திகேயன் படத்துக்காக தயாரான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆக இன்றைய அப்டேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A Journey of Sweat & Triumph unravels at 5pm Today!#HeartsonFire#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM @khanwacky… pic.twitter.com/747WDNasM3
— Raaj Kamal Films International (@RKFI) February 12, 2024மேலும் படிக்க : Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!
Shruti hassan : வுமன் இன் பிளாக் : அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!மேலும் காண

At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் பேசியதாவது,
” இப்படி ஒருநாளை எதிர்பார்க்க முடியாது, இதற்கு ஒத்திகை எதுவும் பார்க்க முடியாது. நான் முதலில் விஜயகாந்தினை சந்தித்தபோது என்னிடம் எப்படி பேசினாரோ, அப்படித்தான் அவர் உச்சநட்சத்திரம் ஆன பின்னரும் பேசினார். விஜயராஜ்க்கும் விஜயகாந்திற்கும் வித்தியாசமே தெரியாமல் இருந்ததற்கு காரணம் நான் அல்ல, அவர்தான். அவரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பல விமர்சனங்களையும் அவமானங்களையும் பார்த்து மேலோங்கி வந்தவர். அதற்காக எந்த காழ்ப்பையும் அவர் வைத்துக் கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். இதில் பாராட்டவேண்டிய விஷயம், நாம கடந்து வந்துவிட்டோம் அவரவர் அவரவர் பாதைகளை பார்த்துக்கொள்ளட்டும் என்று இல்லாமல் அவர்களுக்காக போராடும் ஒருகுரல் விஜயகாந்த். அவர் நட்சத்திரம் ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தது என்றாலும், ஆரம்ப நடிகர்களுக்கு கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் ஒரு குரலாக இருந்தார். தமிழ்நாடு பெரிய அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் வந்த கூட்டம் இவருக்காவும் வந்ததைப் பார்த்தேன். விஜயகாந்த் சேர்த்த சொத்து என்றால் அதுதான்.
விஜயகாந்த் மற்றவர்களுக்கு உதவுவது பலருக்குத் தெரியாது. நாளிதழில் கட்டுரை ஒன்று வந்திருந்தது. 1998ஆம் ஆண்டு விஜயகாந்த் பிறந்த நாளில் நடந்தது. பொறியியல் கல்லூரியில் படிக்க சீட் கிடைத்தும் பணமில்லாததால் படிக்க முடியாத மாணவர்கள் பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு, அந்த மாணவர்களின் விடுதி, கல்லூரி செலவு என அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். இன்றைக்கு அந்த மாணவர்கள் நடுத்தர வயதை எய்தியிருப்பார்கள். அவர்களும் இன்றைக்கு குழந்தை பேறுகளுடன் நன்றாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். இதனையாரும் மறக்கமாட்டார்கள்.
70, 80களில் சமூக, அரசியல் கோபங்களை பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்துள்ளார். விஜயகாந்த் மறைந்த தினத்தில் அவரது பூத உடல் கோயம்பேட்டில் வைத்திருந்தபோது நான் கூறினேன், அவரது குணங்களில் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவரது துணிச்சல். கோபம் வந்துவிட்டால் கிராமத்து மனிதரைப் போல் நாக்கை மடக்கிகொண்டு கேட்கவேண்டியதை கேட்டுவிடுவார். அது எந்த மன்றமாக இருந்தாலும் சரி. அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியுள்ளது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்தான்.
விஜயகாந்த் நடித்த முதல் படமான தூரத்து இடிமுழக்கம் விருது விழாவிற்குச் சென்றது. அதன் பின்னர் அவர் கமர்ஷியல் ஹிரோவாக மாறினார். ராதாரவி இப்போது குறிப்பிட்டதைப் போல் துணை நடிகர்களிடம் ஒரு காட்சியை எப்படி சிறப்பாக எடுக்கலாம் என்பது கேட்பார் என்பதில் இருந்தே தெரிகின்றது. நானே அவருடன் ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்துள்ளேன். அங்கு அவர் என்னை கவனித்துக் கொண்ட விதம் இன்றும் ரீங்கரிக்கின்றது. அவருக்கு இருந்த நண்பர்கள் இங்கே கூடியுள்ளார்கள். அவருக்கு புடிக்காத மனிதர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த அளவிற்கு தைரியம் உள்ளவர். அந்த மாதிரியான குணாதியங்களை நாம் பிரதிபலிக்கலாம், காப்பியடிக்கலாம் தப்பில்லை. அவர்போல் இல்லை என்று சொல்வது வழக்கம், அவர் போல் இருக்க முயற்சி செய்வோம். குட் பை விஜயகாந்த், குட் பை கேப்டன்” இவ்வாறு பேசினார்.
Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”
நடிகர் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசிய சின்னத்திரை பிரபலங்களான குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் நடிகை மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
Hope it doesn’t affect Pugazh’s cinema career… pic.twitter.com/bdJXtk94HF
— தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல நாட்கள் மாயாவை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தன. வார இறுதி நாட்களில் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் கமல், மாயாவை கண்டும் காணாமல் விடுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும் மாயா சீசன் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க கமலும் ஒரு காரணம் என்றெல்லாம் கருத்துகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
மன்னிப்பு வீடியோ… மறப்போம் மன்னிப்போம்✌️Credit: @Gymswathi https://t.co/s1GaYzC5hM pic.twitter.com/gAMI6bHPV8
— தமிழ் பொழுதுபோக்கு 3.0 🎞️ (@vaangasirikalam) January 13, 2024இப்படியான நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி இருவரும் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினர். துபாயில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் புகழ் கேட்கும் கேள்விகளுக்கு குரேஷி கமல் குரலில் பதிலளித்திருப்பார். அதில், “சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என மாயாவை வைத்து கமல் பதில் சொல்வது போல குரேஷி தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இணையத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு குரேஷி மற்றும் புகழ் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “நானும், குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் இருந்த கருத்துகள் கமல் ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் அதுபோல் செய்யமாட்டோம். நாங்கள் செய்தது பெரிய தவறுதான். இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க: Dhanush – Udhayanidhi Stalin: கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!





