விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்

நேரம் : காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதிகள் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும், 25க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணை பெறலாம்.

தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tag: Job Fair

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

Job fair: திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இந்த தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் (17.02.2024) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வி தகுதி

எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

சான்றிதழ்களின் நகல்

முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Job Fair 2024 at Chengalpattu held on pallavaram dated on 17th February tnn
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.02.2024 சனிக்கிழமை அன்று பல்லாவரம் வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (VISTAS) செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திட உள்ளது.
தனியார் துறை நிறுவனங்கள்
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
யார் யாருக்கு வாய்ப்பு
இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி/பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.
வயது வரம்பு என்ன ?
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 17.02.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்ய வேண்டியவை என்ன ?
மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேலும் காண

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

கல்வி தகுதி

நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முன்பதிவு

இச்சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.inprivatejobstn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 13.02.2024 (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 30.01.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி;
இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
அடையாள அட்டை நகல்கள்;
முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Job Alert: நர்சிங் படித்தவரா?ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?
Job Fair Agniveer Vayu Recruitment 2024 Apply For Indian Air Force Tiruvannamalai Dist – TNN
(Tiruvannamalai News திருவண்ணாமலை) இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு, இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜனவரி 17 2024 முதல் பிப்ரவரி 06 2024 வரையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது
வயது வரம்பு;
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு ஜனவரி 02 2004 முதல் ஜுலை 02 2007 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் 21 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி;
கல்வித் தகுதியாக Central > State > UT உறுப்பினராகப் பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10,12 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Instrumentation Technology / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக சிஓபிஎஸ்இ உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய, மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை, 10, 12 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதி;
உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ ஆண்களும் 152 செ.மீ பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மாதம் சம்பளம் ;
இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ 30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ550 மற்றும் புளுவு வரியுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில் தேர்வு முறை தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்
நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
வயது: 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணைபெறலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.