Tag: january 17th episode

  • Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

    Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

    மனோஜ் ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவ் சென்றிருக்கிறார். அங்கு முதலாளி, மனோஜ் இடம், “வுமென்( women) கிட்ட வேலை பார்க்க மாட்டேனு சொன்னியே அந்த வுமன் இல்லனா நீ இந்த உலகத்துக்கே வந்திருக்க முடியாது” என கூறுகிறார். மேலும் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், “உன்னை மாதிரி மைண்ட் செட் இருக்குற மென்(men) கிட்ட போய் வேலை பாரு” என்றும் சொல்லி விடுகிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகிறார். 
    மறுப்பக்கம் ஸ்ருதி ரோகினியிடம், ”யார் எப்படி போனா முத்துவுக்கு என்ன வந்துச்சி, தேவையில்லாம உங்கள கேள்வி கேட்டுகிட்டு இருக்காரு” என கூறுகிறார். “மனோஜ் வேலைக்கு போகாதது அவருக்கு தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட பேசி முடிச்சிருக்கனும். தேவையில்லாம எல்லோர் முன்னாடியும் கொண்டு வந்திருக்க கூடாது” என்கிறார். பின் ஸ்ருதி, மனோஜ் ஏன் இண்டர்வியூக்கெல்லாம் போகனும் நீங்க உங்க பிஸ்னஸ்ல ப்ராஞ்சஸ் ஆரம்பிங்க என்கிறார் ஸ்ருதி. அதுக்கு ”நான் பணத்துக்கு எங்க போறது” என்கிறார் ரோகினி.” உங்க அப்பாகிட்ட கேளுங்க” என்கிறார் ஸ்ருதி. 
    இதையெல்லாம் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜயா ரூமுக்குள் சென்று ”அப்பாக்கிட்ட கேட்டு ஒரு பிஸினஸ் ஆரம்பிமா, அதுக்காக உரிமை இல்லைனு ஆயிடாது இல்ல” என்கிறார். ”இல்ல ஆண்டி நான் காசு கேட்டா அவரு நம்ம வீட்டப்பத்தி என்ன நினைப்பாரு” என்று சொல்கிறார் ரோகினி. ஸ்ருதி ”எனக்கும் டப்பிங் ஸ்டூடியோ ஆரம்பிக்கனும்னு பிளான் இருக்குங்க ஆண்டி” என்கிறார் ஸ்ருதி. அதற்கு விஜயா, “ சரியா சொன்னமா நாம பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் பன்னாதான் நல்லது. எனக்கூறி, பூக்கடை பிஸினஸ் குறித்து ,இதுல எல்லாம் என்ன கிடைக்கப் போகுது” என்கிறார் .  அதற்கு ஸ்ருதி ”இல்ல ஆண்டி ப்ளவர் ஷாப் கூட நிறைய ப்ரான்ச் ஓபன் பன்னலாம்” என்கிறார்.
    விஜயா, ரோகினியிடம் “உங்க அப்பா கிட்ட சொல்லி மனோஜ்க்கு ஒரு பிஸினஸ் வச்சி கொடுக்க சொல்லு, பாவம் அவனும் எவ்ளோ நாளைக்குதான் வேலைக்கு போவான்” என்கிறார். பின் பதில் கூறி விட்டு அங்கிருந்து செல்லும் ரோகினி, மனோஜிக்கு கால் செய்து இண்டர்வியூவ் குறித்து கேட்கிறார். ஏற்கனவே வேலைப்பார்த்த கம்பெனிக்கு செல்ல சொல்கிறார் ரோகினி. அங்கேயும் சென்றுவிட்டதாகவும் வேலை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார் மனோஜ். 
    ரவி ரோகினி இடம் பீல் பண்ணாதிங்க அண்ணி, அண்ணுக்கு வேலை கிடைத்து விடும் என்கிறார். அதற்கு ரோகினி, ”வெய்ட் பன்னலாம் ரவி ஆனா இந்த வீட்டோட சூழ்நிலை அப்படி இல்லையே” என்கிறார். அதற்கு ஸ்ருதி முத்து பத்திதானே சொல்றிங்க என பேச ஆரம்பிக்கிறார். அங்கு வரும், மீனா, ஒரு ஆள் இல்லாத போது அவர்களை பற்றி பேசுவது தவறு என வாக்குவாதம் செய்கிறார். இதனையடுத்து ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து பொங்கல் வரிசை வைக்கிறார். அதில் நகை  உள்ளிட்டவை உள்ளன. இதனையடுத்து மீனா வீட்டில் இருந்து வந்து வரிசை வைக்கின்றனர். அவர்களை விஜயா இன்சல்ட் செய்கிறார். அவர்களுக்கு முத்து பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

    Source link