டெஸ்ட் கிரிக்கெட் தொடர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. அதன்படி சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களை குவித்தது.
இதனையடுத்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சாக் கிராலி 31 ரன்களும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இன்றைய போட்டியில் அவர் ஒரு மாபெரும் சாதனையை செய்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட்:
அதாவது இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.
அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2557 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 1 ரன்னை எடுத்த போது ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்:
1. ஜோ ரூட் : 2557
2. ரிக்கி பாண்டிங் : 2555
3. அலெஸ்டர் குக் : 2431
4. க்ளைவ் லாய்ட் : 2344
5. ஜாவேத் மியாண்டட்: 2228
மேலும் படிக்க: Australian Open final: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… சாம்பியன் பட்டத்தை வென்ற சபலெங்கா!
மேலும் படிக்க: IND vs ENG Test: ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திய பவுலர்கள்; டஃப் கொடுத்த போப் சதம்; இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை
Tag: India vs england 1st test

Joe Root Scripts History, Goes Past Ricky Ponting To Become Highest Run-scorer Against India In Test Cricket

IND Vs ENG Test First Innings…Indian Team Stronger Than England
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 66 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் – ஸ்ரேயாஸ் அயயர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னிலையை நோக்கி கொண்டு சென்றது.
முன்னிலையில் இருக்கும் இந்தியா:
சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே எஸ் பாரத் ஜோடியும் சிறப்பாக விளையாடி அணியின் முன்னிலையை வலுப்படுத்தும் நோக்கில் பேட்டிங் செய்தது.
அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் அடித்தார். மறுமுனையில் கே எஸ் பாரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்துள்ளது. இது இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் அதிகமாகும். ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்
மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய அணி சிறப்பாக 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ஆனல் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சொதப்பலாக விளையாடினார்.
தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்:
அதன்படி, மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய அவர் 66 பந்துகள் களத்தில் நின்று வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது. அதற்கான காரணம் என்னவென்றால் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குறிப்பாக ஆரம்பத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் அதன்பின்னர், ஜெய்ஸ்வாலின் வருகையால் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வருகிறார். இதிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் சுப்மன் கில்.
அவர் விளையாடிய கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதன்படி, கடைசி பத்து இன்னிங்ஸ்களில் 13, 18, 6, 10, 29*, 2, 26, 36, 10, and 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு வீரர்கள் அணியில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கும் சூழலில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சுப்மன் கில் வீணடித்து வருவது இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
மேலும் படிக்க: Ind vs Eng 1st Test: விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன் தெரியுமா? ரோஹித் சர்மா விளக்கம்!

IND Vs ENG 1st Test Yashasvi Jaiswal Fifty In Just 47 Balls Dominating England Attack
இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 246 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் 64.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது.
அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்:
இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஜோடி அமைத்து 4 ஓவர்களில் இந்திய அணிக்கு 35 ரன்களை எடுத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதத்தை பதிவு செய்தார். அதன்படி, 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களை விளாசினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் பதிவு செய்திருக்கும் இரண்டாவது அரைசதம் இது.
FIFTY FOR JAISWAL….!!!!!Fifty from just 47 balls – he has been dominating England attack, incredible batting from the youngster. 🫡 pic.twitter.com/Lak6HaEfnJ
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பாஸ்பால் முறையை பயன்படுத்தி இந்திய அணியினரை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பாஸ்பாலை பொய்யாக்கி ஜெய்ஸ்பால் ஆட்டம் ஆடியுள்ளார் ஜெய்ஸ்வால். முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர் ஜெய்ஸ்வால். இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகலில் விளையாடியுள்ள இவர் 1 சதம் மற்றும் 1 அரைசதம் எடுத்திருக்கிறார். அதேபோல், 357 ரன்களை குவித்துள்ளார்.
Jaisball at Hyderabad….!!!!India 35 for 0 from just 4 overs. 🤯 pic.twitter.com/iTX4Em41U7
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 171 என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தருவதில் வல்லவராக திகழும் ஜெய்ஸ்வால் இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST:கும்ப்ளே – ஹர்பஜன் ஜோடியின் சாதனையை முறியடித்த அஸ்வின் – ஜடேஜா ஜோடி! அப்படி என்ன சாதனை?

Virat Kohli Fan Invades Pitch Touches Rohit Sharma Feet India Vs England 1st Test- Watch Video
முதல் இன்னிங்ஸ்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
காலில் விழுந்து வணங்கிய கோலி ரசிகர்:
பின்னர், இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெஸ்வால் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். அப்போது, கேப்டன் ரோகித் சர்மா இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக களத்தில் நின்றிருந்த போது, மைதானத்தில் இருந்து விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி களத்திற்குள் நுழைந்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி களத்திற்குள் ஒடிவந்த அவர் திடீரென ரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார்.
A fan touched the feet of Rohit Sharma.- Rohit, crowd favourite ⭐pic.twitter.com/P2pYyCfw57
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024இதனை எதிர்பார்க்காத ரோகித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் சில வினாடிகள் அப்படியே நின்றார். அதன் பின்னர், மைதானத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர் வேகமாக ஓடிவந்து அத்துமீறி நுழைந்த நபரை களத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
A fan touching the feet of Rohit Sharma. [RevSportz]- Rohit is an emotion. pic.twitter.com/cmwzr56idQ
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024தற்போது இது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனைப்பார்த்த ரசிகர் ஒருவர், ‘’எல்லோருக்கும் மிகவும் பிடித்த கேப்டன் ரோகித் சர்மா’’ என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், “விராட் கோலியின் ரசிகர்களாக நாங்கள் இருந்தாலும் எப்போதும் ரோகித் சர்மாவின் மீது ஒரு மரியாதை வைத்துள்ளோம். அதற்கு சான்று தான் இந்த வீடியோ” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
மேலும் படிக்க: Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… அதிரடியாக அரைசதம் விளாசிய ஜெஸ்வால்!

IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது.

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் 60 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி சார்பில் நான்காவது விக்கெட்டிற்கு ஜோ ரூட் களமிறங்கினார்.

இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள்:

அதன்படி, ஜானி பேர்ஸ்டோருடன் ஜோடி சேர்ந்தார். அப்போது, அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்த போது ஜோ ரூட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம், இந்த போட்டியில் 29 வது ரன்னை எடுத்த போது ஆஸ்திரேலிய அணி வீரர் ரிங்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

அதாவது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.

அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2555 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 29வது ரன்னை எடுத்த போது ஜோ ரூட் சமன் செய்திருக்கிறார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்

Rohit Sharma Has Explained Why Youngster Rajat Patidar Was Replaced By Virat Kohli In The Test Match Against England.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விளையாடமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனை நேற்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் உறுதிபடுத்தினார். மேலும், விராட் கோலிக்கு பதிலாக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் மத்திரயபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 151 ரன்களை குவித்த இவர், சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் தான் இவரை பிசிசிஐ தேர்ந்தெடுத்திருக்கிறது.
இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன்?
அதேநேரம், மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்காமல் இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்தது ஏன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் மூத்த வீரர் ஒருவரை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், நம்மிடம் இருக்கும் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு வழங்குவது? அனுபவம் வாய்ந்த ஒரு வீரரை வெளியேற்றுவதோ அல்லது அவர்களது அனுபவத்தை கருத்தில் கொள்ளமல் புறக்கணிப்பது என்பதோ மிகவும் கடினம்.
ஆனால், சில நேரங்களில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குவது முக்கியமான ஒன்று. இளம் வீரர்களை நேரடியாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை அவர்களுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.
மேலும் படிக்க: Rohit Sharma: “வெறும் 156 ரன்கள்தான்” கங்குலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா! விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Virat Kohli: ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணியில் ரோகித், விராட் கோலிக்கு இடம் இல்லை – ரசிகர்கள் ஷாக்
India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
IND vs ENG நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேநேரம், இங்கிலாந்து அணி 50 போட்டிகள் வெற்றி பெற்றிருக்கிறது. 50 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. முதன் முதலில் இரு அணிகளும் விளையாடிய போட்டி கடந்த 1932 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல்,கடைசியாக இரு அணிகளும் சேர்ந்து விளையாடிய போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது.
IND vs ENG, 1வது டெஸ்ட் ஒளிபரப்பு விவரங்கள்:
தேதி: ஜனவரி 25 முதல் ஜனவரி 29 வரை.
நேரடி ஒளிபரப்பு: ஜியோ சினிமா மற்றும் Sports18
ஆடும் லெவன் வீரர்கள்:
விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா,கே.எஸ்.பரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ரஜத் படிதார்.
இங்கிலாந்து அணி:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க் வுட், ஜேக் லீச்
மேலும் படிக்க: BCCI Awards 2024: இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற அஸ்வின்.. விருது பெற்றவர்களின் முழு விவரம் உள்ளே..
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்- ராகுல் ட்ராவிட்!

India Vs England Test Rohit Sharma Will Break Ganguly’s Record Of 156 More Runs In International Cricket
இந்தியா – இங்கிலாந்து:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் தற்போது இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?
இச்சூழலில், கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையுடன் இருக்கிறது. ஆனால், இந்த முறை எப்படியும் இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியினர் களம் காண உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து அணி அண்மையில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுவருவதால் இந்த முறை இந்தியாவை வீழ்த்திவிடாலம் என்று நினைக்கிறது.
இதனிடையே, இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா இன்னும் 156 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இருக்கும் கங்குலியின் சாதனையை முறியடித்து விடுவார். கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் 18, 575 ரன்கள் எடுத்துள்ள வேளையில், தற்போது ரோகித் சர்மா 18,420 ரன்களில் இருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 156 ரன்கள் எடுத்துவிட்டால் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிடுவார். இந்த பட்டியலில் 34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 26,733 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்திடம் பாஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட் பால் இருக்கு…! சுனில் கவாஸ்கர்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

India Vs England Test: Ravichandran Ashwin Is Set To Become The 9th Player To Take 500 Wickets In Test Matches By Taking 10 Wickets
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அஸ்வின் மீது எதிர்பார்ப்பு:
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் அஸ்வினின் சுழற்பந்து மாயாஜலத்தை இந்த தொடரில் எதிர்பார்க்காலாம்.
அதோடு இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். மேலும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார். அதேபோல், 10 விக்கெட்களை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுக்கும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சரித்திரத்தையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பார். இதானால் இந்த தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில், 25,227 பந்துகளை வீசி 29.69 என்ற சராசரியில் 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் (Bazball) பாணி ஆட்டம் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.

இந்தியாவில் பாஸ்பால் பாணி எடுபடாது:

இச்சூழலில், இங்கிலாந்து அணியின் பாஸ்பால் பாணி ஆட்டம் இந்தியாவில் எடுபடாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ பாஸ்பால் முறை இத்தொடரில் வேலை செய்யாது. ஏனெனில் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. குறிப்பாக இந்தியாவில் முதல் பந்திலிருந்தே பந்து சுழல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.

அதை 2 அணியை சேர்ந்த ஸ்பின்னர்களும் நன்றாக பயன்படுத்துவார்கள். அது போன்ற மைதானங்களில் டாஸ் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாக இருக்கும். எனவே இந்த தொடரில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமையாமல் போனால் மட்டுமே இங்கிலாந்து தாங்கள் நினைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கி வெற்றி காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்… பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி

மேலும் படிக்க: Sania Mirza: திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த சோயப் மாலிக்? கவலையில் மூழ்கிய சானியா மிர்சா! நடந்தது என்ன?

India Vs England Test We Have Viratball To Counter Bazball: Sunil Gavaskar
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் (Bazball) பாணி ஆட்டம் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.
விராட்பால் இருக்கு:
இச்சூழலில் தான், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்களிடம் “விராட்பால்” (Viratball )இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இங்கிலாந்து அணியிடம் பஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட்பால் இருக்கிறது. பாஸ்பால் இங்கே வேலை செய்யலாம். ஏனெனில் சமீபத்திய வருடங்களில் இங்குள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு சிறியதாகியுள்ளது. மேலும் தவறான இடத்தில் பட்டால் கூட சிக்ஸர் பறக்கும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாராகின்றன. அதனால் தான் சொல்கிறேன் பஸ்பால் இங்கே வேலை செய்யலாம்.குறிப்பாக ஸ்பின்னர்கள் வரும் போது அவர்கள் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்கலாம். அதனால் அவர்கள் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்களும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி மனதளவில் தயாராக இருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை விட பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுக்கக் கூடாது என்பதே மனநிலையாக இருக்கும். எனவே சிக்ஸர் அடித்தாலும் எங்களுடைய
பவுலர்கள் தங்களின் லென்த்தை மாற்றி சண்டையிடுவார்கள். ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டி முக்கியம். அங்குள்ள மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கை கொடுக்கும். எனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது நல்ல சோதனையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
மேலும் படிக்க: Sania Mirza khula: “குலா” என்றால் என்ன? சோயப் மாலிக்கிடம் இருந்து சானியா மிர்சா விவாகரத்து பெற்றது எப்படி?