இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.

உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்…

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..?

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் அணி:

ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Tag: India vs afghanistan t20

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 11வது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 107 ரன்னில் ஆஃப்கான் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆஃப்கான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தபோது இந்த போட்டியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19வது ஓவரில் விராட் கோலி நீண்ட தூரம் ஓடிவந்து சிறப்பாக கேட்ச் பிடித்ததால் போட்டியில் நமக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் வீசினார். முதல் பந்து வைய்டாகப் போனது. இதனால் இலக்கு 18ஆக குறைந்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை குல்பைதின் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை மிஸ் செய்ய, மூன்றாவது பந்தை மீண்டும் வைய்டாக வீசினார் முகேஷ். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் குல்பைதின். இதனால் இலக்கு 2 பந்துகளுக்கு 5 ரன்களாக குறைந்தது. 5வது பந்தில் 2 ரன்களும் 6வது பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.

இரண்டு சூப்பர் ஓவர்

இதனால் போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதில் ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மொத்தம் 16 ரன்கள் சேர்த்தது. 17 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 16 ரன்கள் எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனாது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்
3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் தனது கணக்கு திறக்காமல் வெளியேறினார்.ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளிக்க, முதல் ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்தது.
அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி, தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக ஆட தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியை தொடர, வெறும் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 33 ரன்களும், கோலி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தனர்.
🚨 No🚨fans for #Jaiswl will pass without liking this post❤#ViratKohli #ViratKohli𓃵#KingKohli #RohitSharmaPandya, Dube #INDvAUS#INdvsAFGpic.twitter.com/MHAfTGpD8k
— Ramu_kabaddi_chempiyan (@RamuLukha) January 14, 2024தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, 29 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் அசராமல் அசுர அடி அடித்த ஜெய்ஸ்வால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துபேயும் சிறப்பாக பேட்டிங் செய்து 13 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, இந்தியாவின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 100ஐ தாண்டியது. தொடர்ந்து இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை வான வேடிக்கையாக தெறிக்கவிட்டு கொண்டு இருந்தனர்.
உள்ளே வந்ததும் முதல் டி20 போட்டியில் காட்டிய அதிரடியை சிவம் துபே, இந்த 2வது டி20 போட்டிகளிலும் தொடர்ந்தார். அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை உடைத்தார். சிவம் துபே 21 பந்துகளில் அரைசதம் அடிக்க, இந்திய அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உதவியுடன் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
36 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் உள்ளே வந்ததுடன் பவுண்டரியை ஓடவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள ரன்களை துரத்து, 26 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் துபே 63 ரன்களுடனும், ரிங்கு சிங் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்களும், நவீன் உல் ஹக் மற்றும் பரூக்கி தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.