Tag: IND vs ENG Test

• Ind vs Eng Test: 100வது டெஸ்ட்! அசத்திய அஸ்வின்.. சொதப்பிய பார்ஸ்டோ!

Ind vs Eng Test: 100வது டெஸ்ட்! அசத்திய அஸ்வின்.. சொதப்பிய பார்ஸ்டோ!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது.

அசத்திய அஸ்வின்!

இந்த போட்டியில் முக்கியமாக பார்க்கப்பட்டது இரண்டு வீரர்கள் தங்களது 100-வது போட்டியில் களம் இறங்கியது தான். அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்களது 100வது போட்டியில் களம் இறங்கினார்கள். இதனால் இன்றைய போட்டியில் அவர்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில், தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஜானி பார்ஸ்டோவ் அதிரடியாக விளையாடினாலும் குறைந்த ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றார்.

சொதப்பிய பார்ஸ்டோவ்!

அவர் மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 29 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில், 100 வது போட்டியில் 11.4 ஓவர்கள் வீசிய அவர் 1 ஓவர் மெய்டன் செய்து 51 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதன்படி தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் அற்புதமாக விளையாடிய அஸ்வினை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link

• Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

Ind vs Eng 4th Test: இன்று தொடங்கும் இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் தொடர்:
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியும் மும்முரமாக உள்ளது. இதனால், முந்தைய மூன்று போட்டிகளை போன்று, ராஞ்சி போட்டியிலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பலம், பலவீனம்:
சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய அணியை கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக கையாண்டு வருகிறார். பொறுப்பை உணர்ந்து கில், ஜெய்ஷ்வால் மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் விளையாடி வருவது அணிக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. ஜடேஜா மற்றும் பும்ராவின் செயல்பாடும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்து வருகிறது. அதேநேரம், அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள், அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் தொடரில் இல்லாதது இந்திய அணியின் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில், பும்ரா இருக்க மாட்டார் என்பதும் ரசிகர்களை ஏமாற்றமடையை செய்துள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில், இந்த தொடரில் ஒரு சராசரியான அணியாகவே செயல்பட்டு வருகிறது. இந்திய மைதானங்களின் தன்மையை அந்த அணியால் சரியாக கிரகிக்க முடியாமல் திணறுகிறது. இதன் காரணமாகவே கடந்த போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மைதானம் எப்படி?
இந்த தொடரில் விளையாடிய மற்ற மைதானங்களை காட்டிலும், ராஞ்சி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டி டிராவிலும், மற்றொரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்),  யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா,  ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ்,  முகமது சிராஜ் , முகேஷ் குமார்/ஆகாஷ் தீப்
இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி,  ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயிப் பஷீர்

Source link

• KL Rahul out, is Sarfaraz Khan set for India debut in india vs England Test

KL Rahul out, is Sarfaraz Khan set for India debut in india vs England Test

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. இச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் கே.எல்.ராகுலும் இடம்பெற்றார். ஆனால், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரியும் என்று பிசிசிஐ தெரிவித்தது.
ராகுலுக்கு பதிலாக களம் இறங்குவாரா சர்பராஸ் கான்?

Sarfaraz Khan & Dhruv Jurel set to make their Debut in the 3rd Test. [Devendra Pandey From Express Sports] pic.twitter.com/pmdgBPGCWM
— Johns. (@CricCrazyJohns) February 12, 2024

இந்நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.  இச்சூழலில் தான் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் இருந்த இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் களமிறங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.  முன்னதாக கடந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் மற்றொரு இளம்வீரரான ரஜத் படிதார் அறிமுகமானார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடுவதற்கு போராடி வந்தார். இருப்பினும் முன்னணி வீரர்கள் அணியில்  இருந்ததால் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் இந்த தொடரில் கே.எல்.ராகுல் காயத்தால்  விலகியதால் முதல் முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!

மேலும் படிக்க: Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!

மேலும் காண

Source link

• IND vs ENG: 'அவரை பாத்து கத்துக்கோங்க’ : சொதப்பும் சுப்மன் கில்லுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரின் முக்கிய அறிவுறுத்தல்

IND vs ENG: 'அவரை பாத்து கத்துக்கோங்க’ : சொதப்பும் சுப்மன் கில்லுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரின் முக்கிய அறிவுறுத்தல்

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி:

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை முதல் இன்னிங்ஸில் நன்றாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடியது. அதன்படி, அந்த அணி மொத்தம் 420 ரன்களை குவித்தது. அதேநேரம் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 16 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் விளாசிய ஒல்லி போப் ஆட்டம் தான். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அதன்படி 278 பந்துகள் களத்தில் நின்ற அவர் 21 பவுண்டரிள் உட்பட 196 ரன்களை விளாசினார்.

அவரை பார்த்து கத்துக்கோங்க:

இந்நிலையில் ஒல்லி போப் பயன்படுத்தும் பேட்டிங் நுட்பத்தை இந்திய அணியின் பேட்ஸ்மென் சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார் . இது தொடர்பாக பேசிய அவர், “போப்  விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  அதேநேரம் போப் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ரன்கள் எடுப்பதில் குறியாக இருந்தார். அணிக்கு எவ்வாறு ரன்களை பெற்றுத் தர வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. இதைத்தான் நம்முடைய வீரர் சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இறங்கி ஆட முயற்சி செய்கிறார்.

அதனால்தான் நான் இதைச் சொல்கிறேன்”என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுப்மன் கில் திணறிவருகிறார். அதேபோல், இந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் முறையிலும் வெளியேறினார். இதனால் அவருக்கான டெஸ்ட் எதிர்காலம் அச்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறி வரும் சூழலில் சஞ்சன் மஞ்ச்ரேக்கர் சுப்மன் கில்லுக்கு பேட்டிங் குறித்து அறிவுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்க:IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்… கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!

மேலும் படிக்க:IND vs ENG Test: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சொதப்பல் பேட்டிங்; 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Source link

• IND Vs ENG: Anil Kumble Heaps High Praise On Ollie Pope’s 196, Calls It ‘one Of The Best Innings On Indian Soil’

IND Vs ENG: Anil Kumble Heaps High Praise On Ollie Pope’s 196, Calls It ‘one Of The Best Innings On Indian Soil’

வெற்றியை தட்டிச் சென்ற இங்கிலாந்து:

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை முதல் இன்னிங்ஸில் நன்றாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடியது. அதன்படி, அந்த அணி மொத்தம் 420 ரன்களை குவித்தது. அதேநேரம் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 16 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய போப்:
முன்னதாக, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் விளாசிய ஒல்லி போப் ஆட்டம் தான். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அதன்படி 278 பந்துகள் களத்தில் நின்ற அவர் 21 பவுண்டரிள் உட்பட 196 ரன்களை விளாசினார்.

இந்நிலையில் இவரின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.  இது தொடர்பாக பேசிய அவர், “ஒல்லி போப் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடி உள்ளார். இந்தியா போன்ற ஆடுகளங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அவர் ஆடியது எனக்குத் தெரிந்தது” என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்ல வேண்டிய இந்திய அணி தற்போது தோல்வியை அடைந்ததற்கு  காரணமும் அவரது ஆட்டம் தான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க: IND vs ENG Test: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சொதப்பல் பேட்டிங்; 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

மேலும் படிக்க: IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்… கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!

Source link

• Joe Root Scripts History, Goes Past Ricky Ponting To Become Highest Run-scorer Against India In Test Cricket

Joe Root Scripts History, Goes Past Ricky Ponting To Become Highest Run-scorer Against India In Test Cricket

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. அதன்படி சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களை குவித்தது.

இதனையடுத்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சாக் கிராலி 31 ரன்களும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இன்றைய போட்டியில் அவர் ஒரு மாபெரும் சாதனையை செய்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட்:
அதாவது இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.

அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2557 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 1  ரன்னை எடுத்த போது ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்:
1. ஜோ ரூட் : 2557
2. ரிக்கி பாண்டிங் : 2555
3. அலெஸ்டர் குக் : 2431
4. க்ளைவ் லாய்ட் : 2344
5. ஜாவேத் மியாண்டட்: 2228

மேலும் படிக்க: Australian Open final: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… சாம்பியன் பட்டத்தை வென்ற சபலெங்கா!

மேலும் படிக்க: IND vs ENG Test: ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திய பவுலர்கள்; டஃப் கொடுத்த போப் சதம்; இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை

Source link

• IND Vs ENG Test First Innings…Indian Team Stronger Than England

IND Vs ENG Test First Innings…Indian Team Stronger Than England

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  இதில், முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 66 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதனையடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் – ஸ்ரேயாஸ் அயயர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னிலையை நோக்கி கொண்டு சென்றது.
முன்னிலையில் இருக்கும் இந்தியா:
சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர்  35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.  சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே எஸ் பாரத் ஜோடியும்  சிறப்பாக விளையாடி அணியின் முன்னிலையை வலுப்படுத்தும் நோக்கில் பேட்டிங் செய்தது.
அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதம் அடித்தார். மறுமுனையில் கே எஸ் பாரத் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்துள்ளது.  இது இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் அதிகமாகும். ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்

மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

Source link

• Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches

Shubman Gill Not Scored Single Half Century In Last 10 Test Innings Will He Get Chance In Upcoming Matches

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய அணி சிறப்பாக 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ஆனல் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சொதப்பலாக விளையாடினார்.
தொடர்ந்து சொதப்பும் சுப்மன் கில்:
அதன்படி, மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய அவர் 66 பந்துகள் களத்தில் நின்று வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.  அதற்கான காரணம் என்னவென்றால் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். குறிப்பாக ஆரம்பத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் அதன்பின்னர், ஜெய்ஸ்வாலின் வருகையால் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வருகிறார்.  இதிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் சுப்மன் கில்.
அவர் விளையாடிய கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.  அதன்படி, கடைசி பத்து இன்னிங்ஸ்களில் 13, 18, 6, 10, 29*, 2, 26, 36, 10, and 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி  பல்வேறு வீரர்கள் அணியில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கும் சூழலில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சுப்மன் கில் வீணடித்து வருவது  இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது

மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!

மேலும் படிக்க: Ind vs Eng 1st Test: விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன் தெரியுமா? ரோஹித் சர்மா விளக்கம்!

Source link

• IND Vs ENG 1st Test Yashasvi Jaiswal Fifty In Just 47 Balls Dominating England Attack

IND Vs ENG 1st Test Yashasvi Jaiswal Fifty In Just 47 Balls Dominating England Attack

இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 246 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. அதன்படி,  முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் 64.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது.

அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்:
இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஜோடி அமைத்து 4 ஓவர்களில் இந்திய அணிக்கு 35 ரன்களை எடுத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதத்தை பதிவு செய்தார்.  அதன்படி, 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களை விளாசினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் பதிவு செய்திருக்கும் இரண்டாவது அரைசதம் இது.

FIFTY FOR JAISWAL….!!!!!Fifty from just 47 balls – he has been dominating England attack, incredible batting from the youngster. 🫡 pic.twitter.com/Lak6HaEfnJ
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பாஸ்பால் முறையை பயன்படுத்தி இந்திய அணியினரை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பாஸ்பாலை பொய்யாக்கி ஜெய்ஸ்பால் ஆட்டம் ஆடியுள்ளார் ஜெய்ஸ்வால். முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர் ஜெய்ஸ்வால். இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகலில் விளையாடியுள்ள இவர் 1 சதம் மற்றும் 1 அரைசதம் எடுத்திருக்கிறார். அதேபோல், 357 ரன்களை குவித்துள்ளார்.

Jaisball at Hyderabad….!!!!India 35 for 0 from just 4 overs. 🤯 pic.twitter.com/iTX4Em41U7
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024

இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 171 என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தருவதில் வல்லவராக திகழும் ஜெய்ஸ்வால் இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!

மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST:கும்ப்ளே – ஹர்பஜன் ஜோடியின் சாதனையை முறியடித்த அஸ்வின் – ஜடேஜா ஜோடி! அப்படி என்ன சாதனை?

Source link

• Virat Kohli Fan Invades Pitch Touches Rohit Sharma Feet India Vs England 1st Test- Watch Video

Virat Kohli Fan Invades Pitch Touches Rohit Sharma Feet India Vs England 1st Test- Watch Video

முதல் இன்னிங்ஸ்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
காலில் விழுந்து வணங்கிய கோலி ரசிகர்:
பின்னர், இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெஸ்வால் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். அப்போது, கேப்டன் ரோகித் சர்மா இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக களத்தில் நின்றிருந்த போது, மைதானத்தில் இருந்து விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி களத்திற்குள் நுழைந்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை நோக்கி களத்திற்குள் ஒடிவந்த அவர் திடீரென ரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார்.

A fan touched the feet of Rohit Sharma.- Rohit, crowd favourite ⭐pic.twitter.com/P2pYyCfw57
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024

இதனை எதிர்பார்க்காத ரோகித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் சில வினாடிகள் அப்படியே நின்றார். அதன் பின்னர், மைதானத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர் வேகமாக ஓடிவந்து அத்துமீறி நுழைந்த நபரை களத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.

A fan touching the feet of Rohit Sharma. [RevSportz]- Rohit is an emotion. pic.twitter.com/cmwzr56idQ
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024

தற்போது இது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனைப்பார்த்த ரசிகர் ஒருவர், ‘’எல்லோருக்கும் மிகவும் பிடித்த கேப்டன் ரோகித் சர்மா’’ என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர், “விராட் கோலியின் ரசிகர்களாக நாங்கள் இருந்தாலும் எப்போதும் ரோகித் சர்மாவின் மீது ஒரு மரியாதை வைத்துள்ளோம். அதற்கு சான்று தான் இந்த வீடியோ” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் – ஜடேஜா… 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!

மேலும் படிக்க: Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… அதிரடியாக அரைசதம் விளாசிய ஜெஸ்வால்!

Source link

• IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது.

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் 60 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி சார்பில் நான்காவது விக்கெட்டிற்கு ஜோ ரூட் களமிறங்கினார்.

இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள்:

அதன்படி, ஜானி பேர்ஸ்டோருடன் ஜோடி சேர்ந்தார். அப்போது, அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்த போது ஜோ ரூட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம், இந்த போட்டியில் 29 வது ரன்னை எடுத்த போது ஆஸ்திரேலிய அணி வீரர் ரிங்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

அதாவது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.

அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2555 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 29வது ரன்னை எடுத்த போது ஜோ ரூட் சமன் செய்திருக்கிறார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? – விவரம்

Source link

• Rohit Good Against Short Ball But That Doesn’t Mean I Won’t Bowl A Bouncer: Mark Wood Before IND Vs ENG Tests

Rohit Good Against Short Ball But That Doesn’t Mean I Won’t Bowl A Bouncer: Mark Wood Before IND Vs ENG Tests

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
துல்லியமாக அதை செய்வேன்:
அந்தவகையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  முன்னதாக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை அசால்டாக ஃபுல் ஷாட் சிக்ஸராக்குவது ரோகித் சர்மாவின் பலன். கடந்த 2023 உலகக் கோப்பை போட்டி, சென்னை மற்றும் நாக்பூரில் விளையாடிய போட்டிகளில் இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி இருந்தார் ரோகித் சர்மா.
இந்நிலையில் தான், ஷார்ட் பிட்ச் பந்துகளை துல்லியமாக ரோகித் சர்மாவை நோக்கி வீசுவேன் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மைதானத்திற்கு சென்றதும் அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதை நான் பார்ப்பேன். பவுன்சர் பந்துகள் அரிதாக வீசப்படும் இந்தியாவில் அதை வீசுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மா ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் தரமானவர் என்பதை நான் அறிவேன். அதற்காக அவருக்கு எதிராக நான் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது என்று அர்த்தமல்ல. எனவே சரியான நேரத்தில் துல்லியமாக அதை நான் வீசுவேன்” என்று கூறியுள்ளார். இச்சூழலில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் நீங்கள் எப்படி பந்து வீசினாலும் அதை ரோகித் சர்மா லாவகமாக சிக்ஸருக்கு பறக்க விடுவார் என்று கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் யார்? மனம் திறந்த ராகுல் டிராவிட்
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!

Source link

• IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!

IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது ரசிகர்கள் பார்வை இருக்கும். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான இவர்கள் இருவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தொடரின் மூலம் வரலாற்று சாதனை படைக்க இருக்கின்றன. ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரித்திரம் படைக்க தலா 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை, இந்த சாதனையை படைக்க இவர்களுக்கு இன்னும் 5 டெஸ்ட் போட்டிகள் தராளமாகவே உள்ளது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேசமயம், முழு தொடருக்கான அணியையும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. அஸ்வின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் அஸ்வின் மற்றும் ஆண்டர்சனின் சாதனைகளைப் பற்றி பேசுகையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொடுவதற்கு இருவருக்கும் தலா 10 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை தனது டெஸ்ட் வாழ்க்கையில் 690 விக்கெட்டுகளையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் 490 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 700 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஷ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 500 விக்கெட்களையும் எடுக்க இருக்கின்றன.

தற்போது, ​​டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக மேம்ஸ் ஆண்டர்சனும், 9வது பந்துவீச்சாளர் அஷ்வினும் உள்ளனர். வருகின்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தினால், 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். ஏனெனில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் டாப்-2 இல் உள்ளனர். இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னர் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக 500 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாத், குல்தீப் யாத். ., முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.

டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், புரூக், ஜாக் க்ரோலி, பென் டக்கெட், பென் ஃபோகஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட் மற்றும் மார்க் வுட்.

Source link

• Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி:

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இச்சூழலில், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

கடன் வாங்கினோம்:

இதில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் இந்திய அணி சார்பில் அறிமுகமாகியிருக்கார். இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம்  பெற்றது குறித்து துருவ் ஜூரல் பேசியுள்ளார்.

அதில், “நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன். ஆனால் இது குறித்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவருக்குத் இது தெரிந்ததும், அவர் என்னைத் திட்டினார்.

ஆனால், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அப்பா என்னிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும் என்று சொன்னேன். இதை கேட்டதும் என் அப்பா விளையாடுவதை நிறுத்தச் சொன்னார்.

தங்க சங்கிலியை விற்ற தாய்:

ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் அம்மா தனது தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நான் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் இதை என் குடும்பத்திடம் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடம் எந்த இந்திய அணிக்காகவா தேர்வாகி உள்ளாய்? என கேட்டார்கள்.

நான் அவர்களிடம் ரோகித், விராட் ஆடும் இந்திய அணியைச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது”என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் துருவ் ஜூரல்.

Source link