subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song
வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது….
