Tag: Ideas Of India 3.0

  • Ideas Of India 3.0 | India 3.0: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி: பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும்

    Ideas Of India 3.0 | India 3.0: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி: பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும்


    இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றில் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று  ஏபிபி உச்சி மாநாட்டில் பிரிட்டன் முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார். 
    ஐடியாஸ் ஆஃப் இந்தியா
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சி மாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் நேற்று (பிப்.23) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 
    இந்த நிகழ்வில் சமூகத்தில் முத்திரை பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, நடிகர் அமீர் கான், இயக்குநர் அட்லீ, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினர்.
    இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை
    இரண்டாவது நாளான இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரிட்டனின் முன்னாள் உள்துறைச் செயலாளரும், ஃபரேஹாம் எம்.பி.யுமான சுயெல்லா பிரேவர்மேன் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ”பிரிட்டனுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2019-ல் 2.4 லட்சம் ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும். மன்னிக்கப்படக் கூடாது. ஆனால், நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் பார்க்கும்போது இந்தியா சுய ஆட்சிக்கான வெற்றியைப் பெற்ற நாட்டுக்கான சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா எதிர்பார்ப்புக்கு அப்பால் சிறந்து விளங்குகிறது.
    காமன்வெல்த்தை எடுத்துக் கொண்டால், இது ஒரு சிறந்த உறவாகவும், வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட சிறந்த நாடுகளின் சமூகமாகவும், எதிர்காலத்திற்காக ஒத்துழைக்கக் கூடியதாகவும் உள்ளது.
    உடனடிப் போர் நிறுத்துத்துக்கு நான் ஆதரவில்லை
    இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள எல்லா உரிமைகளும் உண்டு. காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களைக் கீழே போட்டு, அமைதியை நிலைநாட்டினால் இந்தப் போர் உடனே நின்றுவிடும். அந்த வழியில் வேண்டுமானால், உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம்” என்று சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit

    Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit


    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
    ”அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்”
    அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கலந்து கொண்டு பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். அடுத்த மாதம், மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், “இன்னும் தேர்தல் வரவில்லை. அதனால் எதிர்கட்சிக்கு எவ்வளவு நேரம் இருக்கு என்று தெரியவில்லை.  எதிர்க்கட்சிகளை சாதாரணமாக எடை போட வேண்டாம். அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்” என்றார்.
    பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பேசிய அவர், “45.4 சதவிகித இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் லட்சியம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசலாம். ஆனால், சுயநலம் பற்றி பேசினால் பதில்கள் வேறாக இருக்கும். பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. 
    இரண்டு முறை பிரதமர் மோடிக்கு வாக்களித்த இளைஞர் ஏன் மீண்டும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? அவரிடம் ஒன்றும் இல்லை. அரசியல் என்பது கருத்துகள், கொள்கைகள் மற்றும் பிரச்னைகளை சார்ந்தது. அது மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் முடிவுகள் அமையும். கடந்த இரண்டு தேர்தல்களில், பாஜக ஒவ்வொரு வாக்காளரின் கதவுகளையும் தட்டியது. வாக்காளர்களை நேரே சென்று சந்திக்கும் தொண்டர்கள் போன்றவற்றில் காங்கிரசை விட சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
    “மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்”
    கடந்த 10 வருடங்களில் அரசியல் பேச்சுவழக்காக வகுப்புவாதம் மாறி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சிறுபான்மையினரை தள்ளி வைப்பதால் இந்த நாடு முன்னேறாது. ஒரு கட்டத்தில், ஒரு சதவிகிதத்தினர் கூட இந்த நாட்டில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று முடிவு செய்து அதை வெடிக்கச் செய்வார்கள். 
    அப்போது இந்து-முஸ்லிம் கலவரம் பற்றிய அனைத்து மெத்தனமும் நீங்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று அரசை அழைக்கிறேன். நீங்கள் காங்கிரஸை ‘போலி மதச்சார்பற்றவர்’ என்று தாக்கும் போது, ​​உண்மையான மதச்சார்பற்றவராக இருங்கள் என நான் கூறுகிறேன். மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்” என்றார்.
    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய சசி தரூர், “இந்நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளுக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற பெரும்பான்மை அதன் பிரதமரை தேர்ந்தெடுக்கிறது. INDIA போன்ற கூட்டணியில், தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்காக, பல்வேறு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும்” என்றார்.

    மேலும் காண

    Source link

  • Ideas Of India 3.0: ABP Network’s Flagship Event Focused On People’s Aspirations, Says CEO Avinash Pandey in tamil | Ideas Of India 3.0: தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா”

    Ideas Of India 3.0: ABP Network’s Flagship Event Focused On People’s Aspirations, Says CEO Avinash Pandey in tamil | Ideas Of India 3.0: தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா”


    ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    ஏபிபி-யின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” :
    ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.

    ”மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான நிகழ்வு”
    குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.  
    வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் – அதிதேப் சர்கார்:
    இவரை அடுத்து பேசிய ஏபிபி நெட்வர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஆன்மீகம் மற்றும் கருப்பொருள்களின் இணைவு உச்சத்தை எட்டியது. ராமர் ‘பாரதத்தின் அடித்தளம்’ என்று பிரதமர் கூறினார். விவான் மர்வா மில்லினியல்ஸ் புத்தகம்,  2019 இல் நரேந்திர மோடியின் அமோக வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. போதிய வேலை உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்குகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தைரியமான தீர்க்கமான தலைமையை கோருகின்றனர். இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் தலைவர், அதிக வேலை வாய்ப்புகளை மனிதாபிமானத்துடன் எவ்வாறு உருவாக்குவது என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
    ”2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா”
    மஹிந்திரா குரூப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிஷ் ஷா பேசுகையில், “இந்தியாவிற்கான எனது ஆலோசனை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். பொருளாதார வளர்ச்சியானது சமூகத்திற்கு நல்லது செய்வதோடு சமநிலையில் இருக்க வேண்டும். வளர்ச்சி அனைத்துப் பிரிவுகளிலும் பகிரப்பட வேண்டும். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரத் பார்வை தைரியமானது. அதன்படி,  2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதாவது 23 ஆண்டுகளில் உற்பத்தி 16 மடங்கு வளர வேண்டும். ஏற்றுமதி 11 மடங்கு வளர வேண்டும். பட்ஜெட் அரசியலை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்ததை நாங்கள் பார்த்தோம். இது மூலதன செலவினங்களுக்கு அதிக முதலீடு மற்றும் நிதி ஒழுங்குமுறைக்கான பல வழிமுறைகள் மூலம் நீண்ட கால வளர்ச்சியை அமைத்து வருகிறது. உள்ளூர் உற்பத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பண்ணை செழிப்பு மற்றும் அடுத்த தலைமுறைக்கான நிலைத்தன்மை ஆகியவை நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியமானவை” என பேசியுள்ளார். 
    அடுத்து நடைபெற உள்ள விவாதங்கள்:
    சுயெல்லா பிரேவர்மேன், எம்.பி., சசி தரூர், இந்திய – அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி, சிற்ப கலைஞர் சுபோத் குப்தா, சப்யசாசி நிறுவனர் சப்யசாசி, அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர் சுனில் கில்னானி, நடிகை கரீனா கபூர் கான், நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.
     

    மேலும் காண

    Source link

  • Ideas Of India 3.0 ABP Women Icons In STEM Talk About Nation’s Evolution And Economic Growth | Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது

    Ideas Of India 3.0 ABP Women Icons In STEM Talk About Nation’s Evolution And Economic Growth | Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது


    ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.
    குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.  
    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக STEM குறித்து விவாதிக்க இஸ்ரோவின் பெண் இயக்குநர்களான நந்தினி ஹரிநாத், ஆதித்யா எல் 1 செயல்திட்ட இயக்குனர் நிகர் சாஜி மற்றும் IIA வின் இயக்குனர் அன்னபூரணி சுப்பிரமணியம் அகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய நிகர் சாஜி,  ”எனது பெற்றோரின் ஆசை நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் நான் அதில் இருந்து சற்று விலகி பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தேன். ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், சூரியனை பற்றிய புறிதல் மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றுகிறது.  இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் தற்போது 50 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளது. இவை சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பக்காற்று அல்லது சூரிய கதிர்களால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். எனவே ஆதித்யா எல் 1 விண்கலம் அவற்றை பற்றிய புறிதலை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி ஆதித்யா எல் 1 விண்கலம் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் இந்தியா ஒரு படி முன்னுக்கு எடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.
    அதேபோல் இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய அன்னபூரணி, “உங்கள் கனவுகள் அடைவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கனவுகளை அடையும் முயற்சியில் நாம் அனைத்திற்கும் வளைந்து கொடுக்க முடியாது. யாராவது உங்கள் மீது ஏதாவது ஒரு விஷயத்தை திணித்தால், நீங்கள் என்ன செய்ய விரும்பவில்லை என்பதை அடையாளம் காண வேண்டும். எல்லாவற்றிற்கும் ஆமாம் என்று சொல்லாமல் இல்லை என்றும் சொல்லி பழக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  
    STEM பற்றிய விவாதத்தில் பேசிய இஸ்ரோ இயக்குனர் நந்தினி, “ இன்றைய சூழலில் பெண்கள் சுயசார்புடையவர்கள் என்ற நிலை அடைந்துள்ளனர். நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இங்கு இருக்கும் மக்களின் மனநிலையை மாற்றினாலே போதுமானது தான். விண்வெளி துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை” என தெரிவித்துள்ளார்.  
    அன்னபூர்ணி சுப்ரமணியம், நந்தினி ஹரிநாத், மற்றும் நிகர் ஷாஜி ஆகியோர், STEMஐ அடிமட்டத்தில் இருந்து பலதரப்பட்ட துறைகளாக மாற்ற வேண்டும். மேலும் பெண்களின் சாதனைகள் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். அதேபோல், எந்தவொரு தடைகளையும் சமாளிக்க பெண்களுக்கு அதிக ஆதரவு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
     

    மேலும் காண

    Source link

  • Ideas Of India 3.0 abp chief editor says Leader Will Need To Identify With Young Voters | Ideas Of India 3.0: இந்திய அரசியலை வடிவமைக்கும் தலைமுறை மாற்றங்கள்

    Ideas Of India 3.0 abp chief editor says Leader Will Need To Identify With Young Voters | Ideas Of India 3.0: இந்திய அரசியலை வடிவமைக்கும் தலைமுறை மாற்றங்கள்


    Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பேசிய ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார், இளைஞர்கள் அடையாளம் காணும் தலைவர் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
    ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” :
    ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில்  இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.  பின்பு, சிஇஒ அவினாஷ் பாண்டேவை தொடர்ந்து, ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் உரையாற்றினார்.
    இந்துத்துவா என்றால்…
    நிகழ்ச்சியில் பேசிய அவர், “ இந்த நிகழ்வின் தலைப்பே ஒரு போட்டியை ஒப்புக்கொள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் வளர்ச்சி ஆகியவை இந்திய அரசின் அடித்தளம் என, சுனில் கில்னானி தெரிவித்தார். பேராசிரியர் கில்னானி தவறு செய்யவில்லை. ஆனால் நேருவின் இந்தியா பற்றிய எண்ணம் இன்னொருவரால் அசைக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்படும்போது, ​​இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. 
    ”மில்லினியல் தலைமுறையின் தாக்கம்”
    ஜனவரி மாதம் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, ஆன்மீகம், நிலையற்ற பொருள், மதம் மற்றும் அரசாங்கத்தின் இணைவு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ” ராமர் பாரதத்தின் நம்பிக்கை, ராமர் பாரதத்தின் அடித்தளம், ராமர் பாரதத்தின் சிந்தனை மற்றும் ராமர் பாரதத்தின் அரசியலமைப்பு” என கூறினார்.
    இன்று, இது இந்திய அரசியலில் முக்கிய நீரோட்டத்தை பிரதிபலிக்கிறது. ”பல மில்லினியல்கள் (1980ன் தொடக்கத்தில் இருந்து 1990-களின் இறுதி வர பிறந்தவர்கள்) அனுதாபம் கொண்டுள்ளனர். 1981மற்றும் 1996 க்கு இடையில் பிறந்த தலைமுறையினர், 2019ல் மோடியின் அமோகமான வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். மேலும் நாட்டின் அரசியலில் பாஜகவை உடைக்க முடியாத பிடியில் இருந்தது” என்று விவான் மர்வாஹா எழுதியுள்ளார்.
    யாருக்கு வாக்களிக்கின்றனர்?
    போதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. இதனால் அவர்கள் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்கினரால் சோர்வடைந்துள்ளனர். அதோடு “தங்களைப் போல் பேசும், பார்க்கும் மற்றும் பிரார்த்தனை செய்யும்” மக்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்கள் தைரியமான, தீர்க்கமான தலைமையை கோருகிறார்கள்.
    1997 மற்றும் 2010 க்கு இடையில் பிறந்த தலைமுறையினர் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என,  ஆராய்ச்சியாளர்கள் ஃபெரில் பாடியானி மற்றும் ஹரிஷ் கிருஷ்ணா தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களுக்கு மத்தியில் வளர்ந்து வரும் ஜென் Z, தங்கள் பெற்றோரை மீறி தங்கள் நண்பர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு அதிகம். பெரிய நகரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், இன்னும் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பாதுகாப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் பொழுதுபோக்கின் மூலம் தங்களை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள்.
    ”இளைஞர்கள் அடையாளப்படுத்தும் தலைவர்”
    இந்தியாவின் மற்றொரு யோசனையானது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழலுக்கான அக்கறை, பன்மைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்க முடியும் என்பதாகும். இது தேசிய ஒற்றுமைக்கும் தனிமனிதனின் கண்ணியத்துக்கும் இடையிலான அரசியலமைப்புச் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் அதிக வேலை வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை வெளிக்காட்ட வேண்டும். இந்த அம்சங்கள் இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் ஒரு தலைவரால் வெளிப்படுத்தப்பட வேண்டும்” என எபிபி சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • ‘If You Make It, They Will Come’: CEO Avinash Pandey Sets The Tone For ABP Network Ideas Of India 3.0 | Ideas Of India 3.0: ”பேரழிவு, உலகம் முழுவதும் 60 தேர்தல்கள்”

    ‘If You Make It, They Will Come’: CEO Avinash Pandey Sets The Tone For ABP Network Ideas Of India 3.0 | Ideas Of India 3.0: ”பேரழிவு, உலகம் முழுவதும் 60 தேர்தல்கள்”


    ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா ” நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, நிகழ்ச்சியின் நோக்கம் தொடர்பாக விரிவாக பேசினார்..
    ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” :
    ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில்  இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.  தொடர்ந்து பேசிய அவினாஷ் பாண்டே, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்றார். 
    ”நட்சந்திரங்களை அடைவதே வாழ்க்கை”
    “நாங்கள் 2022 இல் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியாவைத் தொடங்கியபோது, ​​​​For Love of the Game படத்தில் இடம்பெற்று இருந்த கெவின் காஸ்ட்னர் போல இருந்தோம். பேச்சாளர்களின் குரலை கேட்க மக்கள் வருவார்களா? என்று நினைத்தோம். ஆனால், சரியானதை நீங்கள் உருவாக்கினால், அவர்கள் வருவார்கள்” என்ற மேற்குறிப்பிடப்பட்ட படத்தில் வரும் பிரபல வசனத்தை போன்று, மக்கள் வந்தார்கள். தொடர்ந்து மேலும் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. நாங்கள் மிகப் பெரிய கனவு காண்கிறோம் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நட்சத்திரங்களை அடையாவிட்டால் வாழ்க்கை என்னவாகும். எங்கள் முதல் இரண்டு உச்சி மாநாடுகளும் மகத்தான வெற்றியைப் பெற்றன. உங்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு வருடத்தில் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்வின் மூன்றாவது எடிஷனோடு நாங்கள் மீண்டும் வந்துள்ளோம்.
    ”ஒரே ஆண்டில் 60 தேர்தல்கள்”
    தேர்தல்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் போரின் கொடூரங்கள் குறித்து பேசிய பாண்டே, ” நடப்பாண்டில் உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. அனைத்து தேர்தல்களும் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், மக்கள் தங்களின் கடமையை செயல்படுத்தி கருத்துகளை தெரிவிப்பார்கள். இதே ஆண்டில் பல இடங்களில் வெப்பநிலை அதிகமாகவும், பல இடங்களில் இன்னும் குறைவாகவும் இருக்கும். காற்று, நிலம் மற்றும் நீரிலுள்ள மாசுகள் நம் வாழ்வை மாசுபடுத்தலாம். இந்த ஆண்டில் காடுகள் பற்றி எரியலாம்மற்றும் பனிப்பாறைகள் உருகலாம். பல குடும்பங்களை அழிப்பது மற்றும் சொந்த மண்ணில் புலம்பெயர்வது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமான மோசமான இரண்டு போர்கள் இந்த ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.
    ”ஏபிபி-யின் கவனம்”
    இது நம்பிக்கை, நெகிழ்ச்சி மற்றும் மறுகற்பனைக்கான பருவம். இந்தியாவின் ஐடியாஸ் 3.0 இல், இந்த மகத்தான தேசத்தின் மக்கள் மற்றும் அதற்கு அப்பால் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 3.0 நிகழ்வில் உணர்ச்சி மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளில்  சிறந்த விளங்கும் நபர்களை உங்கள் முன் நிறுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link