Salem Youth Record 1343 Km From Chennai To Mumbai In 17 Hours – TNN
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள காந்தி மைதானத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்டதாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில், புதிதாக பூ டெக் எனும் யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்களை கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம்…
