Tag: England

• IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் ( விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
இங்கிலாந்து அணி கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் அவர்கள் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த போட்டியில் தோற்றால் அவர்கள் தொடரை இழந்து விடுவார்கள். ராஞ்சி மைதானமானது சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளும் சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுழல் பலம்:
இங்கிலாந்து அணியின் சுழல் பலமாக டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். முக்கிய சுழற்பந்துவீச்சாளராக டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் உள்ளனர். பஷீர் ஏற்கனவே விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்தியா சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என பலமாக உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை யாரிடமும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது பெரும் பின்னடைவாக உள்ளது. ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
ஜானி பார்ஸ்டோ பேட்டிங் பரிதாபம்:
ஜானி பார்ஸ்டோ இந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். அவர் இதுவரை ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணியின் பலமான ஜோ ரூட் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். கேப்டன் ரோகித் சர்மாவின் அனுபவம் இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேலும் படிக்க:Mohammed Shami: ஐபிஎல்-லில் இருந்து விலகும் முகமது ஷமி; குஜராத் அணிக்கு புதிய சிக்கல்; காரணம் என்னனு தெரியுமா?

Source link

• England Head Coach Brendon McCullum On Jonny Bairstow’s Struggles Against India | ‘நான் கண் தெரியாதவன் அல்ல’

England Head Coach Brendon McCullum On Jonny Bairstow’s Struggles Against India | ‘நான் கண் தெரியாதவன் அல்ல’

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
கண் தெரியாதவன் அல்ல:
இந்திய அணியை காட்டிலும் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து அணி வலுவாக கொண்டிருந்தபோதிலும் எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பார்ஸ்டோ மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங் பற்றி கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியிருப்பதாவது,
“ நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல. எங்களுக்காக அவர் நிறைய செய்துள்ளார். ஜானி பார்ஸ்டோ யாருக்கு எதிராகவும், எந்த சூழலிலும் மிகச்சிறப்பாக ஆடுபவர் என்பது எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை தடுத்து அவருக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.
அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஜானி மீண்டும் நல்ல நிலைக்கு வருவார் என்பது உறுதி. ஜானி பார்ஸ்டோவுடன் சிறிது நேரம் செலவழித்து பேசினேன். அவரிடம் அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நினைவூட்டினேன்.” எனத் தெரிவித்தார்.
மோசமாக ஆடும் பார்ஸ்டோ:
ஜானி பார்ஸ்டோ இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ரன்கள், 37 ரன்கள், 25 ரன்கள், 26 ரன்கள், 0 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய வீரரான ஜானி பார்ஸ்டோ இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதம், 26 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 906 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் மட்டுமின்றி 3 வடிவிலான போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரரான ஜானி பார்ஸ்டோ, 107 ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 17 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 868 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 1512 ரன்களும் எடுத்துள்ளார்.
அனுபவ வீரர்கள் சொதப்பல்:
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் ஜானி பார்ஸ்டோ கடந்த 10 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக இங்கிலாந்து அணிக்காக அவர் ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், போப் ஆகியோர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அனுபவ வீரர்களான ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இங்கிலாந்து பேட்டிங் ஆர்டருடன் ஒப்பிடும்போது அனுபவம் குறைந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!
மேலும் படிக்க: Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

Source link

• IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

இந்தியா – இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
நேருக்கு நேர்:
இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 50 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் இங்கிலாந்து அணி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. 28 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
பிட்ச் அறிக்கை:
ராஞ்சியில் உள்ள ஆடுகளம் பல இந்திய ஆடுகளங்களைப் போலவே , பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக உள்ளது. இது போட்டி ஆரம்பித்த பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.
ராஞ்சி மைதானத்தில் டெஸ்ட் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் 2.61 சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மறுபுறம், சுழற்பந்து வீச்சாளர்கள் 2.82 என்ற எக்கனாமியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த  அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன் மற்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்திருக்கிறது இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் சராசரி ஸ்கோர் 474 ஆகும் .
IND vs ENG, 4வது ஆடும் 11 வீரர்கள்:
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகத் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார்/கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் ( விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், முகமது சிராஜ்
இங்கிலாந்து:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் ( விக்கெட் கீப்பர்  ), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ஷோயிப் பஷீர்.
மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு…தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
மேலும் படிக்க: Rishabh Pant: ஐபிஎல் தொடர்… டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Source link

• வகுப்பறையில் கவன சிதறலால் பாதிக்கப்படும் மாணவர்கள்.. மொபைல் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன்!

வகுப்பறையில் கவன சிதறலால் பாதிக்கப்படும் மாணவர்கள்.. மொபைல் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. குறிப்பாக, அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலனில் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிக மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்:

எனவே, மொபைல் போன்கள் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, மொபைல் போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன் அரசு:

மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், "அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் மீதான தடை நான்கு விதமாக அமல்படுத்தப்பட உள்ளது. ஒன்று, மொபைல் போன்களை மாணவர்கள் வீட்டிலேயே விட்டு செல்வது. இரண்டாவது, பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியர்களிடம் மொபைல் போன்களை கொடுத்துவிடுவது. மூன்றாவது, பள்ளிகளில் பாதுகாப்பான ஸ்டோரேஜில் மொபைல் போன்களை வைப்பது.

நான்காவது, மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் அதை  அருகில் வைத்து கொள்ளலாம். புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "காசாவில் நடப்பது போர் அல்ல.. இனப்படுகொலை" – இஸ்ரேலுக்கு எதிராக கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா!

Source link

• World Test Championship 2023-25: இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முந்தி சென்ற இந்திய அணி..!

World Test Championship 2023-25: இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முந்தி சென்ற இந்திய அணி..!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 7 போட்டிகளில் 50 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 59.52ஐ எட்டியுள்ளது. இதையடுத்து, 55 சதவீத புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து முதலிடம்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவீதம் 75.00. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா 2023-25 ​​சீசனில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று, மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அதேபோல், இந்திய அணி 7 டெஸ்டில் விளையாடி நான்கில் வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டெஸ்ட் டிராவுடன் 2வது இடத்தில் உள்ளது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​புள்ளிகள் அட்டவணை

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டிரா

புள்ளிகள்

புள்ளிகள் சதவீதம்

1

நியூசிலாந்து

4

3

1

0

36

75.00

2

இந்தியா

7

4

2

1

50

59.52

3

ஆஸ்திரேலியா

10

6

3

1

66

55.00

4

வங்கதேசம்

2

1

1

0

12

50.00

5

பாகிஸ்தான்

5

2

3

0

22

36.66

6

வெஸ்ட் இண்டீஸ்

4

1

2

1

16

33.33

7

இங்கிலாந்து

7

3

3

1

21

25.00

8

தென்னாப்பிரிக்கா

4

1

3

0

12

25.00

9

இலங்கை

2

0

2

0

0

0.00

போட்டியில் என்ன நடந்தது..?

ராஜ்கோட்டில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. அதேநேரம் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 122 ரன்களுக்குள் சுருண்டது. மார்க் வுட்டைத் தவிர, இங்கிலாந்தின் எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்களைத் தொட முடியவில்லை. அதிகபட்சமாக மார்க் வுட் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதே சமயம் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தற்போது, ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது.

Source link

• Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்

Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்

Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்

Source link

• Ravindra Jadeja: பொறுப்பான ஆட்டம்; பேட்டிங்கில் க்ளாசிக் ஷோ காட்டிய ஜடேஜா; சதம் விளாசி அசத்தல்

Ravindra Jadeja: பொறுப்பான ஆட்டம்; பேட்டிங்கில் க்ளாசிக் ஷோ காட்டிய ஜடேஜா; சதம் விளாசி அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அட்டகாசப்படுத்தியுள்ளார். இவர் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழ்ந்து இந்திய அணி தத்தளிக்கும்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். பொறுப்புடன் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா 198 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதத்தினை எட்டினார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் படி இந்திய அணி பேட்டிங்கினைத் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் சொதப்பலாக அமைந்தது. இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ரஜித் படிதார் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர்.

அவ்வளவுதான் இந்திய அணியால் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்க முடியாது என நினைத்த போது, அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  ஜடேஜா அரைசதம் விளாச, ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரோஹித் சர்மா 131 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது ஜடேஜா 83 ரன்கள் குவித்திருந்தார்.

அதன் பின்னர் வந்த சர்ஃப்ராஸ் கான் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை மிகச் சிறப்பாக கையாண்டு வேகமாக அரைசதம் விளாசினார். இதனால் ஜடேஜா மிகவும் குறைந்த பந்துகளையே எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மேலும் தான் எதிர்க் கொண்ட பந்துகளையும் பொறுப்பாக எதிர்கொண்டு டிஃபென்ஸ் பேட்டிங் செய்துவந்தார்.

ஜடேஜா 99 ரன்களில் இருந்தபோது ஒரு ரன் அடிக்க பந்தை மிட் ஆன் சைடில் அடித்துவிட்டு ஓட நினைத்தார். ஆனால் அதற்குள் மார்க் வுட் அந்த பந்தை பிடிக்க, ஜடேஜா ரன் எடுக்க ஓடி வரவில்லை. இதனால் நான் – ஸ்ட்ரைக்கர் திசையில் நின்ற சர்ஃப்ராஸ் கான் கிரீஸ்க்குள் செல்வதற்கு முன்னர் மார்க் வுட் அவரை ரன் அவுட் செய்தார்.

இறுதியில் ஜடேஜா 198 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் விளாசியும் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டும் சதம் விளாசினார். இந்த சதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜடேஜாவின் இரண்டாவது சதம் ஆகும். மேலும் ராஜ் கோட் மைதானத்தில் ஜடேஜா விளாசிய இரண்டாவது சதம் ஆகும்.

Source link

• IND Vs ENG 3rd Test India Won Toss Elected Bat First Dhruv Joel Sarfaraz Khan Debut

IND Vs ENG 3rd Test India Won Toss Elected Bat First Dhruv Joel Sarfaraz Khan Debut

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் முதன்முறையாக துருவ் ஜோயல் மற்றும் சர்ப்ராஸ் கான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்கி வந்த  கே.எஸ்.பரத்துக்கு பதிலாக இந்த போட்டியில் துருவ் ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.

🚨 Team Update 🚨4⃣ changes in #TeamIndia’s Playing XI for RajkotDhruv Jurel and Sarfaraz Khan are all set to make their Test Debuts 🙌Follow the match ▶️ https://t.co/FM0hVG5X8M#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/rk1o1dNQMc
— BCCI (@BCCI) February 15, 2024

இந்த மைதானம்  முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் வேகத்தில் மிரட்ட காத்துள்ளனர். இவர்களுடன் பென் ஸ்டோக்சும் இந்திய அணியை வேகத்தில் அச்சுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய இளம் சுழல் கூட்டணி ரெஹன் அகமது – டாம் ஹார்ட்லி இந்த போட்டியில் எப்படி வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்குகின்றனர். சுப்மன்கில் கடந்த டெஸ்ட் போல இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்.
இளம் வீரர்களான படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழல் கூட்டணியாக ஜடேஜா – அஸ்வின் – குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மிரட்ட காத்துள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் மோதிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரர்கள் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் எப்படி ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source link

• Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him

Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him

எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும்.
புஜாரா:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
வயது என்பது வெறும் எண்:
புஜாரா தன்னால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ என்னைப் பொறுத்தவரை வயது என்பதை ஒரு எண்ணாகவே கருதுகிறேன். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால், இப்போது வரை இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் அவர். ஜோகோவிச் சமீபத்தில் 35 என்பது புதிய 25 என்றார்.
நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் எனது உடலை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செ ்ய வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது தாக்குதல் ஆட்டம் ஆடுகிறது. ஆனால், அது அனைத்து மைதானங்களிலும் கிடையாது. டியூக்ஸ் பந்துகளில் அதேபோல நகர்வுகள் கிடையாது.
வெற்றியே முக்கியம்:
முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் என்பது கடினம். தற்போது கிரிக்கெட் மாறுகிறது. ஏராளமான ஷாட்கள் ஆடுகிறார்கள். மைதானங்கள் தற்போது அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், உங்களால் அதை தென்னாப்பிரிக்காவில் செய்ய முடியாது.
நான் என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், அது எப்படி அணிக்கு உதவ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அடுத்து பேட் செய்ய வருபவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். நான் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால் அது அணிக்கு உதவும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நன்றாக ஆடுவதை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் நேர்மறையுடன் ஆடி அணியை வெற்றி பெற வைத்தால் அது அணிக்கு நல்லது. விளையாடுவதற்கு பல வழிகள் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வரும் புஜாரா தற்போது நடந்து வரும் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 673 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்ததும் அடங்கும். புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 390 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Imran Tahir: 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்.. வயது தடையல்ல என நிரூபித்த இம்ரான் தாஹிர்!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் – சுனில் கவாஸ்கர்!

Source link

• India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion

India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. இச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.  இதில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவேஷ் கான் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவேஷ்கானை நீக்கியது ஏன்?
இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.  எனவே அவேஷ் கான் எங்கு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் முழு முயற்சியுடன் அவர் பயிற்சி எடுத்து பந்து வீசுவதை நான் நேரடியாக பார்த்தேன். இப்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலில் அவேஷ் கான் பெயர் இடம்பெறவில்லை.
இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெட்ஸில் ஆகாஷ் தீப் பந்துவீசியதால் டீம் மேனேஜ்மென்ட் அவரை மிகவும் விரும்பி உள்ளது.அவர் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் அணியில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது தான். ஆனால் அவேஷ் கான் எந்த தவறும் செய்யவில்லை. இப்படி இருக்கையில் அவருக்கான தகுதியை நிரூபிக்க நியாயமான வாய்ப்புகள் வழங்காமல் கைவிடுவது தேர்வு நடைமுறைகளின் நேர்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது.” என்று பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
தொடர்ந்து பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ரா இருக்கிறார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் நன்றாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அதேநேரம் ராஞ்சியில் நடக்கும் நான்காவது ஆட்டத்தை தவறவிட்டாலும் தர்மசாலாவில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகளை பொறுத்தே இது அமையும்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை – வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் ஓபன் டாக்

மேலும் படிக்க: Shreyas Iyer:இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்…காரணம் என்ன?

மேலும் காண

Source link

• Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான். அதன்படி, ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கும் போட்டிகளில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என தெரிகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது.
பிடிஐ செய்தி அறிக்கையின்படி, விராட் கோலி ஐந்தாவது டெஸ்டிலும் (மார்ச் 7-11) விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ குடும்ப விஷயங்கள் என்று வரும்போது, கிரிக்கெட் வீரருக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்ப நினைக்கிறாரோ, அப்போது திரும்பி வரட்டும். இதை பிசிசிஐ மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாகும். தற்போது அவர் இந்த தொடரில் முழுவதுமாக விளையாட வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.
விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடி:
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய அடி. விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சாதனையை முறியடித்தார். இதன் பிறகு, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கூட, விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு நிறைய ரன்களை குவித்தார். தற்போது இந்திய அணி மிடில் ஆர்டரில் விராட் கோலி இல்லாமல் தவித்து வருகிறது. விராட் கோலியைத் தவிர, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள எந்த வீரரும் அணியில் இல்லை.
விரைவில் அணி அறிவிப்பா..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கி எதிராக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. தற்போது இரு அணிகளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும். இரு அணிகள் மோதும் இந்த போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் அணியில் மீண்டும் களமிறங்குவார்கள்..?
டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பலாம் என தெரிகிறது. காயம் காரணமாக இருவரும் கடைசி போட்டியில் விளையாடவில்லை. தற்போது, இரு வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் மீண்டும் களமிறங்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் களமிறங்கினார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆடும்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

We have named our XI for the second Test in Vizag! 🏏🇮🇳 #INDvENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 | #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 1, 2024

இங்கிலாந்து அணியின் விவரம் பின்வருமாறு:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அறிமுக வீரராக சோயிப் பஷீர்:
இங்கிலாந்து அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் சுழலில் அசத்திய டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்கினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சோயிப் பஷீர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். 20 வயதே ஆன சோயிப் பஷீர் வலது கை சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி அசத்திய டாம் ஹார்ட்லியை போல சோயிப் பஷீரும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவாரா? என்பது இந்த போட்டியில் தெரிய வரும்.
இந்திய அணி கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியும், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பின்னடைவாக உள்ளது. விராட் கோலி நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் 2வது இன்னிங்சில் சிறப்பாக செயல்படாதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், இந்த போட்டியில் இந்திய அணி அந்த தவறை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IPL 2024: ஆர்சிபி அணியில் இணையும் ஷமர் ஜோசப்..? டாம் கர்ரனுக்கு பதிலாக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு!
மேலும் படிக்க:  ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்! ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜடேஜா!

Source link

• IND Vs ENG Virat Kohli Withdraws From First Two Tests Against England Citing Personal Reasons | Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல்

IND Vs ENG Virat Kohli Withdraws From First Two Tests Against England Citing Personal Reasons | Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தற்போது விராட் கோலி ஆடி முடித்துள்ளார்.
விராட் கோலி விலகல்:
இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆடுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அவர் இந்திய கேப்டன் ரோகித்சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

🚨 NEWS 🚨Virat Kohli withdraws from first two Tests against England citing personal reasons.Details 🔽 #TeamIndia | #INDvENGhttps://t.co/q1YfOczwWJ
— BCCI (@BCCI) January 22, 2024

என்ன காரணம்?
தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு கேட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற பலமிகுந்த அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாதது இந்திய அணியை பாதிக்கும். விராட் கோலி இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2016ம் ஆண்டு நடந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 5 டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 655 ரன்கள் குவித்து அந்த தொடரிலே அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1991 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். இதில் 3 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 848 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!

Source link