Tag: DMDK Leader Vijayakanth

  • Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

    Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

    நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார். 
    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 
    இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன், கண்ணீர் மல்க பேசியது சுற்றியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சில நிமிடங்கள் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினர். அவர் தனது பேச்சின்போது, “பேரன்பு கொண்ட பெரியோர்களே,தாய்மார்களே, அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே,இளைஞர்களே, பொதுமக்களே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரையுலக பிரமுகர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சொல்லின் சொந்தக்காரர். ஒரு சொல் இனி தமிழ்நாடு முழுவதும் என் மூலம் ஒலித்து கொண்டிருக்கும். இதை சொல்வதில் நான் பெருமையடைகிறேன், சந்தோஷப்படுகிறேன்.
    ஏனென்றால் சின்ன வயதில் இருந்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட எங்க அப்பாவை தான் நிறைய முறை பார்த்து இருப்பேன். அப்பா என்றால் நான் ரொம்ப எமோஷனல் ஆகிறுவேன். கேப்டன் எங்கேயும் போகல. நம்முடன் தான் இன்னைக்கு இருக்காரு. அவர் இறந்தது முதல் இந்த நாள் வரை எந்த மீடியாவிலும் பேசவில்லை. இதுதான் முதல் முறையாக பேசுகிறேன். அதேபோல் எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே எங்களை கொடுத்து கொடுத்து தான் பழக்கி இருக்கிறார். அது தான் என்னைக்கும் இருக்கு. நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல. என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம்.
    ரொம்ப பெருமையா இதை சொல்வேன். காரணம், ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பிங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும் போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகள் கொடுத்தேன்.அதை 2024ல் நிறைவேற்றுவேன். அது என்ன என்பதை இப்ப சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும். கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. நான் ஒவ்வொரு மீட்டிங்கில்  சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.
    விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் சொல்ல போய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பாக்குறப்ப அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.
    டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், ” இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்” என்பதை கூறி விடை பெறுகிறேன். அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் இல்லை. கோபமும் இல்லை என தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.

    Source link

  • Zee Tamil Will Be Telecasted Special Program For Tribute To Late Dmdk Leader Vijayakanth

    Zee Tamil Will Be Telecasted Special Program For Tribute To Late Dmdk Leader Vijayakanth

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீ தமிழ் சேனலில் பொங்கல் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 
    தமிழ் சினிமா, தமிழக அரசியல் என இரண்டிலும் தனது திறமையால் கோலோச்சியவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைபாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை மீள முடியாத சோகத்தில் தான் இருந்து வருகின்றனர்.
    அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சல்யூட் டூ கேப்டன் என்ற பெயரில் திரையுலகில் ரீல் ஹீரோவாகவும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாகவும் நல்ல நடிகனாக நல்ல மனிதராக என அனைத்து விதத்திலும் மக்கள் கொண்டாடும் நாயகனாக தொண்டர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் மறக்க முடியாத விஷயங்களையும் தருணங்களையும் நினைவு கூறும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் விஜயகாந்த்திற்கு கட் அவுட், பேனர் உள்ளிட்டவற்றை வைத்து தொடர்ந்து அன்னதானம் போன்ற விஷயங்களை செய்து அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நேரத்தில் விஜயகாந்தின் மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து கேப்டன் விஜயகாந்த் நல்ல நடிகனாக, நல்ல தலைவனாக, வழிகாட்டியாக, ரியல் ஹீரோவாக, நண்பனாக அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை விளக்கும் வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல திரையுலக பிரபலங்கள் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    மேலும் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: Kamalhaasan: காமெடிக்கு ஒரு அளவு இருக்கு: கமல் – மாயா பற்றி தரக்குறைவான பேச்சு: மன்னிப்பு கேட்டு புகழ், குரேஷி வீடியோ!

    Source link