Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? – ஆவேசமான வெற்றிமாறன் – வைரல் வீடியோ!
<p>இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. </p> <p>இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி இயக்குநராக உள்ளவர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய 6 படங்களை மட்டுமே 17 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விடுதலை பாகம் 2 அடுத்ததாக வெளியாகவுள்ள நிலையில், வடசென்னை 2, வாடிவாசல் போன்ற…
