Vela Ramamoorthy: ஓவர் வில்லத்தனமா இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி கருத்து!
<p>மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். </p> <p>மதயானை கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னாள் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி நடித்து…
