Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ( பிப்ரவரி 25) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…
