Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
Tag: Captain Miller OTT Release

Captain miller : இனி அமேசான் ப்ரைமில் கேப்டன் மில்லர்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Captain Miller Box Office Collection Day 1 Rs 8.65 Cr India Net On Its First Day For All Languages
தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. ஆனால் 2000-களின் பிற்பாதியில் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது என்பது முழுக்க முழுக்க படத்தின் கலெக்ஷனை வைத்து என ஆகிவிட்டதால் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் கலெக்ஷன் எவ்வளவு என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டு விடுகின்றது.
அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படங்கள் என்றால் அது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பீரியாடிக் ஜானரில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் 5 சதவீதம் மட்டுமே நாங்கள் வைத்த லைட் செட்டிங். மீதி எல்லாமே இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். அதையே பயன்படுத்தி கொண்டுள்ளோம். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்காக 125 நாட்கள் செலவிடப்பட்டது. அதில் 75 நாட்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தார். படத்தின் ஒரு இடத்தில் சுமார் 1000 நபர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த சண்டை காட்சி தான் படத்தின் ஹைலைட் என இயக்குநர் அருன் மாதேஸ்வரன் கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இதன் அடிப்படையில் நேற்று வெளியான கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் எவ்வளவு என சாக்நிக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேப்டம் மில்லர் திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் இந்தியாவில் மட்டும் ரூபாய் 8.65 கோடி வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் கேப்டன் மில்லர் படம் இந்தியாவில் மொத்தம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழில் நேற்று மட்டும் ஐமேக்ஸில் மட்டும் 67 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது.
இது இல்லாமல் ஹிந்தியில் மட்டும் மொத்தம் 849 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி ஐமேக்ஸ் காட்சிகள் மட்டும் 31. கன்னட மொழியில் 84 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் மட்டும் 2,459 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதில் கலெக்ஷன் ஆன முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 8.65 கோடி என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.
Dhanush Starring Captain Miller Film OTT Release Rights Gets Amazon Prime | Captain Miller OTT Release: கேப்டன் மில்லர் படத்தை தட்டித் தூக்கிய ஓடிடி தளம்
Captain Miller OTT Release: கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் பல கோடிகளை கொட்டி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் கேப்டன் மில்லர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேறும்படி பீரியட் ஜானரில் ஆக்ஷனில் மிரட்டலாக வெளிவந்து இருக்கும் கேப்டன் மில்லர் படம் தனுஷூக்கு கம்பேக் கொடுத்துள்ளது.
படத்தில் 3 கெட்டப்களில் நடித்துள்ள தனுஷ் கேப்டன் மில்லராக நடித்து அசத்தி இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் படத்தின் எதார்த்தம் சறுக்கினாலும், பெரும்பாலானோரின் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருப்பதால் முதல் நாள் வசூலில் ரூ.30 கோடியை எடுத்து சக்சஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வசூலை அள்ள வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் கேப்டன் மில்லர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அந்நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. எனினும், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.50 கோடிக்கு கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல், சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். மொத்த படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு கதைக்கு எத்தகைய உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது. படத்தின் பெரும்பலம் என்று பார்த்தால் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தான். குறிப்பாக இடைவேளை காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க: Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
KH237: கமல் நடிக்கும் KH237 படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள் : மாஸ் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்..


