Karur Corporation ordinary meeting and budget meeting was held today – TNN
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் வாயில் கறுப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சாதாரண கூட்டம் முடிந்தபின், பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. மாநகராட்சி வரவு, செலவு…
