Tag: Brahmastra

  • Brindha Sivakumar shares her memories about how her friends were craze about suriya | Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா

    Brindha Sivakumar shares her memories about how her friends were craze about suriya | Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா


    1960 காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். அவரின் அபாரமான நடிப்பு திறமையால் திரையுலகின் மார்க்கண்டேயன் என அழைக்கப்பட்டவர். அவரின் வழியிலேயே மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். 
    சூர்யா தங்கை: 
    அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் ஒரே மகள் பிருந்தாவும் திரைதுறையில் தற்போது ஒரு பாடகியாக, டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். பான் இந்தியன் படமாக பாலிவுட்டில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் மூலம் திரைத்துறையில் இணைந்தார் பிருந்தா. ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நடிகை ஆலியாவுக்கு  டப்பிங் பேசி இருந்தார் பிருந்தா. சோசியல் மீடியா மூலம் பிருந்தாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.  
     

    சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய அண்ணன்களை பற்றி பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்படி அவர் பேசுகையில் “சூர்யா அண்ணன் படத்தில் நடிக்க ஆரம்பிச்ச போது நான் பிளஸ் 1 படிச்சுட்டு இருந்தேன். என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் அண்ணனை தெரியும். உங்க அண்ணன் ரொம்ப குட் லுக்கிங். நாம வேணும்னா வீட்ல போய் நோட்ஸ் இல்லனா புக்ஸ் ஏதாவது கலெக்ட் பண்ணிட்டு வரலாமா? அப்படினு அப்போ எல்லாருமே என்கிட்ட கேப்பாங்க. அப்படியே சிரிச்சு போயிடுவேன். 
    என்னோட மாஸ்டர்ஸ் டிகிரி வந்து லயோலா காலேஜில் பண்ணேன். சண்டேஸ் மட்டும் தான் காலேஜ். அங்க யாருக்குமே நான் சூர்யா தங்கச்சின்னு சுத்தமா தெரியாது. போட்டோ எதுவுமே போடமாட்டேன். யாருக்குமே என்னை தெரியாததால நான் நல்லா என்ஜாய் பண்ணுவேன். ஒரு பக்கம் சித்தி சீரியல் பத்தி பேசிட்டு இருப்பாங்க. ஒரு பக்கம் காக்க காக்க படம் பத்தி பேசிட்டு இருப்பாங்க. அதை எல்லாம் கேட்டு நான் என்ஜாய் பண்ணுவேன்.
     

    கிண்டல் செய்த ப்ரண்ட்ஸ்:
    ஒரு நாள் திடீரென உன்னோட வீடு எங்க இருக்குனு தற்செயலா கேட்டாங்க. நான் தி. நகரில் இருக்கேன்னு சொன்னேன். அப்புறம் தெரு பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னவுடனே அங்க தான் சூர்யா வீடு கூட இருக்கு. எதுக்கு வம்பு ஆமா அங்க தான் பக்கத்துல இருக்கு அப்படின்னு சொல்லிட்டேன். நீ அவர பாத்து இருக்கியா?  சைட் அடிச்சு இருக்கியா? அப்படின்னு கேட்டாங்க. சைட் எல்லாம் அடிக்க மாட்டேன் அவர் எனக்கு அண்ணன் மாதிரி அப்படின்னு  சொன்னேன். அதை கேட்டுட்டு சூர்யாவை போய் அண்ணன் மாதிரின்னு சொல்றா பாருயா அப்படினு என்னை கிண்டல் பண்ணுவாங்க என்றார் தன்னுடைய காலேஜ் டேஸ் மெமரிஸ் பகிர்ந்தார் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் தங்கையுமான பிருந்தா.

    மேலும் காண

    Source link

  • Mouni roy shares that faced lots of rejection in becoming bollywood actor

    Mouni roy shares that faced lots of rejection in becoming bollywood actor


     
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக பயணித்த பல நடிகைகளில் ஒருவர் பாலிவுட் நடிகை மௌனி ராய். இந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘நாகினி’ தொடர் வெற்றிபெற்றதை அடுத்து அது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கும் ‘ஷோடைம்’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை மௌனி ராய் அவர் நிராகரிக்கப்பட்டதை பற்றியும் அவர் எப்படி கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க டைப்காஸ்ட் செய்யப்பட்டார் என்பதை பற்றியும் பேசி இருந்தார். 
     

    நடிகை மௌனி ராய் பேசுகையில் “நான் டைப்காஸ்ட் செய்யப்பட்டேனா என யாராவாவது என்னிடம் கேட்டால் ‘ஆமாம்’ என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும். இருப்பினும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை தேர்ந்தெடுத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
    திரை தொழில் என்பது நியாயமான ஒரு தொழிலாக இருக்கலாம் ஆனால் மிகவும் கடினமானது என்பதை நான் உண்மையாக நம்புகிறேன். கடின உழைப்பு மற்றும் சவால்கள் இல்லாமல் போராட்டம் இல்லாமல் இருக்காது. அதே போல வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை. வேலை செய்வது நிச்சயம் அதற்கான பலனை கொடுக்கும் என்பதை நான் முழுமனதாக நம்புகிறேன்” என்றார் மௌனி ராய். 
    ”நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் உண்மையான உழைப்பைகொடுக்கும் போது நிச்சயமாக ஒரு நாள் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். இது தான் என்னுடைய வாழ்க்கையின் தாரக மந்திரம். நான் யாரிடமாவது பேசினால், என் 100 சதவீத கவனமும் அவர்களிடம் மட்டுமே இருக்கும்” என்றார். 
    தொடர்ந்து அவர் பேசுகையில் “பாலிவுட் நடிகையாகும் திறமை என்னிடம் இல்லை என நான் நிராகரிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் என்னை புறக்கணித்த போதும் திரைத்துறை மீது எந்த ஒரு கசப்பும் இல்லாமல் என்னால் பயணிக்க முடிந்தது” என்றார் மௌனி ராய். 
     

    மேலும் உங்களை பற்றிய லேட்டஸ்ட் வதந்தி ஒன்றை கூறுங்கள் என கரண் ஜோகர் கேட்க “என்னை பற்றி நான் பரப்ப விரும்பும் ஒரு வதந்தி என்னவென்றால் நான் நீங்கள் இயக்க போகும் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்பது தான்” என சொல்லி கரண் ஜோகருக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். 
    கடந்த ஆண்டு வெளியான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தில் ஜுனூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மௌனி ராய் பாராட்டுகளை குவித்தார். மேலும் அவரின் நடிப்பு ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பை காட்டிலும் பாராட்டை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் காண

    Source link