Tag: bihar

• NitishKumar touching PM NarendraModi’s feet at Bihar rally TejashwiYadav says we felt very bad

NitishKumar touching PM NarendraModi’s feet at Bihar rally TejashwiYadav says we felt very bad

பீகார் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் நிதிஷ்குமார் தொட்டதையடுத்து, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
மோடி காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ்குமார்:
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பரப்புரை கூட்டம் நடத்தினர்.
அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதலமைச்சரான நிதிஷ் குமார், பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கியுள்ளார் என்று தேஜஸ்வி தெரிவித்தார்.பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களை தொட்ட புகைப்படத்தை இன்று பார்த்தேன். இதை பார்த்த நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம். நிதிஷ் குமார் எங்கள் பாதுகாவலர்.

नीतीश कुमार आज मोदी का पैर छुए है।इस से बुरा और क्या ही देखना बाकी रह गया है।हमारे चाचा को अशोक चौधरी संजय झा ललन सिंह मिलकर बर्बाद कर दिया..!!उन्हें इस स्तिथि में देखकर मन विचलित है।#biharpoltics #NitishKumarpic.twitter.com/lUa7zeh9ph
— संजीत कुमार (@sanjeetkumaar16) April 7, 2024

நிதிஷ் குமார் அளவுக்கு அனுபவம் வாய்ந்த முதல்வர் வேறு யாரும் இல்லை. ஆனால்,  பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு இருக்கிறார். இந்த செயலால் நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்றும் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

#WATCH | Patna: Former Bihar Deputy Chief Minister and RJD leader Tejashwi Yadav says, “Today I saw a picture of Nitish Kumar where he touched the feet of Prime Minister Narendra Modi…We felt very bad. What has happened? Nitish Kumar is our guardian…There is no other Chief… pic.twitter.com/HhC641XtoO
— ANI (@ANI) April 7, 2024

இந்நிலையில், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Published at : 07 Apr 2024 11:28 PM (IST)

மேலும் காண

Source link

• Opposition INDIA alliance Finalises Seat Sharing In Bihar Congress RJD to have Friendly Fight in one seat | பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி

Opposition INDIA alliance Finalises Seat Sharing In Bihar Congress RJD to have Friendly Fight in one seat | பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதே நேரத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அகற்ற I.N.D.I.A கூட்டணி கடும் முயற்சி செய்து வருகிறது. I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் காட்டும் I.N.D.I.A கூட்டணி:
அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் இடதுசாரி கட்சிகளுக்கு 5 தொகுதிகளும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளை பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 3 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
ஆனால், ஒரு தொகுதியில் உடன்பாடு எட்டப்படாததால் அங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் இணைந்ததால் தொகுதி உடன்பாடு சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தொகுதிகளை பிரித்து கொள்வதில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, கட்சி தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 கட்டங்களாகவும் அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் 2 கட்டங்களாகவும்,  தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் காண

Source link

• Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்

Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.
காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்:
சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,  டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராமில் இருந்து 2023 இல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.
காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்:
அதே நேரத்தில் பீகாரின் பெகுசராய் உலகின் மிகவும் மாசுபட்ட பெருநகரப் பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான பட்டியலில் கூட இல்லாத இந்த நகரம், 2023ம் ஆண்டு பட்டியலில் நேரடியாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில் 134 நாடுகளில் நடந்த ஆய்வில்  இந்தியா மூன்றாவது மோசமான காற்றின் தரத்தைக கொண்டிருந்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம் மற்றும்  பாகிஸ்தான் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், 2022 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 53.3 மைக்ரோகிராம் PM2.5 செறிவுடன், மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நாடுகளின்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காற்றின் நிலை:
உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றில் இருக்க வேண்டிய நுண்துகள்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தியாவில் 7 மடங்கு அதிகமாக உள்ளது. இதனை 133 கோடி மக்கள் சுவாசிப்பதாக, அதாவது இந்திய மக்கள் தொகையில் 96 சதவிகிதம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 66 சதவிகிதத்திற்கும் அதிகமான நகரங்கள் ஆண்டு சராசரியாக, ஒரு கன மீட்டருக்கு 35 மைக்ரோகிராம்களை விட அதிகமான நுண் துகள்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஆபத்து:
PM2.5 காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இருக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மேலும் சிக்கலாகலாம். உயர்ந்த அளவிலான நுண்ணிய துகள்கள் காற்றில் இருப்பது, குழந்தைகளுக்கு அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம், மனநலப் பிரசினைகளுக்கு வழிவகுக்கும். உலகளவில் ஒன்பது பேர் பலியானால் அதில் ஒன்று காற்று மாசுபாட்டால் நிகழ்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.
ஆய்வு செய்யப்பட்டது எப்படி?
30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் உலகளாவிய குறைந்த விலை காற்றின் தர சென்சாரக்ளின் தரவுகளில் இருந்து இந்த ஆய்வு முடிவுகள் ஒருங்கிணக்கப்பட்டதாக IQAir தெரிவித்துள்ளது. இந்த நிலையங்கள் மற்றும் சென்சார்கள் ஆனது ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி வசதிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

மேலும் காண

Source link

• நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த நாடாளுமன்ற தேர்தல்:

மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் பீகாருக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது.

பீகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக:

இதனால், பீகாரில் கூட்டணியை பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதனை தொடர்ந்து, மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதுமட்டும் இன்றி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சியை கூட்டணியில் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்தது.

இப்படிப்பட்ட சூழலில், பீகாரில் பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.ஏ.எம். கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் சமமான தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது.

ஆனால், இந்தமுறை, முதல்முறையாக நிதிஷ் குமார் கட்சியை விட கூடுதலாக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது பாஜக. கடந்த தேர்தலில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டது. லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

• பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம்:
அதில், 12 பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், 12 பேரில் 6 பேர் முதல்முறை அமைச்சர்கள் ஆவர். பாஜகவை சேர்ந்த மங்கள் பாண்டே, அருணா தேவி, நீரஜ் பப்லு, நிதிஷ் மிஸ்ரா, நிதின் நவீன், ஜனக் ராம், கேதார் குப்தா, திலீப் ஜெய்ஸ்வால், ஹரி சாஹ்னி, கிருஷ்ணா நந்தன் பாஸ்வான், சுரேந்திர மேத்தா, சந்தோஷ் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த அசோக் சவுத்ரி, லேஷி சிங், மதன் சாஹ்னி, மகேஷ்வர் ஹசாரி, ஷீலா குமாரி மண்டல், சுனில் குமார், ஜெயந்த் ராஜ், ஜமா கான் மற்றும் ரத்னேஷ் சதா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பீகாரை பொறுத்தவரையில் அதிரடி அரசியல் மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாஜகவுடனும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் நிதிஷ் குமார், இந்த முறை பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளார்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்:
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் இணைந்தார். இதையடுத்து, பிகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்று கொண்டார். அதை தொடர்ந்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது. இந்த சூழலில், மக்களவை தேர்தலையொட்டி பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு அடுத்து இடத்தில்தான் பாஜக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சூழல் மாறி, தற்போது கூட்டணிக்கு தலைமை ஏற்கும் இடத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!

மேலும் காண

Source link

• PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்

PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்

PM Modi Visit 5 States: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்:
இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இரண்டு நாட்களில் 5 மாநிலங்கள்:
அந்த வகையில், பிரதமர் மோடி  இரண்டு நாட்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதாவது, தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மார்ச் 4 முதல் 6ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.   இந்த 5 மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஒருநாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.  மகாராஷ்ராவில் இருந்து நாளை புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்று ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்பின், நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில்  நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாடு டூ பீகார் வரை:
நாளை இரவே தெலங்கானா செல்லும் பிரதமர் மோடி, மார்ச் 5ஆம் தேதி காலை 10 மணியளவில்  ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள விமான  போக்குவரத்து ஆய்வு நிறுவனத்தை திறந்து வைத்து, ரூ.6,800 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு ஒடிசா செல்கிறார் பிரதர் மோடி. அங்கு சண்டிகோலேயில் 19,600 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி.
இப்பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்,  பாலசோர்-ஜார்போகாரியா, டாங்கி-புவனேஸ்வர், சண்டிகோலே – பாரதீப் வரை நான்கு வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்பின், மார்ச் 6ஆம் தேதி காலை 10 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சாலை, ரயில், பெட்ரோலியம் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்ற உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்திற்கு மதியம் 2.30 மணியளில் செல்லும் மோடி, 8,700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• Rahul Gandhi Tours Bihar In Jeep Wrangler, Tejashwi Yadav In Driver’s Seat | Rahul Gandhi: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ்

Rahul Gandhi Tours Bihar In Jeep Wrangler, Tejashwi Yadav In Driver’s Seat | Rahul Gandhi: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிஹார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.
ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜடோ நியாய யாத்திரை கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது.  மேகாலயா, ஜார்கண்ட்.அஸ்ஸாம், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களை அடுத்து பிஹாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள  சசரம் (Sasaram) பகுதியிலிருந்து தொடங்கிய பயணத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (Rashtriya Janata Dal) தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.
சிகப்பு நிற காரில் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி கார் ஓட்டிச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நிதிஷ் குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பிஹாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரிது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணிக்கு  கைமூரில் (Kaimur) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் தேஜஸ்வியும் உரையாற்ற உள்ளனர்.

सासाराम, #बिहार से भारत जोड़ो न्याय यात्रा की आज की शुरुआत @RahulGandhi pic.twitter.com/2EFQnuEmRg
— Tejashwi Yadav (@yadavtejashwi) February 16, 2024

I.N.D.I.A. கூட்டணியிலிருந்து பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளிய பிறகு,தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது.
ராகுல் காந்தியில் நியாய யாத்திரை பிகாரை அடுத்து இன்று மாலை உத்தர பிரதேசத்தின் சண்டெளலி (Chandauli) பகுதியை அடைகிறது. அங்கு நடைபெறும் பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர், எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.
பாரத் ஜடோ நியாய யாத்திரை
ராகுல் காந்தி  பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது.

மேலும் காண

Source link

• பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!

பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி:
இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. – ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார்.
இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் இன்று ஆளுங்கட்சியினரால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில்  நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்த்து வந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறினர். அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தவர், அந்த கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி பிரிந்து, அதே தேதியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பீகாரின் 9வது முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
தேஜஸ்வி யாதவ் கண்டனம்:
இதனால், நிதிஷ்குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிக கடுமையாக விமர்சித்தது. இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தனது புதிய கூட்டணியுடன் அவரை நீக்கியுள்ளனர். இதற்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!
மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்

மேலும் காண

Source link

• Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine

Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine

வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு:
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசியல் கட்சிகள்:
பா.ஜ.க.வின் 78 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 45 உறுப்பினர்களும், ஜிதன்ராம் மாஞ்சிஸ் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 4 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 114 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில், பீகாரில் அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 45 பேரில் 4 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும் பரபரப்பு:
அதேபோல, கயாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 78 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வராததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் விஜய் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரியா ஜனதா தள எம்.எல்.ஏ. சேத்தன் ஆனந்த் காணவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடக்கும் இந்த அரசியல் சூழல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!
மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்

மேலும் காண

Source link

• Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்

Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது.
நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி:
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அடுத்தடுத்து கூட்டணியை மாற்றி வரும் நிதிஷ் குமாரின் நடவடிக்கைகளை I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

#WATCH | Begusarai: On On JDU Chief Nitish Kumar resigning as the CM of Bihar and JD(U)-BJP alliance, Prashant Kishor, Poll Strategist says, “I have been saying this since starting that Nitish Kumar can swap anytime. This has become a part of his politics… He is a ‘paltumaar’.… pic.twitter.com/V7LR9rcJ71
— ANI (@ANI) January 28, 2024

”பாஜக – நிதிஷ் கூட்டணி நீடிக்காது”
பாஜக – நிதிஷ் கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் காட்டமாக பேசியுள்ளார். அதன்படி, ”அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், நான் எனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு வட்டியுடன் திருப்பித் தருவார்கள். தற்போதைய சூழலில் பீகாரில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், நிதிஷ் குமாரை முகமாக கொண்ட பாஜகவால் ஆதரிக்கப்படும் கூட்டணி,  மறுபுறம் ஆர்ஜேடி உள்ளிட்ட பிற கட்சிகள். இதே சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்காது. அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பல அதிரடியான முன்னேற்றங்கள் நிகழும். மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குள், அந்த முன்னேற்றங்களை காண்பீர்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான நிதிஷ் குமாரின் கூட்டணி நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் தனது கூட்டணியை மாற்றுவார் என பல மாதங்களாக கூறி வருகிறேன். அவரது அரசியலில் இது ஒரு அங்கமாக உள்ளது. ஆனால், இது தற்போது பாஜகவிற்கும் பொருந்தியுள்ளது. பல்வேறு விவகாரங்களில் நிதிஷ்குமாரை  குற்றம்சாட்டி வந்த பாஜக, தற்போது அவருக்கு ஆதரவளித்து முதலமைச்சராக்கியுள்ளது. எனவே, 2025ம் ஆண்டு தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் பெரும்பான்மையை கைப்பற்றும்” என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – டி.ஆர். பாலு

Source link

• Delhi Wakes Up To Thick Fog Again Over 100 Flights Affected Fog Continue 3 Days | Delhi Fog: டெல்லியை வாட்டும் குளிர்! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்; 100 விமான சேவை பாதிப்பு

Delhi Wakes Up To Thick Fog Again Over 100 Flights Affected Fog Continue 3 Days | Delhi Fog: டெல்லியை வாட்டும் குளிர்! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்; 100 விமான சேவை பாதிப்பு

Delhi Fog: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.
டெல்லியை வாட்டும் குளிர்:
வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.  அதிக பனிமூட்டம் நிலவுவதால் எங்க பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது.  கடந்த சில நாட்களாக பனிமூட்டதால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியான உளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலோ கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையிலேயே பனிமூட்டம் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, தேசிய தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

30 trains to Delhi from various parts of the country are running late due to dense fog conditions as on 16th January. pic.twitter.com/v9g14OlFwR
— ANI (@ANI) January 16, 2024

பனிமூட்டம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி ரயில் நிலையத்தில் 30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.   ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
3 நாட்களுக்கு தொடரும்:
அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பனிமூட்டம் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியாக பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்கு பகுதியில் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டம் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.

#WATCH | Madhya Pradesh | Dense fog engulfed Gwalior this morning as cold wave conditions continue. Visuals shot at 8:15 am today. As per IMD, the city is likely to experience a minimum temperature of 6 degrees Celsius today. pic.twitter.com/huGI1c0T1C
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 16, 2024

இதனால், டெல்லிக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி – அமெரிக்க அரசியலில் பரபரப்பு

Source link

• PM Modi: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி? பீகார் பயணத்தில் என்ன திட்டம்?

PM Modi: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி? பீகார் பயணத்தில் என்ன திட்டம்?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை, பீகார் மாநிலம் பெட்டியா நகர் சம்பாரனில் உள்ள ராமன் மைதானத்தில் இருந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை  தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்றும் போட்டி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியக் கூட்டணி சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் சில மாதங்களில் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சூழலில் இன்று பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சுமார் ரூ. 5,600 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பீகாரில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பீகாரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல பேரணிகளில் உரையாற்ற உள்ளனர். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி மூன்று பேரணிகளில் உரையாற்ற உள்ளார். வரும் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பேரணியில் கலந்துக்கொள்ள உள்ளார்.

இதேபோல், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாலந்தா ஆகிய இடங்களில் அமித் ஷா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேபி நட்டா பல இடங்களில் பேரணிகளை நடத்தலாம், குறிப்பாக பீகாரின் சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பீகார் அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜேடியு மஹாகத்பந்தன் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் பாஜக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது.

பிஜேபியுடனான முந்தைய கூட்டணியில் இருந்து மாற்றத்தைக் குறிக்கும் வகையில், வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதலமைச்சர் நிதிஷ்குமார் வெற்றிகரமாக ஒன்றிணைத்துள்ளார். பீகாரில் உள்ள அனைத்து 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் போட்டி அமைக்கப்பட்டுள்ளது, அங்கு கடந்த தேர்தலில் என்.டி.ஏ 39 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றிப் பெற்றது.

பாஜகவின் பிரச்சாரத்தை நரேந்திர மோடி மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால், கட்சியின் மாநில அமைப்பை தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைத்துள்ளது. பீகாரில் அரசியல் சூழல், கணிசமான தேர்தல் மோதலுக்கு தயாராகி வருகிறது.

Source link

• கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட கட்சியின் தலைவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை, நாடு முழுவதும் இருப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், அப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.

பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது  என்றும், இத்தகைய கருத்துகளை தெரிவிப்பதை அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.