Tag: Bigg Boss Season 7 Tamil

  • Bigg Boss Season 7 Tamil Saravana Vikram Sister Surya Slams Maya And Her Brother Ralationship

    Bigg Boss Season 7 Tamil Saravana Vikram Sister Surya Slams Maya And Her Brother Ralationship

    Bigg Boss 7 Tamil Vikram: மாயாவிடம் மீண்டும் பேசும் சரவண விக்ரம் தவறான பாதைக்கு செல்வதாக அவரது தங்கை காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 
     

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் உள்ளனர். 
     
    ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள சரவண விக்ரம், மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரிடம் சரண்டராகியுள்ளார். மேலும், சரவண விக்ரமின் தங்கை பேசியது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று மாயா கூறியபோது, ” நாம் பழகியது நமக்கு தானே தெரியும்” என சரவண விக்ரம் பதில் கூறியுள்ளார். 
     
    இது சரவண விக்ரமின் குடும்பத்தாரை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த நிலையில், மாயாவிடம் மீண்டும் சரவண விக்ரம் பேசியது குறித்து அவரது தங்கை சூர்யா இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களுடைய குடும்பத்தை விட நீங்கள் வேறொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 
     
    முன்னதாக ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சரவண விக்ரமின் குடும்பத்தார், அவர் சரியான வழியில் இல்லை என்றும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர். குறிப்பாக மாயாவை பங்கமாக பேசிய சரவண விக்ரமினி தங்கை சூர்யா, மாயாவிடம் இருந்து தனது அண்ணன் ஒதுங்கி இருக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார். அடுத்த வாரத்தில் சரவண விக்ரம் வெளியேறினார். அப்போது, மாயா சரவண விக்ரமிடம் சரியாக பேசாமல் அவரை புறக்கணித்தது பிக்பாஸில் சர்ச்சையானது.  இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சரவண விக்ரம் மீண்டும் மாயா பக்கம் சென்றுள்ளார். 
     

     

    Source link

  • Bigg Boss Season 7 Tamil Vijay Varma Shares Archana Game Play Strategy

    Bigg Boss Season 7 Tamil Vijay Varma Shares Archana Game Play Strategy

    Bigg Boss 7 Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா திட்டமிட்டு விளையாடும் கேம் ஸ்ட்ரேட்டஜி பற்றி விஜய் வர்மா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.
    பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். போட்டியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா ஆவார் என்று அவரது ஃபேன்பேஸ் டிரெண்டாக்கி வரும் நிலையில், அர்ச்சனாவின் கேம் பிளேன் ஸ்ட்ரேட்டஜி குறித்து விஜய் வர்மா புட்டு, புட்டு வைத்ததுடன், அர்ச்சனாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டாரிடம் எடுத்துரைத்தார். 

     
    இந்த நிலையில் அர்ச்சனா குறித்து விஜய் வர்மா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ”அர்ச்சனா ஒரு சின்ன விஷயத்தை கூட நான் இதை செய்தேன், நான் இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நாம ஒரு நேரத்தில் ஒருமுறை தான் அந்த விஷயத்தை சொல்வோம். ஆனால், அவங்க 10 முறை அதே வார்த்தையை சொல்லி சொல்லி மத்தவங்ககிட்ட கொண்டு போய்ட்டு சேர்த்துடுவாங்க. நீ போனா உங்கிட்ட பேசுவாங்க, அவங்க போனா அவங்ககிட்ட பேசுவாங்க. யாருமே இல்லையென்றால் தனியா பேசுவாங்க.

     
    இந்த விளையாட்டை பற்றி க்ளியரா தெரிஞ்சு வச்சி இருந்தாங்க. விஷ்ணுவுக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டை எனக்கு நல்லா தெரியும். நான் அங்க தான் இருந்தேன். ஆனால், எங்கிட்டையே அதை திரும்ப, திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இந்த விஷயத்தை அவங்ககிட்ட இருந்து பிரேக் பண்ணனும்னு நினைத்த நான், அவங்க எங்கிட்ட வந்தாலே ஆப் செய்து அனுப்பிவிட்டேன். 

    — Bigg Boss (@bb_biggboss) January 8, 2024

    தன்னோட செயல்களை மக்களிடம் எப்படி கொண்டு போய்ட்டு சேக்கறது என்பதில் அவங்க தெளிவாக இருப்பாங்க” எனக் கூறியுள்ளார். 
     

     

    Source link

  • Bigg Boss Season 7 Tamil Vichitra Salary Details Reveals

    Bigg Boss Season 7 Tamil Vichitra Salary Details Reveals

    Bigg Boss Vichitra: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி,  அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 

     
    பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய ஒரு வாரமே உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் இருந்தனர். இதில் நேற்று முன் தினம் பூர்ணிமா ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று, விசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தற்போது பிக்பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கெனவே பைனலுக்கு சென்றுள்ளார். 
     
    இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில்  தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்த விசித்ரா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. நாள் ஒன்றிற்கு விசித்ரா 40 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் வந்துள்ளது. அதன்படி பார்த்தால் 95 நாட்களில் அவரின் சம்பளம் கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்திற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் ஒருவராக விசித்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது. 

    Source link

  • Bigg Boss Season 7 Tamil Evicted Contestant Vichitra First Live Video Tamil Cinema News | Vichitra: “அங்க எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு”

    Bigg Boss Season 7 Tamil Evicted Contestant Vichitra First Live Video Tamil Cinema News | Vichitra: “அங்க எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு”

    Bigg Boss 7 Tamil Vichitra: ரசிகர்களிடம் லைவில் பேசிய நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பினாலேவில் பங்கேற்காததை நினைத்து வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

     

    விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 
     
    பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா இருந்தனர். அவர்களில் விசித்ரா நேற்று வெளியேறினார். விசித்ரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலுக்கு செல்வார் என்று நினைத்த நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அவரது ஃபேன்பேஸ்க்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
     
    இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த விசித்ரா சமூக வலைதளங்களில் லைவில் பேசியுள்ளார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விசித்ரா, “டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. டிக்கெட் டூ பினாலே டாஸ்குக்கு முன்னாடி ஸ்டோரி சொன்னாங்க. அதில் எனக்கு 3 சதவீத வாக்குகள் தான் இருந்தது. அதனால் எனக்கு 3 சதவீத மக்களின் ஆதரவு தான் இருந்ததா என்று தோன்றியது. ஆனாலும் சிலர் வைத்திருந்த நம்பிக்கையால் விளையாடினேன். 

     
    பைனல் ரவுண்டில் நான் வின் பண்ணவில்லை என்று சிலர் கவலையடைந்தனர். என்னை சிலர் வாழ்த்தி இருக்கிறார்கள், என்னை அதிகமாக பிடித்தவர்கள் குடும்பப் பெண்களும், குழந்தைகளுமாக தான் அதிகம் இருந்துள்ளனர். இந்த 3 சதவீத மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் நான் பெஸ்ட் ஆக இருக்கணும்னு நினைத்தேன். மீடியாவில் எனக்கு அதிகமான வரவேற்பு இல்லை. 
     
    இதனால் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் டாப் 5-ல் வரவேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது நான் ரொம்ப அப்செட் ஆகினேன். 100 சதவீதம் என்னால் மக்கள் நினைத்ததை செய்யவில்லை என்று வருந்தினேன். நிறைய பேர் நான் டென்ஷனாக இருந்ததற்கு வருத்தப்பட்டார்கள். அந்த நாள் அங்கே எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. அதிகமாக வெற்றி பெற்றது நான் தான். ஆனால் நான் எப்படி பினாலேவை விட்டேன் என்று நினைத்தால் இப்போது வரை வருத்தமாக உள்ளது” என பேசியுள்ளார். 
     

     

    ]]>

    Source link