Bhavatharini: பவதாரிணிக்கு எங்கள் வெற்றியை அர்ப்பணிப்போம்: புயலில் ஒரு தோணி படத்தின் இயக்குநர் ஈசன் உறுதி!
<p>மறைந்த பாடகர் பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இயக்குநர் ஈசன் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p> <h2><strong>பவதாரிணி</strong></h2> <p>பாடகர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து…
