Tag: BB Aishu

  • Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”

    Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”


    BB Aishu: என் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று நினைத்தேன் என இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷூவின் தந்தை கூறியுள்ளார்.
     
    கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐஷூ பங்கேற்றிருந்தார். அவர் மீது நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்ததால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஷூ, அப்செட்டாகி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்தார். 
     
    இந்த நிலையில் ஐஷூவின் தந்தை அஷ்ரப் தற்போது அளித்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் பங்கேற்றது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ”பிக்பாஸில் ஐஷூ பங்கேற்கக் கூடாது என்று நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். அவர் காலேஜில் படித்துக் கொண்டிருந்ததால் பிக்பாஸ் போன்ற ஒரு வாய்ப்பு சரிவராது என நினைத்து அதைத் தடுக்கவே பலமுறை பேசினேன். ஆனால், பிக்பாஸ் போட்டிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான், “ஏன் என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?” என்று ஐஷூ கேட்டதால், என்னால் ஓகே சொல்ல முடிந்தது. 
     
    ஐஷூ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு, என்னால் நம்ப முடியாத அளவுக்கு அலை அடித்தார்போல் அத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. ஏன் இப்படி செய்கிறார்கள், எதற்காக இந்த வசைகள் என்று புரியாமல் இருந்தது. பிக்பாஸ் என்பது ஒரு ஷோ. அந்த நிகழ்ச்சிக்கு தேவையான கன்டெண்ட் தான் அவர்கள் செய்தார். ஒரு நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்கும் ஒருவரை அவர்களின் கேரக்டரை டிசைட் செய்து வன்மத்தைக் காட்டுவது எப்படி சரின்னு தெரியவில்லை. 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சியால் நான் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது குடும்பமும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதுபோன்ற ஒரு தவறான வன்மத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆபாசமான, அசிங்கமான, தரம் தாழ்ந்த விமர்சனங்களை யார் மீதும் வைக்க வேண்டாம். யார் மீதாவது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தால், அவர்களின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். 
     
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐஷூ மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த மன்னிப்பையும் நான் வற்புறுத்தி தான் அவர் எழுதியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஐஷூவை நான் வற்புறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதே பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரச்னைகள் வரும் என்று நான் கூறியிருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்பு கேட்டதைக் கூட விமர்சிப்பது சரியில்லாதது. 
     
    பிக்பாஸ் வீட்டில் ஐஷூவை தவிர என பேவரைட் போட்டியாளர் யார் என்று பார்த்தால் விஷ்ணு தான். விஷ்ணுவுக்கு வாழ்த்து கூறியுள்ளேன்” என்றார். 
     
    பிரதீப் உடனான வாட்சப் உரையாடல் வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதீப்பின் பர்சனல் நம்பர் கிடைத்தது. அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்வார் என்ற தகவல் கிடைத்தது. அப்போது, நான் சோஷியல் மீடியா கமெண்ட்ஸால் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால், என் மகளை சேவ் செய்யும்படி பர்சனலாக பிரதீப்கிட்ட நான் கேட்டிருந்தேன். அதை சில காரணங்களுக்காக அவர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதுவும் எனக்கு வருத்தம் தந்தது.
    ஒரு அப்பாவாக என் மகளை காக்க ரொம்ப எதார்த்தமாக மனம் உருகி பிரதீப் கிட்ட கேட்ட உதவி அது. அதை ஏன் அவர் ஷேர் செய்தார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதன் பிறகு பிரதீப்பிடம் எதுவும் நான் கேட்கவில்லை. இப்போது கூட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு பழகிக் கொண்டிருக்கிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார். 
     

     
     
     

    மேலும் காண

    Source link