Tag: @arrest

• இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக் கொண்டு, இனிப்புகளை வழங்கி, ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு தொந்தரவு கொடுத்த கும்பல்:

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின்போது,  இஸ்லாமியர்களை ஒரு கும்பல் வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இஸ்லாமியர்கள் மூன்று பேர் வந்தனர். அப்போது, ஹோலி கொண்டாட்டடத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து, அவர்கள் மீது வலுக்கட்டாயமாக  வண்ணங்களை பூசி, தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவர் சென்றுக் கொண்டிருக்கும்போது, இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் மீது 10க்கும் மேற்பட்ட கும்பல் வலுக்கட்டாயமாக வண்ணங்களை பூசி, தண்ணீரை ஊற்றி அவர்களை தொந்தரவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கும்பல், அவ்வழியாக சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து, அவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்கள் பூசி, தண்ணீர் ஊற்றுகின்றனர். அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு பெண்களின் மீது அனுமதியின்றி, தண்ணீர் ஊற்றுகின்றனர்.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம்

அவர்கள், அந்த கும்பலிடம் வேண்டாம் என்று கூறியும் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தொந்தரவு செய்கின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் இருந்த ஆண் மீது வண்ணங்களை பூசி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷங்களை எழுப்புகின்றனர். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போதும், அவர்கள் மீது வண்ணங்களை தூவி, தண்ணீர் ஊற்றி  "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷங்களை எழுப்புவது போன்று வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் தாம்பூர் பகுதியைச் சேர்ந்த அனிருத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் மார்ச் 20 புதன்கிழமை நகரின் தாம்பூர் பகுதியில் நடந்ததுள்ளது. பைக்கில் வந்த நபர், தனது மனைவி மற்றும் தாயுடன்  மருந்து வாங்க சென்றபோது இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Source link

• 22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
கேலி செய்த பெண்:
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி முகர்ஜி நகரில் பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் முகர்ஜி பகுதியைச் சேர்ந்த அமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்:
இத்ந நிலையில்,  அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பைத்தியம் என்று கூறி கேலி செய்தததாகவும், இதனால், ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் நான்கு அல்லது ஐந்து முறை குத்தியுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த பெண், 22 வயதான இளைஞர் அமனை கேலி செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால், ஆத்திரத்தில் அருகில் இருந்து காய்கரி வியாபாரியன் கத்தியை எடுத்து பலமுறை குத்தியுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், அந்த இளைஞரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இதனை அடுத்து, காயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பகீர் வீடியோ:

#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March. The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
— ANI (@ANI) March 24, 2024

அந்த வீடியோவில், ஓடிச் செல்லும் பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்துகிறார்.  அந்த பெண் தடுக்க முயன்றும், தொடர்ந்து அந்த பெண்ணை கத்தியால் குத்துகிறார். மேலும், பெண்ணை கீழே தள்ளிவிட்டு, கத்தியால்  தாக்குகிறார். அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரை தடுத்து பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போதும், அந்த பெண்ணை குத்திவிட்டு தப்பிச் செல்வது போன்று வீடியோவில் உள்ளது.

மேலும் காண

Source link

• Aravind Kejriwal arrest and Stalin Rahul Gandhi lalu prasad Yadav aap party members condemn bjp

Aravind Kejriwal arrest and Stalin Rahul Gandhi lalu prasad Yadav aap party members condemn bjp

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை கைது :

மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு சுமார் 9.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் மார்ச் 21 ஆம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரிமனுத்தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இதையடுத்து கெஜ்ரிவால் இரவு கைது செய்யப்பட்டார்.  மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணியுடன் போட்டியிட உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் கைது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு நாட்டில் உள்ள தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

image credits: @ANI
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில் பயம் கொண்ட சர்வாதிகாரி இறந்த ஜனநாயகத்தை உருவாக்க .நினைக்கிறார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவது மட்டுமன்றி தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களையும் கைது செய்வது சாதாரண விசயமாகி விட்டது. இதற்கு இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில் ”தேர்தல் தோல்வியின் பயத்தின் காரணமாக, டெல்லி முதலமைச்சரை பாஜக அரசு கைது செய்துள்ளது. நீதிக்கு புறம்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் சகோதரருமான ஹேமந்த் கைது தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்திருப்பது மூலம் பாசிச பாஜக அரசு வெறுப்பின் ஆழத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ கைதோ எதிர்கொள்ளவில்லை.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது தொடர்கிறது.
இந்த கொடுங்கோன்மை ஆட்சியானது மக்களின் கோபத்தை மேலும் தூண்டுகிறது. பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. இவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை எரியூட்டுகிறது,  இந்திய கூட்டணியின் வெற்றி பயணத்தை பலப்படுத்துகிறது” என தெரிவித்தார்

பீகார் முன்னாள் முதலமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவிக்கயில்  “தோல்வி பயத்தால் இது போன்ற கைது நடவடிக்கையின் மூலம் மோடி அரசு ஜனநாயகத்தை குலைத்து வருகிறது. இது போன்ற செயல்கள் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி சந்தீப் பதக் தெரிவிக்கையில் ”பாஜகவுக்கு தைரியம் இருந்தால், தேர்தல் களத்தில் எங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏன் இப்படி போலி வழக்குகளை போட்டு கோழைகளாக தாக்குகிறீர்கள்?. புதிய அரசியலை கொண்டு வர விரும்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இது ஆம் ஆத்மியின் போராட்டம், இந்த நாட்டிற்கு நேர்மையான அரசியலைக் கொடுக்க விரும்பும் ஒவ்வொருவரின் போராட்டம் இது.”  வெள்ளி கிழமை காலை பாஜகவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
“முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதானது, ஜனநாயக அமைப்புக்கு எதிரானது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும் காண

Source link

• Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை

Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை

Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை:
உத்தர பிரதேச மாநிலம் புடவன் பகுதியில் பார்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார் சஜித் கான். இவரது கடைக்கு அருகே வினோத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன்  வசித்து வருகிறார். இவரது மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார்.
வினோத்குமார் குடும்பத்தினருக்கு, சஜித்கானுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று சஜித் கான், வினோத்திடம் ரூ.5,000 பணம் கேட்டிருக்கிறார். ஆனால், 5,000 ரூபாயை வினோத் தர மறுத்திருக்கிறார்.
இதனால், இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சஜித் கான், இரண்டாவது தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த வினோத்தின் இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்துள்ளார்.  வினோத் குமார் மனைவி வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த சஜித் கான், டீ போட்டு தருமாறு கேட்டு இருக்கிறார்.
குற்றவாளியை என்கவுன்டர் செய்த போலீஸ்:
டீ போடுவதற்கு சமையலறைக்கு வினோத்குமாரின் மனைவி சென்றபோது, வீட்டிற்கு வெளியே விளையாட்டிக் கொண்டிருந்த 11,7,9 வயதுடைய குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.  ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளை கொன்றுவிட்டு தப்ப முயன்ற சஜித் கானை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முன்றதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சஜித் கான் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இந்த இரட்டைக்  கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைக்கு தொடர்புடைய சஜித்  கானின் சகோதரரான ஜாவேத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் குற்றவாளியான சஜித்கானின் தாய் கூறுகையில், “தனது மகன் எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்று தெரியவில்லை.  இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.
எனது இரண்டு மகன்களுக்கு காலை உணவு சாப்பிட்டுவிட்டு காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினர். எனது நீண்ட காலமாக பார்பர் கடையை நடத்தி வந்தார். இவருக்கு யாருடனும் எந்த பகையும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நினைத்து நான் வருதுகிறேன்.   என் மகன் செய்த தவறுக்கு நிச்சயம் விளைவுகளை சந்திப்பார்” என்றார்.

மேலும் ப டிக்க
Crime: ஷாக்! முட்டை கறி சமைக்க மறுத்த காதலியை கொன்ற காதலன் – ஹரியானாவில் பயங்கரம்!

மேலும் காண

Source link

• Dalit Groom Assaulted For Riding Horse During Wedding Procession In Gujarat | Shocking Video: ”நீ எப்படி குதிரையில் ஏறலாம்” : பட்டியலின மாப்பிள்ளையை கொடூரமாக தாக்கிய கும்பல்

Dalit Groom Assaulted For Riding Horse During Wedding Procession In Gujarat | Shocking Video: ”நீ எப்படி குதிரையில் ஏறலாம்” : பட்டியலின மாப்பிள்ளையை கொடூரமாக தாக்கிய கும்பல்

Atrocities On Dalits: குஜராத்தில் குதிரையில் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
குதிரையில் சென்ற பட்டியலின இளைஞர்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது குஜராத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி, குதிரையில் சென்ற பட்டியலின சமுகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் நேற்று திருமண ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த திருமண ஊர்வலத்தில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டர். அப்போது, மணமகளின் வீட்டிற்கு செல்ல மணமகன் விகாஸ் சாவ்டாவை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்தனர்.

A #Dalit groom was assaulted for riding a horse in his wedding procession in a village in #Gujarat’s #Gandhinagar district. Police have rounded up four persons from upper caste Thakor community. pic.twitter.com/SQKyiQkLvt
— Hate Detector 🔍 (@HateDetectors) February 13, 2024

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குதிரையில் சென்றுக் கொண்டிருந்த மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை மறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இவருடன் 4 பேரும் இருந்துள்ளனர். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவாக பேசியிருக்கின்றனர்.
கொடூரமாக தாக்கிய 4 பேர்:
மேலும், அவரை தாக்கியும் உள்ளனர். குதிரையில் அமர்ந்திருந்த கீழே இறங்க சொல்லி  தாக்கி உள்ளனர்.  குதிரையில் இருந்து மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை கீழே தள்ளி அறைந்துள்ளனர். மேலும், “எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் செல்ல முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது” என்று கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.  சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண

Source link

• எமர்ஜென்சி கதவை ஓபன் செய்த முயன்ற பயணி..! போலீசில் ஒப்படைப்பு நடந்தது என்ன ?

எமர்ஜென்சி கதவை ஓபன் செய்த முயன்ற பயணி..! போலீசில் ஒப்படைப்பு நடந்தது என்ன ?

டெல்லி விமானத்தின் அவசர கால கதவை, பயணி ஒருவர் திறக்க முயன்றதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.  விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பயணி, போலீசில் ஒப்படைப்பு. இதனால் விமானம், ஒரு மணிநேரம் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதை அடுத்து விமானி, விமானத்தை ஓடு பாதையில், இயக்குவதற்கு தயாரானார். அந்த நேரத்தில் திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறந்தால்,ஒலிக்கக்கூடிய அலாரம், விமானத்துக்குள் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, அவசரகால கதவை திறந்தது யார்? என்று விசாரிக்க தொடங்கினர். இதை அடுத்து பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள், அவசர கால கதவு அருகே உள்ள, இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப் பயணி, நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி  விட்டேன். உடனே விமானத்துக்குள், அந்த அலாரம் ஒலித்து விட்டது. மேலும் நான் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.

ஆனாலும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பயணியை உடனடியாக விமானத்திலிருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை விமான நிலைய மேலாளருக்கு, தலைமை விமானி  அவசர தகவல் கொடுத்தார். இதை அடுத்து  விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.விமான நிலைய பாதுகாப்பு  அதிகாரிகள், விரைந்து வந்து, அந்தப் பயணியிடம் விசாரனை நடத்தினர்.அதோடு அந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.மேலும் அவருடைய விமான பயணமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார்  ஒரு மணிநேரம் தாமதமாக, இரவு   8 மணிக்கு, 158 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின்பு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை, சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் பயணியை விசாரித்த போது, அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய பெயர் சரோஸ் (27). சென்னையில் ஒரு வேலையில் சேர்வதற்காக, இண்டர்வியூக்கு, உத்தரபிரதேசத்தில் இருந்து, வரும்போது ரயிலில் வந்துள்ளார். இப்போது அவர் விமானத்தில் டெல்லிக்கு திரும்பி செல்கிறார் என்று தெரியவந்தது. மேலும் இந்தப் பயணிக்கு இது முதல் விமான பயணம் என்பதும் தெரிந்தது.இதை அடுத்து அந்தப் பயணி சென்னை விமான நிலைய போலீசாரிடம், தான் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூறினார். இந்த நிலையில் விமானநிலைய போலீசார், விமான நிறுவனம்  அளித்துள்ள புகாரின்பேரில், சி எஸ் ஆர் பதிவு   செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Source link

• Atrocities On Dalits Tribal Man Stripped Hung Upside Down And Thrashed In Madhya Pradesh |

Atrocities On Dalits Tribal Man Stripped Hung Upside Down And Thrashed In Madhya Pradesh |

Atrocities On Dalits: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரை நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
அதாவது, மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் டீக்கடையில் இருந்த பழங்குடியின இளைஞரிடன், ஒரு கும்பல் பணத்தை கேட்டுள்ளனர்.  பணம் தர மறுத்த இளைஞரை, அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி தாக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், பழங்குடியின இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து, தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர். பெல்ட், கட்டை மற்றும் செருப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக இளைஞரை அந்த கும்பல் தாக்கி இருப்பதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு:
இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “ஒரு கும்பல் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது.  கட்டை, பெல்ட் மற்றும் செருப்பால் அடித்தனர். நான் ஏன் தாக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் நான் நடத்தி வரும் டீக்கடைக்கு பணம் கேட்டார்கள்.
அவர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கொலை செய்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். அதனால் நான் யாரிடமும்  இதை பற்றி சொல்லவில்லை. இது சம்பந்தமான வீடியோ வைரலானபோது, நான் சகோதரரிடம் தெரிவித்தேன்”  என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
இதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் பட்டியலின மாப்பிள்ளை ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி தாக்கி இருக்கிறது ஒரு கும்பல். குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை விகாஸை தாக்கி கீழே தள்ளி அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
அந்த கும்பல், “குதிரையில் நீயெல்லாம் ஏறிச் செல்லக்கூடாது என்றும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் ஏறிச் செல்ல அனுமதி” என்று கூறியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.  சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

• Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

Actor Rashmika Mandanna Deepfake Creator Arrested In Delhi

Rashmika Mandanna Deep Fake Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் நடிகையான ராஷ்மிகா, ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்தார் ராஷ்மிகா. தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன்  மகளாக ‘குட் பை’ படத்திலும் ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார்.
டீப் ஃபேக் வீடியோ:
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.  ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
ராஷ்மிகா போல் சித்தரிக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், ராஷ்மிகாவும், ”இன்று இந்த அளவுக்கு தொழில்நுட்ப பயன்படுத்தப்படுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.
கைது:
இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வீடியோ வெளியிட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை அவரை உருவாக்கினாரா? பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 ஆண்டுகள் சிறை:
போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.  3 ஆண்டு சிறையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்

Source link

• //// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

//// | ‘காதலெனும் தேர்வெழுதி’ காதலிக்காக

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக அவரைப் போன்று உடையணிந்து தேர்வு எழுதச்சென்று பிடிப்பட்டுள்ளார்.
உண்மையாக காதலிப்பவர்கள் தனது காதலிக்காகவும், காதலனுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பலரும் கூறுவர். இருப்பினும், இந்த காலத்தில் அப்படி செய்வது அரிவது என்றும் பலரும் கூறுவார்கள். சில நேரங்களில் காதலுக்காகவும், காதலிப்பவர்களுக்காகவும் சில விபரீதமான செயல்களையும் சிலர் செய்வார்கள். ஆனால், அப்படி பேசுபவர்களை வாய் அடைக்க செய்தது ஒரு இளைஞரின் செயல்.
காதலிக்காக தேர்வு எழுதி சென்ற இளைஞர்:
பஞ்சாப் மாநிலம் கோட்காபூரா பகுதியைச் சேர்ந்தவர் பெண் பரம்ஜித் கௌர் (26). பட்டப்படிப்பை முடிந்த இவர், அரசு பணிகளுக்காக தேர்வு எழுதி வருகிறார்.  ஆனால், இவர் எழுதிய தேர்வில் எதிலும்  இவர் தேர்ச்சி பெற்றதில்லை.
இதுகுறித்து தனது காதலான அன்கிரீஸ் சிங்கிடமும் பலமுறை கூறி வருத்தப்பட்டு உள்ளார்.  இந்த மன வருத்தத்தை போக்க தான் உனக்கு பதிலாக நான் தேர்வு எழுதுகிறேன் என்று காதலன் அன்கிரீஸ் சிங் (31) கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள்  தேர்வுக்காக 2 மாதங்களாக தீவிரமாக படித்து வந்தார் அன்கிரீஸ் சிங்.
அன்கிரீஸ் சிங் தனக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிடுவான் என்ற தையரியத்தில் பெண் பரம்ஜித் கௌரும் இருந்து வந்துள்ளார்.
காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்:
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி டிஏவி பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்றது. அப்போது, சுடிதார், லிப்ஸ்டிக், ஒட்டுமுடி, பொட்டு, கண்மை என தன்னை ஒரு பெண் போலவே மாற்றிக் கொண்டு  தேர்வு மையத்துக்கு சென்றார் அன்கிரீஸ் சிங். மேலும், தனது நடை மற்றும் முக பாவனைகளை பெண் போலவே மாற்றிக் கொண்டார்.
அவரை பார்த்து யாருக்கும் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தன்னை ஒரு பெண் போல் காட்டினார். பின்னர், அனைவரையும் சோதனையிட்ட அதிகாரிகள் செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையில் புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்தன. தனது ஒரிஜினல் புகைப்படத்தில் இருந்த மீசையை போட்டோஷாப் கொண்டு மறைத்து தலை முடியையும் வளர்த்து வைத்திருந்தார்.
இதை பார்த்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பயோ மெட்ரிக் கருவி மூலம் அவரது விரலை அதில் வைக்க செய்தனர். அப்போது, அன்கிரீஸ் சிங்கின் பெண் போல வேடமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பரம்ஜித் கௌரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Crime: 2 பட்டியலின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! மீட்கப்பட்ட ஒருவரின் சடலம் – பீகாரில் என்ன நடந்தது?
Ayodhya Ram Temple: சடங்குகளுடன் தொடங்கியது அயோத்தி ராமர் கோயிலில் பூஜை! எந்தெந்த நாளில் என்னென்ன வழிபாடு?

Source link

• Bloodstains Clever Cab Driver How CEO Accused Of Son Murder Was Caught | Crime: நாட்டையே உலுக்கிய சி.இ.ஓ! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்

Bloodstains Clever Cab Driver How CEO Accused Of Son Murder Was Caught | Crime: நாட்டையே உலுக்கிய சி.இ.ஓ! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்

கர்நாடகாவில் பயங்கரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). இவர் தனது 4 வயது மகனுடன் கோவாவிற்கு ஜனவரி 6ஆம் தேதி வந்திருந்தார். வடக்கு கோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனுடன் தங்கி இருக்கிறார். கடந்த 6ஆம் தேதி கோவாவிற்கு வந்த சுசனா, இரண்டு நாட்களுக்கு பிறகு பெங்களூரு செல்ல தயாராக இருந்தார்.
இதனால், ஹோட்டல் ஊழியரை அழைத்து டாக்சி புக் செய்து தர வேண்டும் கேட்டிருக்கிறார். சாலை வழியாக சென்றால் பெங்களூருவுக்கு 12 மணி நேரம் ஆகும். இதனால், விமானத்தில் செல்லும்படி ஹோட்டல் ஊழியர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், அந்த பெண் டாக்கிசியில் தான் செல்வேன் என்று கூறினார்.
இதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் டாக்சி புக் செய்து அனுப்பினர். அவர் செல்லும்போது அவருடன் மகன் இல்லை.  பெண் சுசனா ஹோட்டலில் இருந்து வெளியேறியதும், அவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய ஹோட்டல் ஊழியர் சென்றிருக்கிறார்.  அப்போது, அங்கு ரத்தக்கறை படிந்திருந்தது. உடனே, ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 வயது மகனை கொன்ற தாய்:
இதனை அடுத்து, பெண் சுசனா சென்ற கார் ஓட்டுநரின் போன் நம்பரை  ஹோட்டல் ஊழியர்கள் வாங்கி அவரிடம் போலீசார் பேசினர்.  காரில் இருக்கும் பெண்ணிடம் குழந்தை பற்றி கேளுங்கள் என்று போலீசார் கூறினர். அந்த கார் ஓட்டுநர் கேட்க, உறவினர் விட்டில் குழந்தை இருப்பதாக பெண் சுசனா கூறினார்.
மேலும், குழந்தை இருக்கும் முகவரியும் கொடுத்திருக்கிறார். அங்கு சென்ற போலீசார் இந்த முகவரி போலியானது என்று தெரியவந்தது.  இதனை அடுத்து, மீண்டும் கார் ஓட்டுநருக்கு போன் செய்த போலீசார்,  பெண்ணிற்கு தெரியக்கூடாது என்பதற்காக கொங்கனி மொழியில் பேசினர்.
காரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு  செல்லுங்கள் என்று ஓட்டுநரின் கூறியிருக்கின்றனர். பெங்களூருவில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள சித்ரதுர்கா காவல் நிலையத்தில் கார் வந்தடைந்தது. இதனை அடுத்து, காரில் இருந்து பேக்கை போலீசார் சோதனை செய்தபோது, நான்கு வயது மகன் உடல் இருந்தது தெரியவந்தது.
சிக்கியது எப்படி?
இதனை அடுத்து, அந்த பெண் சுசனாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது, 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, பெண் சுசனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், உயிரிழந்த 4 வயது குழந்தையின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
2010ல் சுசனாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் இந்தோனேசியாவில் தற்போது இருக்கிறார். 2019ல் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்தார். அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவரக்கு கோர்ட் அனுமதி அளித்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசனா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையுடன் கோவாவிற்கு அழைத்து சென்றிருப்பதாக தெரிகிறது.  இருப்பினும்., எந்த காரணத்திற்கு கொலை செய்தார் என்று உறுதியான தகவல் வெளியாகவில்லை.
யார் இந்த சுசனா சேத்?
பெங்களூருவில் ஒரு ஏஐ நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இந்த ஏஐ நிறுவனம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு முன் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணியாற்றினார் சுசனா.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா இயற்பியல் மாஸ்டர் பட்டம் பெற்றவர். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசனா சேத் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" – பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!

Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" – பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்:

இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது கர்நாடக  மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் பட்டியலின இளைஞரும், ஒரு  இஸ்லாமிய பெண்ணும் கில்லா ஏரியில் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் சச்சின் லமானி (18), முஸ்கன் படேல் (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு இஸ்லாமிய ஆண்கள் 13 பேர் வந்து இவர்கள் இரண்டு பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "ஒரு இந்துவும் முஸ்லீமும் ஏன் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள்" என்று கேட்டு சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.

மேலும், இளைஞர் சச்சினை குழாய் கம்பி மூலம் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். பின்னர், இருவரின் மொபைல் போன்களை வாங்கி வைத்து, ஒரு அறைக்கு அழைத்து சென்று நேற்று மாலை வரை ஈவு இரக்கமின்றி அடித்துள்ளதாக தெரிகிறது.   இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஈவு இரக்கமின்றி தாக்கிய கும்பல்:

புகாரின் பேரில் 13 பேர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் சச்சின் கூறுகையில், "நாங்கள் ஏரிக்கரையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது அங்கு வந்த நபர்கள், ஒரு இந்துவும் முஸ்லீமும் ஏன் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள். அவர்கள் எங்கள் இருவரின் தொலைபேசிகளையும் எடுத்துக் கொண்டனர். என்னிடம்  இருந்த 7,000 ரூபாயையும் பறித்தனர்.  அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்றபோது இந்த பிரச்சனை ஏற்பட்டது.

நாங்கள் அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, ​​மதிய உணவு நேரம் என்பதால் ஒரு மணி நேரம் கழித்து அதிகாரிகள் எங்களை வரச் சொன்னார்கள். இதனால், நாங்கள் ஏரியில் அமர்ந்திருந்தோம். அந்த கும்பல், எங்களிடம் வந்தபோது மதுபோதையில் இருந்தனர்.

ஒரு கம்பியால் எங்களை பலமுறை தாக்கியுள்ளனர். பின்னர், ஒரு அறைக்கு அழைத்து சென்று மாலை வரை கொடூரமாக அடித்தனர்” என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

JACTO GEO Protest: பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திருடச்சென்ற இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் – வேலூரில் பரபரப்பு.. நடந்தது என்ன?

Source link