அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவதற்காக ப்ரோமோஷன் மூலமாக ஒருவரை கெட்டவனாக காட்டும் செயல் தேவையற்றது என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் எப்படியான ஒரு அனுபவம்

”வாழ்க்கையில் நாம் கற்பனை செய்ய முடியாது சூழ்நிலைகள் இந்த ஷோவில் நமக்கு கொடுக்கப்படும் அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதம் நமக்குள் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிகொண்டு வரும் . பொதுவாக நான் அழமாட்டேன். ஆனால் மிக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தபோது அதுவும் நடந்திருக்கிறது. வெளியே வந்த பிறகு தான் நான் பிக்பாஸ் விட்டில் சும்மா இல்லை, நானும் சில விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என்று புரிந்தது.”

ஒருவரை கெட்டவனாக காட்டுவது ப்ரோமோஷன் கிடையாது

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ப்ரோமோஷன்களால் வெற்றிபெற்றார் என்கிற குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார் ”பிக்பாஸில் ப்ரோமோஷன் வேலைகளை ஓரளவிற்கு எல்லாம் செய்தோம். நான் என்னுடைய நண்பர்களிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். வாக்குகளைப் பெறுவதற்காக ப்ரோமோட் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரே வீட்டிற்குள் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அதே வீட்டில் இருக்கும் நான் ஏதாவது சின்னதாக தவறு செய்துவிட்டால் ஒரு நபரை நல்லவராக காட்ட என்னை கொஞ்சம் கெட்டவனாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

எல்லாரும் மீடியாவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒருவரை கெட்டவனாக காட்டிதான் அதை செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நான் பார்த்த இன்னொரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் எலிமினேட் ஆகிவிட்டேன் என்று நிறைய தவறான செய்திகள் பரவின. இதனால் என்னுடைய வாக்குகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை உங்களுக்கான பி.ஆர். டீம் உடன் உள்ளே போய்விடுங்கள் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளர்களிடம் நான் இப்போதே அட்வைஸ் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நான் தான் எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேன்.”

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு

” நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட கேமராக்கள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதவு இருக்கும் . அங்கு இருந்த போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவர் ஏதாவது தவறாக செய்யப் போகிறார் என்று தெரிந்தால் உடனே ஆட்கள் வந்துவிடுவார்கள். பிரதீப் விஷயத்தைப் பொறுத்தவை ஒருவரை வெளியே அனுப்புவதற்காக எல்லாம் சேர்ந்து போட்ட திட்டமாக தான் நான் பார்க்கிறேன். கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை ஆனது.

திட்டமிட்ட சதி:

அதை பேசத்தான் நான் கமல்ஹாசனிடம் உரிமைகளை பேச வேண்டும் என்று பேச்செடுத்தேன். ஆனால் அந்த பிரச்சனை கூல் சுரேஷை விட்டு பிரதீப் நோக்கி சென்றது. அவ்வளவு பேர் பார்க்கக் கூடிய நேரத்தில் கமல்ஹாசன் முன் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, நான் கூட எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது தப்பாக நடந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன். இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தான் நான் நினைத்தேன்.

ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிந்தபோது தான் நான் வருத்தப்பட்டேன். பிரதீப் தனது மனதில் எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார், அவருக்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. தன மனதில் அவர் எதையும் வெளியே வைத்துக் கொள்ள மாட்டார். அது தான் ஏதோ ஒரு இடத்தில் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன் “ என்று விஷ்ணு கூறினார்.

Tag: Archana

Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி

Bigg Boss 7 Tamil Contestant Maya Krishnan Pens A Note To Title Winner Archana
பிக்பாஸ் சீசன் 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மொத்தம் 106 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, என்டர்டெயின்மெண்ட், சர்ச்சைகள் எனத் தொடர்ந்தது. கூடுதலாக வைல்டு கார்ட் ரவுண்டில் மேலும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
விமர்சனங்கள்
இறுதியா தினேஷ், மணி, மாயா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் ஃபைனலில் வந்து சேர்ந்தார்கள். இந்த ஐந்து நபர்களில் அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. கூடுதலாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார்.
கமல்ஹாசன் தோற்றுவிட்டதாகவும் அர்ச்சனாவை வெற்றியாளராக தேர்வு செய்தது ஒற்றைச் சார்புடைய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாயா கிருஷ்ணன் மாதிரியான தகுந்த போட்டியாளர்கள் இருந்தும், அவர்களை விடுத்து அர்ச்சனாவை தேர்வு செய்தது குறித்து அவர் விமர்சித்திருந்தார். பணம், மற்றும் ப்ரோமோஷன்களில் மூலமாக அர்ச்சனாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த மாயா கிருஷ்ணன்
இப்படியான நிலையில் அர்ச்சனாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. பிக்பாஸ் வீட்டில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி அர்ச்சனா தைரியமாகப் பேசியதே மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த ஆதரவுக்கு காரணம் என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், மாயா கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் அர்ச்சனாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Dear Archana, Congratulations on winning the title.Nee nenacha madhiri un vazhkai la poo pookum. Chedi vaadi pora mari irundha enna koopdu, naa vandhu thanni oothuren. Like I promised I’ll be there for you.#PooPookumNanba
— Maya S Krishnan (@maya_skrishnan) January 16, 2024தனது எக்ஸ் பக்கத்தில் மாயா கிருஷணன் ‘ டியர் அர்ச்சனா..டைட்டில் வின் பண்ணதுக்கு என்னோட வாழ்த்துகள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில பூ பூக்கும். செடி வாடிப்போற மாதிரி இருந்தா என்ன கூப்டு, நான் வந்து தண்ணி ஊத்தறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி நான் எப்போவும் உன்கூட இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில்,28ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.
தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும் கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
மாயா – விஷ்ணு இடையேயான பனிப்போர்
நேற்று முன் தினம் ஜன.14ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். மணி சந்திரா ரன்னர் அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சண்டை, சச்சரவுகள், காதல், கோபம், செண்டிமெண்ட் என பலவிதமான உணர்ச்சிகளையும் காண்பித்து லைக்ஸ் அள்ளியவர் விஷ்ணு. ஆனால் இவர் கிராண் ஃபினாலே நிகழ்ச்சியில் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஷ்ணு முதல் ஆளாக எவிக்டாகி வெளியேறினார்.
விஷ்ணு எவிக்டாகிய காகிதம் நிகழ்ச்சியில் அவரது பரம எதிரியாக வலம் வந்த மாயாவிடம் கிடைத்து அவர் அதனை அறிவித்தது விஷ்ணுவின் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போட்டியாளரான மாயா, இறுதிவரை பயணித்தது ஏற்கெனவே பலரது அதிருப்தியையும் சம்பாதித்திருந்தது. மாயா எவிக்டாகாதது குறித்து விஜய் தொலைக்காட்சி, அவரது சக நண்பர்கள், ஏன் கமல்ஹாசனே வாராவாரம் பிக்பாஸ் ரசிகர்களார் விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும் மாயா இறுதியில் இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்தார். இவற்றுக்கெல்லாம் மத்தியில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
குறையாத வன்மம்
வழக்கமாக நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் பரம எதிரிகளாக விளங்கிய போட்டியாளர்கள் கூட பேட்ச் அப் செய்து அதிர்ச்சி கொடுப்பது தான் வழக்கம், ஓவியா – ஜூலி – காயத்ரி ரகுராம், ஆரி – பாலா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இவற்றுக்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸூக்கு வெளியேயும் போட்டியாளர்கள் வன்மம் குறையாமல் வலம் வருவது ஏற்கெனவே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே முன்னாள் போட்டியாளர்களான ஜோவிகா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை இதனால் பெற்றனர். இந்நிலையில் அதன் உச்சமாக மாயா கிருஷ்ணன் விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கர்மா, ஃப்ரெண்ட ஏமாத்திட்ட..
விஷ்ணு மாயாவின் கையில் கிடைத்த சீட்டால் எவிக்டான நிலையில், “கர்மா அதன் வேலையை செய்துள்ளது. என் ஃப்ரெண்ட ஏமாத்திட்ட இல்ல?” என மாயா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் மாயா பகிர்ந்துள்ளார்.விஷ்ணு – பூர்ணிமா இடையே போலியான லவ் டிராக்கை கண்டெண்ட்டுக்காக மாயா பயன்படுத்தியது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி அனைவராலும் ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் குறிப்பிடும் வகையில் மாயா தற்போது பதிவிட்டுள்ளது, இணையத்தில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title
பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர்
பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலுக்காக போட்டி போட்டார்கள்.
இறுதியாக நேற்று ஜனவரி 14 ஆம் தேதி மொத்தம் ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய கிரண்ட் ஃபினாலேவில் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற சக போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன் , தினேஷ் , விஷ்ணு, மணிச்சந்திரா உள்ளிட்ட நால்வரை விட பலமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அர்ச்சனா வெற்றிபெற்றுள்ளார். மாயா கிருஷ்ணன் 23053 வாக்குகள் பெற்றிருக்க மணிச்சந்திரா 35184 வாக்குகள் பெற்றிருந்தார். மறுபக்கம் அர்ச்சனா 109468 வாக்குகளைப் பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா.
டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட பின் அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் ஒரு தரப்பினார் இந்த முடிவு சார்புடையதாக இருப்பதாகவும் மறுதரப்பு அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருப்பது சரியான முடிவு தான் என்று விவாதம் செய்து வருகிறார்கள்.
அதிருப்தி தெரிவித்த வனிதா விஜய்குமார்
ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் பெருகி வர மறுபக்கம் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் அர்ச்சனாவின் கையை உயர்த்தும்போது தான் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மாயா கிருஷ்ணன் இருந்தபோது அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது முற்றிலும் திட்டமிட்ட செயல் என்று அவர் கூறியுள்ளார்.
பணம் , ப்ரோமோஷன்களை பயன்படுத்தியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் , அந்த மேடையில் ஜனநாயகம் தோற்றும் பணநாயகம் ஜெயித்ததாகவும்வனிதா பேசியிருக்கிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தன்னிடம் வந்து பேசியதாகவும் அவர்களுக்கும் இந்த அதிருப்தி தெரிவித்ததாகவும் வனிதா தெரிவித்தார். தனது மகள் ஜோவிகா போட்டியாளராக இருந்ததால் தான் வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியாது என்று அவர் கூறினார்.
இன்ஸ்டாகிராம் , முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்களின் வழியாகவே அர்ச்சனா இந்த டைட்டிலை வென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
Bigg Boss 7 Tamil Title Winner Archana Overall Journey Struggles BBS7 | Bigg Boss 7 Tamil Title Winner; வைல்டு கார்டு எண்ட்ரி; ஒருமுறை கூட கேப்டன் இல்லை; டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரது மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்துதான். வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்து மக்களின் மனதை வென்று இந்த டைட்டிலை வென்றுள்ளார். இதுவரை நடந்த சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று டைட்டிலை வென்றவர் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான். இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஃபினாலேவுக்கு தகுதி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் டைட்டில் வென்றவர் இல்லை.
அர்ச்சனா கடந்து வந்த பாதை
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஒருவர் டைட்டிலை தட்டித்தூக்கியுள்ளார் என்றால் அவர் கடந்து வந்த பாதை குறித்து கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த சீசன் தொடங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 5 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் சென்றவர் அர்ச்சனா. இவர் வீட்டிற்குள் சென்றபோது இந்த சீசனின் மிகவும் டஃப் ப்ளேயர்கள் என்ற பார்வையை ஏற்படுத்தியிருந்தனர் பிரதீப் ஆண்டனி, மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்ட போட்டியாளர்கள். அர்ச்சனா வீட்டிற்குள் சென்றபோது அவருக்கு ரெட் கார்பெட் வரவேற்பெல்லாம் ஹவுஸ்மேட்ஸால் வழங்கப்படவில்லை. அர்ச்சனா வீட்டிற்குள் வந்தபோது கேப்டனாக இருந்தது பூர்ணிமா.
பூர்ணிமா பிக்பாஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை கேப்டனான முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நேரம் அது. ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்களை திட்டமிட்டு ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியது மட்டும் இல்லாமல் அவருக்கு நடைபெற்ற தாக்குதல்களில் பங்கு வகித்தார் பூர்ணிமா. பூர்ணிமாவின் பிக்பாஸ் கிராஃப் சரியத் தொடங்கியது இந்த இடத்தில்தான்.அட்டாக் செய்த கேங்
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அர்ச்சனாவுக்கு இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் திட்டமிட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அடைக்கப்பட்டதை சற்றும் எதிர்ப்பார்க்காத அர்ச்சனா மனவருத்தத்திற்கு ஆளானார். இதனால் அவர் மருத்துவரை அணுக வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனை மற்ற போட்டியாளர்கள் அர்ச்சனாவுடன் பிரச்னைகள் ஏற்படும்போது, “ ஏய் அழப்போகலயா? ஏய் டாக்டர்ட்ட போகலயா” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை அட்டாக் செய்து வந்தனர்.
முதல் வாரத்தில் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை அதிர்ச்சியுடனே கடந்த அர்ச்சனா, இரண்டாவது வாரத்தில் மாயாவின் கேப்டன்சியில் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானார். அந்த வாரத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பப்பட்டார். அப்போது பிரதீப்புக்கு அர்ச்சனா ரெட் கார்டு கொடுக்கவில்லை. இதுமட்டும் இல்லாமல் பிரதீப்புக்காக வீட்டில் ஆதரவுக் குரல் எழுப்பினார். இதனால் கேப்டனாக இருந்த மாயா, தனது கேப்டன் பொறுப்புக்கான அறத்துடன் நடந்துகொள்ளாமல் அர்ச்சனாவையும் பிரதீப் மற்றும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசிய விசித்ராவையும் அட்டாக் செய்தார்.
மாயாவுடன் பூர்ணிமா, ஐஷு, நிக்சன், ஜோவிகா மற்றும் அக்ஷயா ஆகியோர் அர்ச்சனாவிடம் சண்டைக்குப் பாய்ந்தார்கள். கேமராக்கள் இல்லை என்றால் அர்ச்சனாவை அடித்தே விடுவார்கள்போல என ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு நடந்துகொண்டார்கள். இதனைப் பார்க்கும்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அர்ச்சனாவுக்கு மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் செய்வது நியாயமே இல்லை என்ற கோணத்தை உண்டாக்கியது. அதேநேரத்தில் ஒரு வீட்டிற்குள் அனைவரும் இணைந்து வாழவேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு வேலை என பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெரும்பான்மையான இடங்களில் அர்ச்சனா ஒத்துப்போகவில்லை.ஓரளவுக்குத்தான் பொறுமை
இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அர்ச்சனாவை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களின் ஆதரவு அர்ச்சனாவுக்கு பெரும்பான்மையாக இருந்ததால் அவர் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்தார். மாயா, பூர்ணிமா ஆகியோரை வெளியில் இருந்த பிக்பாஸ் ரசிகர்களே ”புல்லி கேங்” என குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அர்ச்சனா செல்லக்கூடாது எனவும், சென்று வந்த பின்னர் அதில் இல்லாத பொருட்களுக்கு அர்ச்சனாதான் காரணம் கூறி தொடர்ந்து அட்டாக் செய்தனர் அந்த புல்லி கேங் என ரசிகர்களால் பெயரிடப்பட்ட போட்டியாளர்கள்.
தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வந்த அர்ச்சனா மூன்றாவது வாரத்தில் இருந்து ஏறி அடிக்க ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத புல்லி கேங் அர்ச்சனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அர்ச்சனாவிடம் நாம் சண்டையிட்டால் அது தங்களுக்குத்தான் பேக் ஃபையர் ஆகும் என புரிந்துகொண்டதால் அனைவரும் அமைதியாகிவிட்டனர். இதனை உணர்ந்த அர்ச்சனா தனது கேம் ப்ளானையே மாற்றிக்கொண்டார். அதுவரை பெண்களிடம் சண்டையிட்டு வந்த அர்ச்சனா அதன்பின்னர் விஷ்ணு, தினேஷ் மற்றும் நிக்சன் உள்ளிட்டோரிடம் சண்டைகட்ட ஆரம்பித்தார். இதில் விஷ்ணு அர்ச்சனாவை எதாவது சொல்லிக்கொண்டே இருந்தார், இதனால் அர்ச்சனாவுக்கும் விஷ்ணுவுக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக மாறவில்லை. அதாவது தொகுப்பாளர் கமல்ஹாசன் வரை வரவில்லை.டாஸ்க்குகளில் வெறித்தனம்
இவையெல்லாம் இப்படி இருந்தாலும், அர்ச்சனா தனக்கு பிக்பாஸ் தரப்பில் வழங்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடினார். அதிலும் டான்ஸ் மாரத்தானில் சிறப்பாக நடித்து மக்கள் மனதை வென்றது மட்டும் இல்லாமல் போட்டியாளர்களின் மனதையும் வென்றார். அதேநேரத்தில் பிக்பாஸ் கொடுத்த காலேஜ் டாஸ்க்கில், கடினமான போட்டியாளர்களான மாயா மற்றும் பூர்ணிமாவை அட்டாக் செய்தார். இதற்கு பதில் அட்டாக் செய்ய நிக்சன் களமிறங்க, நிக்சனை மாயாவும் பூர்ணிமாவும் தலையில் வைத்து கொண்டாடினர். தன்னை அட்டாக் செய்த நிக்சனை சராமாரியாக அட்டாக் செய்தார் அர்ச்சனா. அர்ச்சனா நிக்சனைத் தாக்க இருவரை பயன்படுத்தினார். அதாவது நிக்சன் – ஐஷூ காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஐஷூ வெளியறியதற்கு நிக்சன் தான் முக்கியக் காரணம் என கூறினார் அர்ச்சனா. இது இவர்களுக்கு இடையில் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதைப் போல சண்டை கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கொஞ்சகாலத்திற்கு நிக்சனை தாக்கு தாக்கு என தாக்கி வந்த அர்ச்சனா கொஞ்சம் அவருக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் தாக்க ஆரம்பித்தார். அர்ச்சனா காத்துக்கொண்டு இருந்தைப் போல் மீண்டும் அர்ச்சனாவிடம் சிக்கினார். குறிப்பாக வினுஷா குறித்து நிக்சன் கூறிய மோசமான விமர்சனத்தை குறிப்பிட்டு அட்டாக் செய்து தனக்கு ஆதரவை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது மட்டும் இல்லாமல், நிக்சன் மீதான நெகடிவ் ஷேடை அதிகமாக்கியது. இருவருக்கும் இடையில் சண்டை முற்றும்போது நிக்சன் “ சொருவீடுவேன்” என உடல்மொழியுடன் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை வீக் எண்டில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி பேசினார். இது மேலும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக முடிந்தது.சரவண விக்ரம், ஜோவிகா போன்ற போட்டியாளர்களை சிங்கிள் கேண்டில் டீல் செய்தார் அர்ச்சனா. சர்வண விக்ரம் போரிங் போட்டியாளர் என்பதை ரசிகர்களிடத்தில் நன்கு பதியவைக்க, அவரைப்போல் நடிக்க வேண்டும் எனக் கூறியபோது, ப்ரோ எப்படி ப்ரோ இப்படி இருக்கீங்க. உங்கள மாதிரி என்னால கொஞ்ச நேரம்கூட இருக்க முடியல. நீங்க எப்படிதான் எப்பவும் இப்படி இருக்கீங்களோ” எனக் கூறி சரவண விக்ரம் போரிங் போட்டியாளர் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதியவைத்தார். தன்னுடன் வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்த தினேஷ் மிகவும் சவாலான போட்டியாளர் என்பதை புரிந்துகொண்ட அர்ச்சனா. தினேஷை நேரடியாக கிடைக்கும் இடங்களில் அட்டாக் செய்தார். குறிப்பாக தினேஷுக்கும் விசித்ராவுக்கு அடிக்கடி சண்டைகள் வரும்போதெல்லாம் விசித்ராவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பி தினேஷ்க்கு டார்கெட் செய்தார்.
இந்த சீசனில் அர்ச்சனா கோப்பையை தட்டிக்கொண்டு செல்ல முக்கிய காரணம் இறுதி நாட்களில் அவரிடத்தில் வன்மம் இல்லை. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வன்மத்துடனே இருந்தனர். குறிப்பாக விஷ்ணு, தினேஷ் மற்றும் மணி வன்மத்தின் உச்சமாகவே காணப்பட்டனர். பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மாயாவும் அர்ச்சனாவுமே அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இடத்தில் இருந்தனர். இறுதி நாட்களில் அர்ச்சனா ஒருமுறை கூட யாரிடமும் வன்மத்துடன் காணப்படவில்லை. அவர் அதிகப்படியாக சொல்லிகொண்டு இருந்த விஷயமே நான் முடிந்தவரை இந்த வீட்டில் நல்ல நினைவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக அர்ச்சனா கூடுமானவரை தன்னை அர்பணித்தார். அர்ச்சனா கோப்பையை வெல்வார் என போட்டியாளர்களே பலமுறை கூறியுள்ளனர். மாயாவுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அவர் இறுதி நாட்களில் வீட்டிற்குள் வந்த எவிக்ட் ஆன போட்டியாளர்களின் பேச்சினைக் கேட்டு அர்ச்சனாவை அட்டாக் செய்தார். இது அவருக்கே பேக் ஃபையர் ஆகிவிட்டது.
தைரியத்துடனான யுக்தி
இந்த சீசனில் தொடக்கம் முதல் இறுதி வரை போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் நிறைந்து காணப்பட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் வன்மம் இல்லாமல் விளையாடி கோப்பையை வென்றுள்ளார் அர்ச்சனா. சீசன் முழுவதும் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களில் மணி சந்திராவுக்கும் இடம் உண்டு. ரசிகர்கள் அதனால்தான் வன்மம் இல்லாமல் விளையாடிய போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இந்த சீசனில்தான் இதுவரைக்கும் இல்லாததைப் போல் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸில் கலந்துகொண்டு, ஒருமுறை கூட கேப்டனாகாத அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார் என்றால் அவர் உணர்த்துவது ஒன்றுதான். எல்லாமே ஒரு அளவுக்குதான் ப்ரோ.. அதற்கு அப்பறம் இறங்கி அடிக்கனும்.. யுக்திகள் மட்டும் போதாது, சரிவில் இருந்து மீண்டு வரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைரியத்துடனான யுக்திதான் வெற்றியை பெற்றுத்தரும் என்பதை உரக்கச் சொல்கின்றார். பிக்பாஸ் சீசன் 7 தமிழ் டைட்டிலை வென்ற அர்ச்சனாவுக்கு ஏபிபி சார்பாக வாழ்த்துகள்.
Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral
எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, விசித்ரா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், சரவண விக்ரம், வினுஷா தேவி, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன்,அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அன்னலட்சுமி, தினேஷ், அர்ச்சனா, விஜே பிராவோ, கானா பாலா என 23 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதியாக அர்ச்சனா, மணி சந்திரா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இதில் மாயா 3ஆம் இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா குடும்பத்தினர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகளை அனுப்ப விருப்பமில்லை:
அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “உலகநாயகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என் மகள் அர்ச்சனாவை அனுப்புவதில் எனக்கு விருப்பமில்லை. வெளியில் வரும்போது உன் பெயரை கெடுத்துக் கொண்டு தான் வருவாய் என சொன்னேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு அர்ச்சனா இப்படியெல்லாம் பேசுவார், புரிதலோடு நடந்து கொள்வார் என பார்த்து வியந்தேன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாரம் தோறும் நீங்கள் (கமல்ஹாசன்) கொடுத்த அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது.
இங்கு அர்ச்சனாவை பாதுகாத்தது நீங்கள் மற்றும் பிக்பாஸ் குழு மட்டுமல்ல, சுற்றியுள்ள 67 கேமராக்களும் தான். உன்னுடைய மிகச்சிந்த பாதுகாப்பே அது தான். நீ பயப்படாமல் இருந்துட்டு வா என சொன்னேன். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி குழுமத்துக்கு நன்றி” என கூறினார்.
அதேசமயம் அர்ச்சனா டைட்டில் வென்ற பிறகு பேசிய அவரது அம்மா, “எனக்கு என் பொண்ணு ஜெயித்ததில் மிகவும் சந்தோசம் தான். அவளுக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் மனதளவில் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களைத்தான் சேரும்” என தெரிவித்தார்.
BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.

ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகவும், தற்போது டைட்டில் பரிசை வென்றுள்ளதாகவும் அர்ச்சனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இறுதிவரை கடுமையாக போட்டி போட்டு வந்த மணிசந்திரா இந்த சீசனில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்துள்ளார்.

Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller
கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம். மேலும் படிக்க
நேத்து “இந்தி தெரியாது போயா” இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் படிக்க
மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!
இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க
விஜயகாந்தை நினைத்து வடிவேலு வீட்டில் அழுதிருக்கலாம் – நடிகர் சரத்குமார் கருத்து
ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார். மேலும் படிக்க
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Title winner: பிக்பாஸ் சீசன் 7இல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர். சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.
டைட்டில் வின்னரான அர்ச்சனா?
இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கு என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை முதலே பிக்பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும். எனவே, இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சரித்திரத்தை மாற்றிய அர்ச்சனா:
அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ரன்னராக மணி தேர்வாகி உள்ளார். மேலும், மாயா மூன்றாவது இடத்திலும், தினேஷ், விஷ்ணு எலிமினேட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது.
தமிழ் பிக்பாஸில் இதுவரை வைல்டு கார்டு போட்டியாளராக வந்த யாரும் டைட்டிலை வென்றதே கிடையாது. இறுதி வந்த போட்டியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால், இந்த சீசனில் முதல் முறையாக வைல்டு கார்டு என்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரியளவில் ஆதரவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராக இருக்கிறார் அர்ச்சனா உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க
Pradeep Antony: “அவன் ரொம்ப நல்லவன்..” பிரதீப் பற்றி பேசிய விசித்ரா, நிக்சன்: கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி – ரவீனா!
Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்குமே உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை தமிழில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்களின் ஒன்றான ஏபிபி நாடு வலைதளம் சார்பில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அளித்துள்ள பதிலை இங்கே காணலாம்.

போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல் மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். இந்த நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிச்சந்திரா பிக்பாஸ் சீசன் செவன் டைட்டிலை வெல்ல 59.8% வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்த அர்ச்சனா அடுத்த இடத்தில் உள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்களில் பி.ஆர். டீம் தனக்கென தனியாக கொண்டுள்ள போட்டியாளர் எனக்கூறப்படும் அர்ச்சனாவுக்கான வெற்றி வாய்ப்பு 44.9 சதவீதம் உள்ளது என ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வெல்லப்போவது யார்? https://t.co/wupaoCzH82 | #BiggBossTamil #BiggBoss7Tamil #Maya #Vishnu #Archana #Mani #Dinesh

— ABP Nadu (@abpnadu) January 11, 2024

அதேபோல் டிக்கெட் டீ ஃபினாலேவில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற விஷ்ணு இந்த சீசனின் டைட்டிலை வெல்ல 41.7 சதவீதம் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை வென்றது மட்டும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனம் வென்ற தினேஷ் உள்ளார். இவர் டைட்டிலை வெல்ல 40.2 சதவீதம்தான் வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வெல்லப்போவது யார்? https://t.co/wupaoCzH82 | #BiggBossTamil #BiggBoss7Tamil #Maya #Vishnu #Archana #Mani #Dinesh

— ABP Nadu (@abpnadu) January 11, 2024

கடைசி இடத்தில் உள்ள போட்டியாளர் யார் என்றால் அது மாயா. இந்த சீசனில் வீட்டிற்குள் நுழைந்தது முதல் இப்போது வரை கேம் ப்ளானுடன் இருக்கின்றார். இவர் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல உள்ள வாய்ப்பு என்பது 13.5 சதவீதம் என ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

ரசிகர்களின் இப்போதைய கணிப்பு அடுத்த நாளிலேகூட முற்றிலுமாக மாறலாம். ஆனால் டைட்டில் உரிய நபருக்குச் செல்லவேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

Bigg Boss Season7 Tamil Vinusha Slams Poornima For Nixen Statement About Her
Bigg Boss 7 Tamil Vinusha: நிக்சன் தன்னை உருவக்கேலி செய்ததை ஜஸ்ட் ஜோக் என்ற பூர்ணிமாவை கேள்வியால் வெளுத்து வாங்கியுள்ளார் வினுஷா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் ஆகியோர் உள்ளனர்.
ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்த வினுஷா, தன்னை உருக்கேலி செய்த நிக்சனையும், அதை வைத்து கேம் பிளே ஸ்ட்ரேட்டஜி செய்த அர்ச்சனாவையும், நிக்சனை பேசியதை காமெடி என்ற பூர்ணிமாவை கேள்வி கேட்டு வறுத்தெடுத்துள்ளார்.
பூர்ணிமாவிடம் பேசிய வினுஷா, ” என் உடலமைப்பு குறித்து நிக்சன் பேசியதை ஜெஸ்ட் ஜோக் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஜோக் இல்லை” என்றார். அதற்கு பதிலளித்து சமாளிக்க முயன்ற பூர்ணிமா, “ எந்த இடத்தில் ஜோக் என்றேன்” எனக் கேட்டார். மேலும், அன்று மேக்கப் ரூமில் நிக்சன் விஷியத்தை மட்டுமில்லாமல் நிறைய விஷயங்களை பேசினோம். நான் ஏன் ஒருவரின் உருவக்கேலியை சப்போர்ட் செய்யப் போகிறேன்” என்று பதிலளிக்க முயன்றார். எனினும், பூர்ணிமாவின் பதிலை வினுஷா ஏற்கவில்லை.
முன்னதாக வினுஷாவிடம் பேசிய நிக்சன், தான் பேசியது வெளியே தவறாக பரப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். நிக்சனின் இந்தப் பேச்சால் மீண்டும் கடுப்பான வினுஷா, “வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்று கொள்வேன் “ என்றார்.
பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்ததில் இருந்து தொடர்ந்து சம்பவம் செய்து கொண்டிருக்கும் வினுஷா, அர்ச்சனாவிடம் பேசினார். அப்போது ”உங்களை பற்றி பேசினால் நிக்சனுக்கு கோபம் வரும் என்று பேசினேன்” என அர்ச்சனா கூறினார். அதைக் கேட்ட வினுஷா, “நான் தானே பாதிக்கப்பட்டது, நீங்க உங்க ஆதாயத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டீங்க” என்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் தன்னை கேலி செய்து அதில் ஆதாயம் பார்க்க முயன்ற ஒவ்வொருத்தரையும் டார்கெட் செய்து வினுஷா வெளுத்து வாங்கி வருகிறார்.

Bigg Boss Season 7 Tamil Vijay Varma Shares Archana Game Play Strategy
Bigg Boss 7 Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா திட்டமிட்டு விளையாடும் கேம் ஸ்ட்ரேட்டஜி பற்றி விஜய் வர்மா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். போட்டியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா ஆவார் என்று அவரது ஃபேன்பேஸ் டிரெண்டாக்கி வரும் நிலையில், அர்ச்சனாவின் கேம் பிளேன் ஸ்ட்ரேட்டஜி குறித்து விஜய் வர்மா புட்டு, புட்டு வைத்ததுடன், அர்ச்சனாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டாரிடம் எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் அர்ச்சனா குறித்து விஜய் வர்மா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ”அர்ச்சனா ஒரு சின்ன விஷயத்தை கூட நான் இதை செய்தேன், நான் இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நாம ஒரு நேரத்தில் ஒருமுறை தான் அந்த விஷயத்தை சொல்வோம். ஆனால், அவங்க 10 முறை அதே வார்த்தையை சொல்லி சொல்லி மத்தவங்ககிட்ட கொண்டு போய்ட்டு சேர்த்துடுவாங்க. நீ போனா உங்கிட்ட பேசுவாங்க, அவங்க போனா அவங்ககிட்ட பேசுவாங்க. யாருமே இல்லையென்றால் தனியா பேசுவாங்க.
இந்த விளையாட்டை பற்றி க்ளியரா தெரிஞ்சு வச்சி இருந்தாங்க. விஷ்ணுவுக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டை எனக்கு நல்லா தெரியும். நான் அங்க தான் இருந்தேன். ஆனால், எங்கிட்டையே அதை திரும்ப, திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இந்த விஷயத்தை அவங்ககிட்ட இருந்து பிரேக் பண்ணனும்னு நினைத்த நான், அவங்க எங்கிட்ட வந்தாலே ஆப் செய்து அனுப்பிவிட்டேன்.— Bigg Boss (@bb_biggboss) January 8, 2024
தன்னோட செயல்களை மக்களிடம் எப்படி கொண்டு போய்ட்டு சேக்கறது என்பதில் அவங்க தெளிவாக இருப்பாங்க” எனக் கூறியுள்ளார்.

Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7:
கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய சில நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டத்தில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் இருந்தனர்.
இதில் கடந்த வாரம் பூர்ணிமா ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று, விசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தற்போது பிக்பாஸ் வீட்டில் மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா உள்ளனர். இவர்களில் விஷ்ணு ஏற்கெனவே பைனலுக்கு சென்றுள்ளார்.
டாஸ்க்கில் இருந்து வெளியேறிய அர்ச்சனா:
இன்றைய தினத்துக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில், அர்ச்சனாவுக்கும் தினேஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, டாஸ்க்கில் இருந்து அர்ச்சனா வெளியேறி இருக்கிறார். இரண்டாவது ப்ரோமோவில், “தான் இப்படிப்பட்ட ஆளா என்ற ஃபீல்ங்தான் தான் தனக்கு இருக்கிறது” என்று கூறினார்.
பின்னர், தினேஷ் குறுக்கே பேசத் தொடங்க, “நான் பேசும்போது யாருமே குறுக்கே பேசக்கூடாது. அதைக் கேட்க முடியாது” என்று வம்படியாக கூறுகிறார். “மற்றவர்கள் பேசியதற்கான விமர்சனமாக உங்கள் பேச்சு இருக்கக் கூடாது” என்று தினேஷ் கூற, அர்ச்சனா “தான் டாஸ்கில் பங்கேற்க மாட்டேன்” என்று கூறியபடி ப்ரோமோ முடிகிறது. மற்றொருபுறம் அர்ச்சனா தன் நிலைபாட்டை எப்படி பலமுறை சொல்லி கேமராவில், ஆடியன்ஸூக்கு பதிவு செய்கிறார் என பாயிண்ட் பிடித்து பேசி விஜய் வர்மா ஸ்கோர் செய்துள்ளார். இதில் அர்ச்சனா கடும் அப்செட்டில் ஆழ்ந்துள்ளார்.இதைத் தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோவில், ”ஏமாற்றுகாரன், Fraud என இந்த மாறி வார்த்தகளை தான் பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த அர்த்தத்தில் தான் சொல்லுறாங்க. அவங்க பேசுற ஒவ்வொரு விஷயமும், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
நான் இவங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வைத்திருக்கிறேன்” என்று அர்ச்சனா கூற, “இன்னும் நான்கு நாள் தான், ஏன் இவங்களுக்கு இந்த வன்மம்? ஏன் இப்படி வன்மத்தை கொட்டுறாங்க. ஜாலி பண்ணலாம் என்று பார்த்தால் இப்படி பண்ணுறீங்களே பிக்பாஸ்” என்று மாயா கூறியபடி ப்ரோமோ முடிவடைகிறது.
கடந்த வார இறுதி எபிசோடில் கூட, கமல்ஹாசன் கூலாக நிகழ்ச்சியை நடத்தினார். வழக்கமாக, போட்டியாளர்களின் பஞ்சாயத்தை மிகவும் கடினமாக எதிர்கொண்டு வந்த கமல், நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் கூலாக செயல்பட்டார். மேலும், போட்டியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். ஒரு வாரம் தான் இருக்கிறது பகையை வளர்காமல் இருங்கள் என்றும் அட்வைஸ் கூறினார் கமல். கமல் சொல்லி முடித்த ஒரு நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.