<p>குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!</p>
Tag: Anushka Sharma

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!

Anushka Sharma and Virat Kohli son akaay name has a special meaning know the details | Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு ‘அகாய்’ (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர்.
விருஷ்கா ஜோடி
கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடி தான். 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தது தொடங்கி, டேட்டிங், காதல் என சில ஆண்டுகள் மீடியா வெளிச்சத்தைக் கவர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2017ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது அனுஷ்கா கருவுற்றதை மகிழ்ச்சியுடன் கோலி அறிவித்த நிலையில், இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தைக்கு பெற்றோராகினார். தங்கள் குழந்தைக்கு இந்து கடவுளான துர்காவின் பெயரான ‘வாமிகா’வை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டினர்.
இரண்டாவது குழந்தை
இந்நிலையில், தற்போது தங்கள் பெண் குழந்தைக்கு 3 வயது நிரம்பியுள்ள நிலையில், விராட் – அனுஷ்கா தம்பதி ஆண் குழந்தைக்கு சமீபத்தில் பெற்றோராகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்த விராட் – அனுஷ்கா ஜோடி, தாங்கள் கடந்த பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தைக்கு பெற்றோரானதாகவும், அகாய் எனும் வாமிகாவின் குட்டித் தம்பியை வரவேற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.
அகாய் என்றால் என்ன?
இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் மகனின் வித்தியாசமான இந்தப் பெயருக்கான அர்த்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி அகாய் என்பது துருக்கியில் இருந்து தோன்றிய இந்தி வார்த்தை என்றும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உடலை விட மேலானவன், அழிவில்லாதவன் என அர்த்தம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அகாய் என்றால் துருக்கியில் பிரகாசமான நிலா என்றும் பொருள்படுகிறது. இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் குழந்தைகள் பெயருக்கான அர்த்தம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் காண

Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட்
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மிகவும் மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்களின் அன்புடனும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆண் குழந்தைக்கு ஆகாய் என வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம்!
எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது நேரத்தை எங்களுக்காக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தனிப்பட்ட காரணங்களால் தன்னை அணியில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
விராட் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு விருப்ப விடுப்பு அளித்திருந்தது. இந்தநிலையில், விராட் கோலி விலகியதற்கான காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பிறகு, விராட் கோலி அம்மாவின் உடல்நிலை, விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை என பல்வேறு யூகங்கள் கிளம்பியது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, இன்று விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Virat Kohli and Anushka Sharma welcomed their second child akaay | Virat-Anushka Baby : ஜூனியர் விராட் வந்தாச்சு..இரண்டாம் குழந்தையை ஈன்றெடுத்த விராட்
கிரிக்கெட்Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட் – அனுஷ்கா..!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat Kohli Anushka Sharma Expecting Second Child AB De Villiers Revealed The Good News
டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடாததற்கான காரணம்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் தந்தையாகப் போகிறார். இந்த தகவலை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரின் நாயகன் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வில்லை அதேபோல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடத கோலி டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். முன்னதாக அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்தது. அவர் ஏன் விளையாடவில்லை என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனிடையே தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் அவர் விளையாடவில்லை என்றும் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதால் தான் போட்டிகளில் பங்குபெறவில்லை என்பது போல் பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருப்பு:
இந்நிலையில், விராட் கோலி – அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தையின் வருகைக்காக தான் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் உலா வந்தது. இச்சூழலில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார்.
AB De Villiers said, “Virat Kohli and Anushka Sharma are expecting their 2nd child, so Virat is spending time with his family”. (AB YT). pic.twitter.com/qurRKnFK1q
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) February 3, 2024டிவில்லியர்ஸ் தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, “விராட் கோலி இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம். மகிழ்ச்சியான விஷயம் தான். விராட் – அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான விஷயம். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இப்படியான நேரத்தை குடும்பத்துடன் செலவிடவில்லை என்றால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. விராட் கோலி அதை தான் செய்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலியும் டிவில்லியர்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அன்று முதல் தற்போது வரை இருவரும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக, விராட் கோலி அனுஷ்கா சர்மாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே வாமிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இச்சூழலில், இந்த தம்பதி இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: பாதியிலேயே கமெண்ட்ரி செய்வதை நிறுத்திச்சென்ற சுனில் கவாஸ்கர்! காரணம் என்ன?
மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே நாளில் 179 ரன்கள்…கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்!





