Anand Mahindra offers job to girl who saved infant niece from monkey using Alexa
உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடமிருந்து அலெக்ஸா மின்சாதன உதவியுடன் தப்பிய சிறுமிக்கு வேலை வழங்குவதாக தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அவாஸ் விகாஸ் காலனியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்தனர். சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் இருந்த சமையலறை அருகே நிகிதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது,. இதனை…
