Tag: Agriculture

• NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women

NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women

விவசாய மேம்பாட்டிற்காக,, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா ( NAMO DRONE DIDI YOJANA) திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி  ஷ்யாம்குமார், மற்றும் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் மூலமாக விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை  ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசுடன் இணைந்து “நமோ ட்ரோன் திதி யோசனா” திட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 1000பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார். அதில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக சுமார் 446 ட்ரோன்கள் வழங்கப்பட  இருக்கிறது. அது மட்டுமல்லாது சுமார் 500 நபர்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது என்றார். மேலும், தற்போது வழங்க இருக்கும் இந்த பயிற்சி மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் ட்ரோன்களை வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்த அவர், தற்போது, கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முதற்கட்டமாக அவர்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார். இந்த பயிற்சிக்கு அவர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது  அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,எந்தவித கட்டணமும் கிடையாது,முற்றிலும் இலவசம் என குறிபிட்டார்.
இந்த வாய்ப்பின் மூலம் பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக பார்க்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.  அதுமட்டுமின்றி, நமோ ட்ரோன் திதி யோஜனா போன்ற முன்முயற்சிகள் மூலம், கிராமப்புற சமூகங்களில்  பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதில் கருடா ஏரோஸ்பேஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்..
தற்போது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, மேரி, லட்சுமி தேவி, ஜோதி மற்றும் சுனிதா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.  கருடா ஏரோஸ்பேஸ் மூலமாக பயிற்சி பெற்று வரும் மேரி என்பவர் கூறுகையில், எங்களுக்கு தயக்கமாக இருந்தாலும், ட்ரோனை கையாளுவது, தொழில்நுட்பத்தை எளிதாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது போன்று பயிற்சி வழங்கப்பட்டது என்றார். தற்போது தைரியமாக நாங்களும் தொழில்நுட்பத்தை கையாள்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரிவித்தார். கருடா ஏரோஸ்பேஸின் நமோ ட்ரோன் திதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ்  கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  வானிலிருந்து  வயல்களுக்கு கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும்  500 பெண்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.446 ட்ரோன்கள் இன்றுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• Karur Agriculture College students protest Parents seeking permanent settlement – TNN | 3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி

Karur Agriculture College students protest Parents seeking permanent settlement – TNN | 3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே அம்மா திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக பணிகள் கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அம்மா மண்டபத்தில் குறைந்த கட்டணத்தில் தங்களுடைய இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் யோசனையில் தொடங்கப்பட்ட அம்மா மண்டபம் தொடங்கப்பட்டது.

பணிகள் நிறைவு பெற்ற நிலையில் திறப்பு விழாக்காக காத்திருக்கப்பட்டபோது திடீரென தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் வேளாண்மை கல்லூரி இடம் பெற்றிருந்த நிலையில் திடீரென சட்டப்பேரவையில் வேளாண்மை கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இடம் தேர்வு நடைபெற காலதாமதம் ஆனநிலையில் 2021-2022 கல்வியாண்டு தொடங்க தற்காலிகமாக கரூர் உழவர் சந்தை அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் வேளாண்மை கல்லூரி பாடத்திட்டங்களை பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே பேராண்மை கல்லூரிக்கு தேவையான வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் தேவை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட பின் மூன்றாம் ஆண்டு அனைத்து மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்க்கப்பட்டு அங்கு கல்வி பயின்று வருகின்றன. அதே நிலையில் பின் தொடர்ந்து வந்த கல்வி ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரியில் போதிய வசதி இல்லை என கூறி கல்லூரியின் முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் விரைவாக உங்கள் அனைவரையும் திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். கல்லூரியில் முதல்வர் கூறியதை அடுத்து மாணவ, மாணவிகள் சிரமங்களை பொருட்படுத்தாமல் கல்வி பயின்று வந்துள்ளனர். இதே நிலை நீடித்த நிலையில் தற்போது கல்வி ஆண்டு பயிலும் இரண்டாம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளும் ஒன்று கூடி தங்களது பெற்றோர்களை கல்லூரி நிர்வாகத்திடம் வந்து கேட்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் பிற மாவட்டத்தில் இருந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று வேளாண்மை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோருடன் உழவர் சந்தை அருகே உள்ள கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உச்சி வெயிலில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் பின்னர் அங்கு கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜா மற்றும் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

அதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மண்டல தலைவர்கள் பேச்சுக்கிணங்க மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்  சாலை மறியலை கைவிட்டு கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து தங்களது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தகவல் அறிந்து வேளாண்மை கல்லூரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வருகை புரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பிரச்சனைகளை குறித்து கேட்டறிந்தனர். அதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மேலாண்மை கல்லூரி முதல்வரையும் வரவழைத்து அங்குள்ள குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். பின்னர் வருவாய் அலுவலர் மாணவ, மாணவிகள் இடையே தங்களது பிரச்சனைகளை ஒவ்வொன்றாக மனுவாக எழுதிக் கொடுங்கள் எனவும் தங்கள் பிரச்சனைகள் ஒரு மாதத்திற்கு காலத்திற்குள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறினார். அதை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய வருவாய் அலுவலர் கடந்த மாதம் கூட இந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அவருடன் நானும் லோன் மேலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கி சிறப்பித்துள்ளோம்.

அப்பொழுது கூட மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை கூறியிருக்கலாம் தற்போது சாலை மறியல் செய்யும் அளவிற்கு செல்லாமல் யோசித்து இருக்கலாம் என பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதை தொடர்ந்து மண்டல தலைவர்களும் மற்ற அரசு அதிகாரிகளும் புறப்பட்டனர். இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் பொருத்தம் படுத்தாமல் சாலைகளில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு மண்டல தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து கூல்டிரிங்ஸ் மற்றும் குடிநீர் வாங்கி கொடுத்து அனைவரையும் சமாதானப்படுத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் காண

Source link

• Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

பொதுவாக பட்ஜெட் என்றால் எவ்வளவு செலவாகும், எதற்கு எவ்வளவு செலவு செய்யப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எதற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பதும் அதில் சொல்லப்படும்.

ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், நிதியை பயன்படுத்த அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.

விவசாய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

தீவிர காலநிலை மாற்றங்களாலும், பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தாலும், பணவீக்கத்தாலும் விவசாயத்துறை பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அதுமட்டும் இன்றி, தேர்தல் ஆண்டு என்பதால் விவசாயத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கு என 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 நிதியாண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2013-14 ஆண்டில், 27,662.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள், வரி நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் தொடரும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கடன்:

அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அரசின் விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் 2023 வரை, விவசாயக் கடன் இலக்கான 20 லட்சம் கோடி ரூபாயில் 82 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

மானியம்:

அரசு வழங்கும் மானியங்களில் பெரும்பகுதி உணவு மற்றும் உரத்துக்கும் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை பாதிக்காத வகையில் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களை குறிவைத்து மானியம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, ​​உணவு மானியத் திட்டம் ‘வீட்டு நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு 2011-12’ல் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

Source link