நடிகனாக வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்றும் தனது தந்தையை மனதில் வைத்து எடுத்த படம்தான் ஸ்டார் என்று இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

ஸ்டார் பட இயக்குநர் இளன்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இயக்குநர் இளன் தனது சினிமா பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் இளனின் அப்பா

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்கு அப்பாவாக நடித்தவர்தான் இயக்குநர் இளனின் தந்தை . இவரது பெயர் பாண்டியன். ராமராஜ் நடித்த தேடிவந்த ராசா படத்தில் கவுண்டமனிக்கு லஞ்சம் கொடுக்கவரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். தான் சினிமாவில் ஆர்வம் காட்ட தனது தந்தை தான் தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார் என்று இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.

அப்பாதான் சினிமாவில் ஆர்வம் வர காரணம்

"பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசை . சினிமாவில் வாய்ப்பு கிடை க்காத காரணத்தினால் ஃபோட்டோகிராஃபராக இருந்தார். அவ்வப்போது சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு காட்சியில் ஆயிரம் பேரில் ஒருவராக ஒரு ஓரமாக நின்றாலும் அதைப் பற்றி ரொம்ப ஆர்வமாக என்னிடம் வந்து சொல்வார். அதை எல்லாம் கேட்டு தான் எனக்கு சினிமாவின் மேல் ஆர்வம் வந்தது.

நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே குறும்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டேன். அதில் என் அப்பாவை நடிக்க வைத்தேன். அதற்கு பிறகு என் அப்பா நடித்த குறும்படம் ஒன்று தேசிய விருது வென்றது. அதைப் பார்த்த அட்லீ அவரை ராஜா ராணி படத்தில் நடிக்க அழைத்தார். அந்த படம் என் அப்பாவுக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்தது. என் அப்பா ஃபோட்டோகிராபராக இருந்தபோது வாழ்க்கையில் ஒருமுறையாவது நிலாவுக்குச் சென்று ஃபோடடோ எடுத்துவிட வேண்டும் என்று ஒருமுறை விளையாட்டாக சொன்னார்.

அதை கேட்ட எனக்கு எப்படியாவது நிலாவுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதனால் தான் ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங்க் எடுத்தேன் . கல்லூரி சேர்ந்தப்பின் தான் தெரிந்தது நான் படிப்பதற்கும் நிலாவுக்கு சம்பந்தம் இல்லை என்று. என் அப்பா எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் நான் இயக்குநராக மாற பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. ஸ்டார் படம் நான் என் அப்பாவை மனதில் வைத்து எடுத்தது தான்." என்று அவர் கூறினார்.

முதல் படம் டிராப்

"நான் கல்லூரி படிக்கும் போதே முதல் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் . ஃபாக்ஸ் ஸ்டார் தமிழில் தொடங்கிய போது இரண்டு படங்களை அறிவித்தார்கள். ஒன்று ராஜா ராணி மற்றொன்று என்னுடைய கதை . நான் இயக்கியிருந்த 40 நிமிடம் குறும்படம் ஒன்றை பார்த்து என்னை தேர்வு செய்தார்கள். ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப் பட்டது. இந்த படம் கைவிடப் பட்டதும் நான் ஒரு த்ரில்லர் கதை எழுதி அதை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமாக சென்று கதை சொல்லத் தொடங்கினேன்.
த்ரில்லர் கதை என்றதும் எல்லா தயாரிப்பளர்களும் மறுத்துவிட்டார்கள்.

அந்த ஒருவருடம் முழுவதும் நான் எல்லா கதை சொன்ன எல்லா தயாரிப்பாளர்களும் கதையை நிராகரித்துவிட்டார்கள். சரி அவர்கள் கேட்கும் கதையை எழுதலாம் என்று முடிவு செய்து அடுத்த பத்து நாட்களில் ஒரு ஃபேண்டஸி காதல் கதையை எழுதிவந்தேன். ஒரு முதல்பட இயக்குநருக்கு ஃபேண்டஸி படத்திற்கான பட்ஜட் கொடுக்க மாட்டார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை . இந்த கதை யை கேட்ட எல்லா முன்னணி நடிகைகளும் தங்களுக்கு கதை பிடித்து நடிக்கவும் சம்மதித்தார்கள். ஆனால் இந்தப் படத்திற்கான பட்ஜட்டை யாரும் என்னை நம்பி தர முன்வரவில்லை .

இதற்கு பிறகு கிரகணம் என்கிற ஒரு கதையை எழுதி அந்த படம் படப்பிடிப்பும் முடிந்தது ஆனால் படம் வெளியாகவில்லை . இந்த கிரகணம் படத்தின் டிரைலரை பார்த்த யுவன் ஷங்கர் ராஜா தான் தயாரிக்க இருந்த முதல் படத்திற்கான கதையை என்னிடம் கேட்டார். அப்போதுதான் பியார் பிரெமா காதல் தொடங்கியது." என்று இளன் கூறினார்.

Tag: Actor Kavin
Star Director Elan: அப்பாவுக்காக பண்ணப்பட்ட “ஸ்டார்” படம்.. இயக்குநர் இளனின் தந்தை இந்த நடிகரா?

cinema headlines today march 17th actor kavin rajinikhanth kaduvetty movie actor vishal

Karthi – Mari Selvaraj: மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி! ஷூட்டிங் எப்போது? வெளியான செம்ம தகவல்!பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம் இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 2025ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, பிரதாப சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா பாடல்களுக்கும், கார்த்திக் ராஜா பின்னணி இசையும் இப்படத்துக்கு அமைத்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. மேலும் படிக்க
Actor Vishal: கனவு நனவாகிறது.. மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த விஷால் – என்ன நடந்தது?“ஹீரோவாக என்னுடைய பயணம் 25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும் படிக்க
Kaaduvetty: எட்டுத்திக்கும் வெற்றி.. காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் எவ்வளவு?தமிழ் சினிமாவில் அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவருக்கு வடமாவட்டங்களில் தனிப்பட்ட செல்வாக்கு என்பது உண்டு. இன்றைக்கும் குருவை தங்கள் வீட்டு தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.மேலும் படிக்க
Actor Kavin: கவினுடன் இணையும் பிரபு.. வெளியான சூப்பர் அப்டேட்.. எந்த படம் தெரியுமா?விஜய் டிவியில் ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. மேலும் படிக்க
மேலும் காண
Vijay spoke to Ajith on the phone actor kavin responded to the rumours cinema headlines | Cinema Headlines: அஜித்திடம் போனில் பேசிய விஜய்! வதந்திக்கு பதிலடி தந்த நடிகர் கவின்

Vishal – Hari: “ரத்னம் என் 17ஆவது படம்: விஷாலின் நடிப்பு பேசப்படும்” – இயக்குநர் ஹரி நம்பிக்கை!
ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய, இயக்குநர் ஹரி பேசுகையில் “இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம், தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆறாவது படம். ‘சிங்கம்’ உள்ளிட்ட எனது முந்தைய படங்களுக்கு எவ்வாறு அருமையாக பாடல்களை வழங்கினாரோ அதைவிட சிறந்த பாடல்களை ‘ரத்னம்’ படத்திற்கு வழங்கியுள்ளார். ஆறு பாடல்களும் மிகவும் அருமையாக வந்துள்ளன.
விஷாலுடன் இணைந்து ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ உள்ளிட்ட படங்கள் ஆக்ஷன் நிறைந்தவை என்றாலும் அவற்றில் குடும்ப செண்டிமெண்ட் போன்ற இதர விஷயங்களும் இருந்தன. ‘சிங்கம்’, ‘சாமி’ போன்ற ஆக்ஷன் ததும்பும் திரைப்படமாக’ ரத்னம்’ இருக்கும். இப்படத்திற்காக விஷால் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு பேசப்படும். அனைவருக்கும் நன்றி” என்றார். மேலும் படிக்க
Kavin: லேட்டா வந்தேனா.. கல்லூரி விழாவில் தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி தந்த நடிகர் கவின்!
சின்னத்திரை சீரியல்களில் தொடங்கி பிக்பாஸ் வழியாக ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகர் கவின். பல தடைக்கற்கள், விமர்சனங்கள் தாண்டி படிப்படியாக நடிப்புப் பயணத்தில் வளர்ந்து, இன்று தனக்கென ஒரு தனி இடத்தை அடைந்திருக்கும் கவினுக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
குறிப்பாக சென்ற ஆண்டு வெளியான டாடா திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்த நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் அவரது வெற்றிகரமான திரைப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துள்ளனர்.மேலும் படிக்க
Kaathu Karuppu Kalai: விஜய்க்கு போட்டி.. ஹீரோவாகும் காத்து கருப்பு கலை.. கலாய்த்த வெங்கட் பிரபு!
காத்து கருப்பு கலையரசன் ரத்தபூமி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதன் படப்பூஜை நேற்று நடைபெற்றது. பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வெளியான வீடியோவில், அப்படத்தின் இயக்குநர் பேசும்போது, ‘தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி இவர் தான். ஆக்ஷன் ஹீரோவாக வரக்கூடிய எல்லா தகுதியும் இவரிடம் உள்ளது. இந்த படத்துக்கு ரத்தபூமி என ஏன் டைட்டில் வைத்துள்ளேன். என்ன காரணம் என கேட்டால், தமிழ் சினிமாவில் தளபதி என்ற இடம் காலியாக உள்ளது. இவர் தான் அடுத்த தளபதி” என கூறினார். மேலும் படிக்க
Mansoor Ali Khan : நானும் இளைஞன்தான்.. நான் மந்திரி ஆகக்கூடாதா? கேள்விகளை அள்ளி வீசிய மன்சூர் அலிகான்
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநராக கலக்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான். அந்த வகையில் மக்களை சந்தித்து தன்னுடைய பிரச்சாரத்தை வேலூரில் துவங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடாலடியாக பதிலளித்து அனைவரையும் கதிகலங்க செய்துவிட்டார். மேலும் படிக்க
AK – Vijay: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித் : ஃபோனில் என்ன பேசினார் விஜய்?
நடிகர் அஜித் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் உடல் நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்கமேலும் காண